என் மலர்tooltip icon

    கரூர்

    • குளித்தலையில் கேட்பாரற்று நின்ற காரில் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது
    • கொலையா? தற்கொலையா? என்று பிணத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    குளித்தலை,

    திருச்சி கோணக்கரை பகுதி சாலையில் 4 நாட்களாக ஒரு கார் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் காருக்குள் பார்த்தபோது, காருக்குள் ஆண் ஒருவர் படுத்து இருந்தார். ஏ.சி. ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசியது.இதனால் அச்சம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில் உறையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காரின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது, காருக்குள் இருந்தவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்ததில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை முதலைப்பட்டி விதைப்பண்ணை ரோட்டை சேர்ந்த ஆடலரசு (வயது 38) என்பதும் இவர் மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணையில், அவர் தனது மனைவி லட்சுமி பிரியா, 2 வயது மகளை தஞ்சை திருப்பந்துருத்தி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 31-ந்தேதி காலை 7 மணிக்கு குளித்தலைக்கு புறப்பட்டுள்ளார். அதன் பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகம் அடைந்த அவருடைய மனைவி குளித்தலை போலீசில் தனது கணவரை காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.அவர் காரை ஓட்டி வந்தபோது உடல்நலக்குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு பள்ளிக்கு ‘புகையிலை இல்லா கல்வி நிறுவனம்’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது
    • சான்றிதழை சுகாதார ஆய்வாளர் வழங்கினார்

    கரூர்,

    புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்ப டுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு புகையிலை பொருட்களால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை விளக்கி அவற்றை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களும் "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை பெற அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஆய்வு செய்து சான்று கரூர் கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்யப்பட்டு, "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" 'என்ற பதாகைகள் வைக்கப்பட்டன. புகையிலை தடுப்பு சட்டத்தை விளக்கி பள்ளி வளாகத்தில் புகைப்பிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு, மீறி பயன்படுத்தினால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.fileimaஇந்த நடவடிக்கையின் படி, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு "புகையிலை இல்லா கல்வி நிறுவனம்" என்ற சான்றிதழை சுகாதார ஆய்வாளர் கோகுல் ராஜ், தலைமை ஆசிரியர் சாகுல் அமீதுவிடம் பள்ளிக்கு நேரில் வந்து வழங்கினார்.

    • டூவீலர் மீது சரக்கு வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியானார்
    • சிந்தாமணிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர், 

    குளித்தலை அடுத்த, நெய்தலுார், கோட் டைமேடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 25). விவசாய கூலி தொழிலாளி. இவர், தனக்கு சொந்த மான, டூவீலரில், வீரப்பூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொசூர்-வீரப்பூர் நெடுஞ்சாலை, குள்ளரங் கன்பட்டி அருகே, எதிரே அதிவேகமாக வந்த, சரக்கு வாகனம், டூவீலர் மீது மோதியது. இதில், கோவிந்தராஜிக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்தாமணிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பழங்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது
    • போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் பாதிப்பு

    வேலாயுதம்பாளையம், 

    திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி(25). லாரி டிரைவர். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பல்வேறு பழ வகைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு சேலம் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.கரூர் மாவட்டம் தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராமல் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததில் லாரி ஒரு பக்கமாக கீழே விழுந்து சாய்ந்து விபத்துக்குள்ளனது.லாரிக்குள் பெட்டியில் அடுக்கி வைத்திருந்த அனைத்து பழங்களும் கீழே கொட்டி சிதறியது.இதனால் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர்பகுதியில் இருந்து கரூர், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக அணிவகுத்து நின்றன. இந்த விபத்தால் சுமார் 40 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்த வேலாயும்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

    • மூலிமங்கலம் பகுதியில் தீப்பிடித்து எரிந்து தென்னை மரங்கள் நாசமானது
    • காய்ந்த செடி, கொடிகளில் தீப்பிடித்ததால் தென்னை மரங்கள் நாசம்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் மூலமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (50).விவசாயி. இவரது தோட்டம் அருகாமையில் உள்ளது. அதில் தென்னை மரங்களை பயிர் செய்துள்ளார். இந்நிலையில் தென்னை மரங்கள் உள்ள பகுதியில் ஏராளமான செடி கொடிகள் முளைத்து காய்ந்த நிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று திடீரென காய்ந்திருந்த செடி கொடிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து. தென்ன மரங்களிலும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.அதை பார்த்த ராமமூர்த்தி அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார்.இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகில் உள்ள தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர்.இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

    • இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற மூதாட்டியிடம் தாலி செயின் பறிப்பு
    • செயின் பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் புகளூர் மேத்யூநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (67). இவர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி லலிதா (60). கணவன், மனைவி இருவரும் ஸ்கூட்டரில் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலை புகளூர் அருகே மூலிமங்கலம் பிரிவு அருகே உள்ள புனித அந்தோணியார் ஆலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது இவர்களுக்கு பின்னால் பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் கிருஷ்ணவேணி அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை அறுத்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி கிருஷ்ணசாமியும், லலிதாவும் தேசிய நெடுஞ்சாலையின் தார் சாலையில் விழுந்தனர். அப்போது மர்ம நபர்கள் தங்க தாலிக்கொடியை பிடித்து இழுத்தனர். அப்போது லலிதா தாலிக்கொடியை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டார். தாலி செயின் அறுந்து ஒன்றரை பவுன் தாலி செயின் மர்ம நபர் கையில் சிக்கியது. அந்த நேரத்தில் சாலையில் வாகனங்களில் வருபவர்களை பார்த்து கையில் கிடைத்த ஒன்றை பவுன் தாலி கொடியுடன் இரண்டு மர்மநபர்களும் மோட்டார் பைக்கில் தப்பி சென்று விட்டனர். இது குறித்து லலிதா வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து லலிதாவின் தாலிக்கொடியை அறுத்துக் கொண்டு தப்பி ஓடிய 2 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளபுனித அந்தோணியர் தேவாலயம் அருகே 2 வாகனங்களில் வந்த மாமியார் மருமகள் ஆகிய 2 பெண்களிடமும் 4 ½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இதேபோல் இரண்டு மரமநபர்கள் மோட்டார் பைக்கில் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

    • அமராவதி அணை நீர்மட்டம் வெளியிடப்பட்டது
    • 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

    கரூர்

    90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 63.32 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 375 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆற்றுக்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் தற்போது 1,936 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தையல் எந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
    • 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

    கரூர்

    கரூர் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் 16.8.2023 அன்று 40 வயதிற்குள் உள்ள ஆதரவற்ற விதவை, விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட தையல் எந்திரம் விலையில்லாமல் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் வருமான சான்று, இருப்பிட சான்று, 6 மாதம் தையல் பயிற்சிக்கான சான்று, கல்வி சான்று, பிறப்பு சான்று, சாதி சான்று, விதவை அல்லது கணவரால் கைவிடப்பட்டவர் அல்லது ஆதரவற்ற விதவை அல்லது வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவற்றுடன் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கரூர் என்ற முகவரிக்கு வருகிற 16-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை

    கரூர்

    கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், பவுத்திரம் ஊராட்சி முத்து சோளி பாளையத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் தரணிகா ஸ்ரீ (வயது 13). இவர் பவுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் தரணிகா ஸ்ரீ வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாதததை அறிந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தரணிகாஸ்ரீ எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது விற்ற மூதாட்டி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்

     கரூர்

    குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியில் மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற குளித்தலை போலீசார் தனது வீட்டின் அருகே மது விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வீரமலை (வயது 57) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    புதுப்பாளையம் எம்.ஜி.ஆர். சிலை அருகே மது விற்ற புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஞ்சலை (64), அவரது மகன் இளங்கோவன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அஞ்சலையை கைது செய்தனர். அவரிடமிருந்து 331 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை தேடி வருகின்றனர்.

    • மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ எரிந்து வருகிறது
    • 4-வது நாளாக தீ எரிந்து வருகிறது

    கரூர்

    கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி அருகே கரூர் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் கடந்த 31-ந்தேதி மாலை 5.30 மணி அளவில் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. கரூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தீயை முழுவதுமாக அணைக்க முடியவில்லை. 4-வது நாளாக நேற்றும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறி வருகின்றனர்.

    • விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக புகளூர் காகித நிறுவனம் சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது
    • அமைச்சர் உதயநிதியிடம் கொடுக்கப்பட்டது

    வேலாயுதம்பாளையம், 

    விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஊரக பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகள், மாற்றுத்திற னாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் பங்கேற்பாளர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்குவதற்காகவும் தமிழ்நாடு அரசின் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் கீழ் விளையாட்டு போட்டிகளை மேம்படுத்துவதற்காக ரூ 75 லட்சத்திற்கான காசோலையை தமிழக முதலமை ச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். நிகழ்ச்சியில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முனைவர் சாய்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையக் குழு உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×