என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதலமடைந்து காணப்படும் தார் சாலையால் பொதுமக்கள் அவதி
    X

    குண்டும் குழியுமாக உள்ள சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதை படத்தில் படத்தில் காணலாம்.

    சிதலமடைந்து காணப்படும் தார் சாலையால் பொதுமக்கள் அவதி

    • கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது.
    • இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம் நாச்சிக்குப்பம் ஊராட்சி உட்பட்ட கத்திரிப்பள்ளி கிராமத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் நெடுசாலை கிராமம் வரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார் சாலை அமைக்கப்பட்டது.

    இந்த 3 கிலோ மீட்டர் சாலையில் கத்திரிப்பள்ளி, புரம், விருப்பசந்திரம், நெடுசாலை பாட்டூர், கலைஞர் நகர் ஆகிய கிராமங்கள் உள்ளது.

    மேலும் இந்த சாலை அமைக்கப்பட்ட சில வருடங்களிலேயே சாலை முழுவதும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறி உள்ள நிலையில்பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்த நிலையில் சாலை உரிய பராமரிப்பு இல்லாத தால் நாளடைவில் சாலை முழுவதுமே பெயர்ந்து குண்டும் குழியுமாக சேரும் சகதியும் ஜல்லிக்கற்களுடன் சாலை காட்சியளிக்கிறது.

    இதனால் கடந்த 15 ஆண்டுகளாக தினமும் ஒரு வாகன ஓட்டியாவது சாலையில் கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருவதே தொடர்கதையாகி வருகிறது. மேலும் மழைக்காலங்களில் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

    மேலும் இந்த சேற்றில் பல வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வதால் பொதுமக்கள் முதல் வாகன ஓட்டிகள் வரை கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் பலர் ஜல்லிக்கற்களில் தவறி விழுந்து படுகாயம் அடைந்து உள்ளனர்.

    மேலும் கத்திரிப் பள்ளியில் இருந்து நெடுசாலை கிராமத்திற்கு இந்த 3 கிலோ மீட்டர் சாலையை கடக்க 30-45 நிமிடங்கள் ஆகிறது.

    மேலும் இந்த சாலை பராமரிப்பு குறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள் ெதரி வித்தனர்.

    மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடிவதில்லை. விபத்து நேர்ந்தாலும், முதியவர்கள், நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை சாலையில் அழைத்து செல்ல மிகவும் அச்சப்படு வதாக இப்பகுதி கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    பல ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலையில் மழை காலங்களில் சேரும் சகதியுமாக உள்ளதால் கிராம மக்கள் தினமும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாகனம் ஓட்டி சென்று வருகின்றனர்.

    இந்த சாலையை உடனடியாக சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்ைக எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×