என் மலர்
கரூர்
- பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்
- திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் விலை சரிந்தது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம், நொய்யல் மரவா பாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.650- க்கும், சம்பங்கி கிலோ ரூ.180- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.550- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது . நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும்,முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் விற்பனையானது. திருமணம் மற்றும் கோவில் விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது . இதனால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டு உள்ளது
- ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமேகலை, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சுரேஷ் தீர்மானங்களை வாசித்தார். இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கூட்டம் இறுதியில் ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் பேசுகையில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் அரசு திட்டங்களை மக்களிடையே எடுத்துச் சென்று பயனடையும் வகையில் பணியாற்றி வரும், மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகியோர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கூட்டத்தில் ஒருமனதாக, அந்த கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், சாந்தா ஷீலா விஜயகுமார், சந்திரமோகன், சங்கீதா முருகேசன், சத்தியா, கௌரி, ராஜேஸ்வரி, அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.
- அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
கரூர்:
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது.
இதனிடையே கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.
- குளித்தலையில் விஷம் சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
- காதல் தோல்வியா? என்பது குறித்து போலீஸ் விசாரணை
குளித்தலை,
குளித்தலை அருகே எலி மருந்து சாப்பிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கரூர் குளித்தலை அருகே உள்ள பாப்பக்காபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் தமிழ்மணி (வயது 20). இவர் குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வார காலமாக தலைவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் குளித்தலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி உள்ளார். இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி தமிழ்மணி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இதையறிந்த தமிழ்மணியின் பெற்றோர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரின் உடலில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விசாரித்தபோது தமிழ்மணி எலி மருந்து சாப்பிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தமிழ்மணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்மணி எதற்காக எலி மருந்து சாப்பிட்டார் காதல் தோல்வியா அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு கரூர் தபால் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை நடைபெற்று வருகிறது
- கடந்த ஆண்டு கரூர் அஞ்சலகங்கள் மூலம் சுமார் 19 ஆயி ரம் கொடிகள் மக்களுக்கு விநியோகிக்கபட்டது என்று தகவல்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தேசி யக்கொடியை வாங்கி கொள்ளலாம் என்று கரூர் அஞ்சல்கோட்ட கண் காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கரூர் அஞ்சல் கோட்ட கண் காணிப்பாளர் ராஜ்குமார் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:இந்திய சுதந்திர தினத் தை முன்னிட்டு பாரத பிரதமர் அறிவித்த இல்லந் தோறும் மூவர்ண கொடியேற்றும் திட்டம், கடந்த ஆண்டு முதல் செயல் படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு கரூர் அஞ்சலகங்கள் மூலம் சுமார் 19 ஆயி ரம் கொடிகள் மக்களுக்கு விநியோகிக்கபட்டதுஇந்த ஆண்டும் கரூர் கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து தபால் அலுவலகங்களிலும் தேசியக் கொடி ரூ.25 விலையில் விற்பனை செய்யப் படுகிறது. தேசியக் கொடியினை www.epostoffice. gov.in என்ற இணைய தளம் மூலமாகவும் முன் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.அவற்றை வரும் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இல்லங்களில் ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிட வேண்டும். இவ்வாறு ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
- 2 காரில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் அவரது சகோதரர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்ட விரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று 3 நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சங்கர் உள்ளிட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி இருந்தனர். இந்த ஆவணங்களை அவரிடம் காண்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பிற்பகல் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
2 காரில் வந்த 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில் அவரது சகோதரர் வீட்டில் மீண்டும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கரூர் மாவட்டத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
- பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ள போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாண வர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று எஸ்.பி. சுந்தரவதனம் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:முதல்வர் ஸ்டாலின் வரும் 11-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கவுள்ளார். அதே நேரத்தில் கரூர் மாவட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில் போதையில்லா சமூகத்தை உருவாக்குவோம்' என்ற போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதேபோல பேரணி, கருத்தரங்கம்,துண்டு பிரசுரங்கள் விநியோகம், சமூக வலைதள தகவல்கள், விளம்பர பதாகைகள் அமைப்பது விழிப்புணர்வுஇவற்றில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளும் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று எஸ்.பி.சுந்தரவதனம் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
- குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற கரூர் மாவட்டததை சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது
- மாவட்ட நூலகத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் விழா நடைபெற்றது
கரூர்,
டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித்தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்தது. இப்பயிற்சிவகுப்புகளில் பங்கேற்ற மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளனர்.கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராகும் அருண் குமார், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வரித்தண்ட லராகும் லாவண்யா, வேளாண்மைத்துறையில் இளநிலை உதவியாளர்களாகும் வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், போக்குவரத்து துறையில் இள நிலை உதவியாளராகும் தீபன், கைத்தறி துறையில் இளநிலை உதவியாளரா கும் இளவரசன், வருவாய்த்துறையில் விஏஒவாகும் விக்னேஷ், ஆகியோர் பணி ஏற்க உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் பிரபுசங்கர் நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தினார்.மாவட்ட திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் உடனிருந்தனர்.
