என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பைக்கில் இருந்து விழுந்த பஞ்சாயத்து ஊழியர் படுகாயம்
    X

    பைக்கில் இருந்து விழுந்த பஞ்சாயத்து ஊழியர் படுகாயம்

    • குளித்தலை அருகே பைக்கில் இருந்து விழுந்த பஞ்சாயத்து ஊழியர் படுகாயம் அடைந்துள்ளார்
    • விபத்து குறித்து வழக்கு பதிந்து மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கரூர்,

    குளித்தலையை அடுத்த, சித்தலவாய் கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 50). இவர், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் தொழிலாளி முருகன், (23). சம்பவத்தன்று மதியம் இருசக்கர வாகனத்தில் டவுன் பஞ்சாயத்து ஊழியர் திருப் பதியை பின்னால் அமர்த்தி கொண்டு, பழைய ஜெயகொண்டம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்லும் போது, பிச்சம்பட்டி கோவளம் ரோடு தனியார் காஸ் குடோன் அருகே நாய் குறுக்கே வந்து பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் திருப்பதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு முசிறி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து, மாயனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×