என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 வீடுகளில் கொள்ளையடித்த   5 பேர் கைது
    X

    4 வீடுகளில் கொள்ளையடித்த 5 பேர் கைது

    • தனிப்படை அமைக்கப்பட்டு, ெகாள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • மாவீரன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பத்தலபள்ளி, பிருந்தாவன் நகர், பஸ்தி மற்றும் பேரிகையில் பட்டப்பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டிய வீடுகளில் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்கள் கொள்ளை போன சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மொத்தம் 4 வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இதுதொடர்பாக ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, ெகாள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில், கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 4 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு இதில் தொடர்புடைய, ஓசூர் அருகே புக்க சாகரத்தை சேர்ந்த மாதேஷ், பால்ராஜ், சின்ன தின்னூரை சேர்ந்த விஜயகுமார், உத்தன பள்ளி லோகேஷ் மற்றும் தருமபுரி மாவட்டம், ஏ.கொல்லப்பள்ளியை சேர்ந்த மாவீரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட கொள்ளை கும்பலிடம் இருந்து சுமார் 21 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் செல்போன்கள் மீட்கப்பட்டன.

    கைதான அவர்கள் 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×