என் மலர்
கன்னியாகுமரி
- மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.
- மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்த்தாண்டம் :
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தரை பகுதியில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புற நோயாளிகளாக பலரும் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் மருத்துவரின் வேண்டுகோளை ஏற்று தன்னார்வலர்கள் மூலமாக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இது போன்ற காரியங்களை செய்து வருவதை மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.
- தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை
- குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை
நாகர்கோவில் :
நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்ப தாவது:-
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சிறப்பாய்வு மேற்கொள்ள சென்னை முதன்ைம செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள நிதி நிறுவனங்கள், மருந்து கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஸ்கேன் சென்டர் மற்றும் பரிசோதனை நிலையங்கள், கால் சென்டர் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்தபட்ச ஊதியத்துக்கும் குறைவான ஊதியம் வழங்கினால் குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை
- போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
அருமனை :
குழித்துறை-ஆலஞ் சோலை சாலை நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமானதாகும். இந்த சாலை ஆலஞ்சோலை முதல் அருமனை மேலத் தெரு வரை, புண்ணியம் முதல் கழுவன்திட்டை வரை உள்ள சாலை சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஆனால் மேலத்தெரு முதல் புண்ணியம் சந்திப்பு வரை சாலை சீரமைக்கப்பட்டு சுமார் 13 ஆண்டுகள் ஆகின்றது.
இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்து மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். மேலும் சாலையின் இருபுற மும் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சாலை குறுகி கொண்டே வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அருமனை மைய பகுதியில் அனைத்து அரசு அலுவல கங்கள், வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்கள், கன ரக வாகனங்கள் (குவாரி) மற்றும் தனியார் வாகனங்கள் வந்து செல்லக்கூடிய பகுதியில் தற்போது சாலை குண்டும் குழிகளாக சேதமாகி உள்ளது.
எனவே இச்சாலையை உடனே சீர்செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டி.ஒய்.எப்.ஐ.) அருமனை வட்டா ரக்குழு சார்பாக நெடுஞ் சாலைதுறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்துவதாகும் கூறியுள்ளனர்.
- 17 நிரந்தர உண்டியல்களும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்ட னர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அக்டோபர் மாதத்துக்கான அன்னதான உண்டியல் நேற்று மாலை திறந்து எண்ணப்பட்டது.
நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பொரு ளாளர் கண்ணதாசன், கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்ட னர்.
இதில் காணிக்கையாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 444 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டு உள்ள 17 நிரந்தர உண்டியல்களும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மழைக்கு மேலும் 8 வீடுகள் இடிந்தது
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. களியல், புத்தன் அணை, சிற்றாறு-2, திற்பரப்பு பகுதிகளில் மழை பெய்தது. சிற்றாறு 2-ல் அதிகபட்சமாக 22.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகள் நிரம்பி வருவதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகி றார்கள். பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.11 அடி யாக உள்ளது. அணைக்கு 341 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 173 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.73 அடியாக உள்ளது. அணைக்கு 376 கன அடிதண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 350 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது.
சிற்றாறு 1- அணை நீர்மட்டம் 15.28 அடியாகவும், சிற்றாறு 2- அணை நீர்மட்டம் 15.38 அடியாகவும் பொய்கை அணை நீர்மட்டம் 8.60 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை யாறு நீர்மட்டம் முழு கொள்ளவான 54.12 அடியாக உள்ளது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையும் முழு கொள்ளளவான 25 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. மாவட்டம் முழு வதும் கடந்த 2 மாதமாக கொட்டி தீர்த்த மழைக்கு 150- க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந் துள்ளன.
இந்த நிலையில் நேற்று மேலும் 8 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அகஸ்தீஸ்வ ரம் தாலுகாவில் 2 வீடு களும், கிள்ளியூர், தோவா ளை தாலுகாவில் தலா ஒரு வீடும், திருவட்டார் தாலுகா வில் 4 வீடுகளும் இடிந்து விழுந்து உள்ளன.
- ஒரு வார காலத்திற்குள் பணியை முடிக்க திட்டம்
- ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் பழமை வாய்ந்த விளை யாட்டு அரங்கங்களில் அண்ணா விளையாட்டு அரங்கமும் ஒன்றாகும். 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த விளையாட்டு அரங்கத்தை பராமரிக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 8 கேலரிகள் உள்ளன. மாவட்ட அள விலான கைப்பந்து போட்டி, கபடி போட்டி மற்றும் மின்னொளி விளை யாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் வாக்கிங் செல்வதற்கும் இந்த மைதானத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
ராணுவத்தில் சேர விரும்பும் ஏராளமான இளைஞர்கள், மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு வந்து ஓட்ட பயிற்சி உள்ளிட்ட பயிற்சி களை மேற்கொண்டு வருகி றார்கள். இந்த மைதானத்தில் உள்ள கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் உள்ளது. இதை பராமரிக்க வேண்டும் என்பது அனை வரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை யடுத்து இந்த மைதானத்தை சீரமைக்க ஏற்கனவே விளையாட்டு துறை சார்பில் ரூ.38 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கேலரிகள் பராமரிக் கப்பட்டது.
