செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்

கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறையின் சோதனையில் ஈடுபட்டனர்.அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.
செந்தில் பாலாஜியின் சகோதரர் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன்
Published on

கரூர்:

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று 3-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தினர். காலை 8 மணியளவில் தொடங்கப்பட்ட விசாரணையில் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டது.

இதனிடையே கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் 2 காரில் வந்த 8-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்கு பிறகு அசோக்குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு வீட்டின் முன்பு சம்மனை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.

ஏற்கனவே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராக 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com