- குளித்தலை அருகே பைக்கில் இருந்து விழுந்த பஞ்சாயத்து ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்
- விபத்து குறித்து வழக்கு பதிந்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
கரூர்,
குளித்தலையை அடுத்த, சித்தலவாய் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 50). இவர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி முருகன், (23). சம்பவத்தன்று மதியம் இருசக்கர வாகனத்தில் டவுன் பஞ்சாயத்து ஊழியர் திருப் பதியை பின்னால் அமர்த்தி கொண்டு, பழைய ஜெயகொண்டம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லும் போது, பிச்சம்பட்டி கோவளம் ரோடு தனியார் காஸ் குடோன் அருகே நாய் குறுக்கே வந்து பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் திருப்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு முசிறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குளித்தலை அருகே சரக்கு வாகனம் மோதி மூதாட்டி படுகாயம்
- மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி
கரூர்,
குளித்தலை அடுத்த, தோகை பஞ்சாயத்து, வெள்ளப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 62). இவர் கடந்த, 5ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, தோகைமலை - திருச்சி நெடுஞ்சாலையில், தனது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த, 'பொலிரோ பிக்கப்' வேன், செல்லம்மாள் மீது மோதியதில் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். தோகை மலை போலீசார், சரக்கு வாகன டிரைவர், தோகைமலையை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
- கரூரில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது
- நூறுநாள் வேலை வாய்ப்பு கூலியை உயர்த்தி தர கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
கரூர்,
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க, கரூர் மாவட்ட குழு கூட்டம், மாவட்ட தலைவர் பாலன், தலைமையில் தான்தோன்றிமலை அலுவலகத்தில் நடந்தது.அதில், வரும், 15ல் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று, 100 நாள் வேலை திட்டம் தொடர்பாக, கோரிக்கைகள் வைப்பது, 100 நாள் வேலை திட்டத்துக்கு, மத்திய அரசு அறிவித்துள்ள தினசரி ஊதியம், 294 ரூபாயை வழங்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் முன், கோரிக்கைகளை முன் வைத்து, விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்பட, பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட செயலாளர் தங்கவேல், பொருளாளர் ராஜேந்திரன், இ.கம்யூ., கட்சி மாவட்ட துணை செயலாளர் மோகன் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
- கரூர் மாவட்டத்தில் குட்கா விற்ற 10 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
- புகையிலை உள்ளிட்ட குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
கரூர்,
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் குட்கா விற்பனை செய்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில மாதங்களாக குட்கா பொருட்கள் விற்பனை குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கரூர் மாநகரம், வெங்க மேடு,பசுபதிபாளையம், அரவக்குறிச்சி, வெள்ளியணை, சின்னதாராபுரம், சிந்தாமணிப்பட்டி, மாயனூர், பாலவிடுதி ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.அப்போது, பெட்டிக்கடை, மளிகைகடை, டீக்கடைகளில் மறைத்து வைத்து குட்கா விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர் மீது போலீ சார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 800 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட் டவர்கள் அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.