மேலும் இங்குள்ள அறைகள் உட்பட அனைத்தையும் பராமரிக்க ரூ.1கோடியே 40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் 50 ஆண்டு கால பழமை வாய்ந்த இந்த மைதானத்தில் போதிய மின்விளக்கு வசதிகளும் இல்லாமல் இருந்து வந்தது. இரவு நேரங்களில் மாநில அளவிலான, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்படும் போது தற்காலிகமாக மின் விளக்குகள் அமைக்கப் படும்.
நிரந்தரமாக மின்விளக்கு அமைக்க முன்னாள் எம்.பி விஜயகுமார் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தார். அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்க டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. விளையாட்டரங்கத்தில் நான்கு புறங்களிலும் இந்த உயர் கோபுரம் மின் விளக்கு அமைக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த மின் விளக்குகள் அமைப்பதற்கு தேவையான உபகரணங்கள் ஏற்கனவே வெளியிடங்களில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கத்தில் கொண்டு இறக்கி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்த பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
ஒரு வார காலத்திற்குள் இந்த பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 4 உயர் கோபுர மின் விளக்கு கள் அமைக்கும் பொழுது இரவை பகலாக்கும் வகை யில் மின் விளக்குகள் அமையும். மாநில அள விலான மாவட்ட அளவி லான போட்டிகள் நடத்தப்ப டும் போது இது பய னுள்ளதாக இருக்கும் என்று விளையாட்டு வீரர்கள் கருதுகிறார்கள்.
மின்விளக்கு வசதி மட்டுமின்றி மற்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விளை யாட்டு அலுவலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. அண்ணா விளை யாட்டு அரங்கத்தை ஒட்டி யுள்ள நீச்சல் குளம் கடந்த சில நாட்களாக போதிய பராமரிப்பு இன்றி காணப்பட்டது. தற்பொழுது சீரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் நீச்சல்குளம் காட்சியளிக்கிறது. நீச்சல் குளத்திற்கு வரும் பாதையும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 35-க்கும் மேற்பட்ட வீரர்கள் பயிற்சி பெற்று வருகி றார்கள்.
நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம் பராமரிப்பு பணிகள் ஒருபுறம் இருக்க சட்டமன்ற தொகுதி வாரியாக சிறு விளையாட்டு மைதானங்களை அமைப்ப தற்கு தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. குமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைப்ப தற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பத்மநாபபுரம் தொகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மைதா னங்கள் அமைக்கப்படும் போது விளையாட்டு வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்
- முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.
நாகர்கோவில், அக்.31-
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறையின் சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் இன்று மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வியின் கீழ் 2307 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாற்றுத்திறனுடைய குழந்தைகள் உற்சாகமாக பள்ளிக்கு வருவதற்கு, பள்ளிகளில் கற்கும் சூழல் உருவாக்கப்பட்டு, கற்கும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
குறைந்த பாதிப்புடைய மாற்றுத்திறன் குழந்தைகள் முறையாக பள்ளிகளில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தீவிர பாதிப்பினையுடைய 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு, உள்ளடக்கிய கல்வியின் கீழ்இயங்கும் ஆயத்த பயிற்சி மையம் மூலம் சிறப்பு கல்வி மற்றும் இயன் முறைமருத்துவம் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
வீட்டு வழிக் கல்விபெறும் குழந்தைகளின் உடல்நலம், மனநலம் மற்றும் அறிவு வளர்ச்சி போன்றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளை முறையான மதிப்பீடு செய்து, அவர்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க மாணவர்களை தேர்வு செய்தல், அடையாள அட்டைகள் வழங்குதல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்பு தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித்தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளிகளை கண்டறிந்து, அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மருத்துவ முகாமானது சுகாதாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணைந்து அனைத்து வட்டார வள மையங்களிலும் நடத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வீல் சேர் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கி, சிறப்பு மருத்துவ முகாமினை பார்வையிட்டதோடு மாற்றுத்திறன் குழந்தைகளிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் முகாமில் உள்ள மருத்துவர்களிடம் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கிட அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட கல்வி அலுவலர் மோகன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- அடுத்த மாதம் 3 நாட்கள் நடக்கிறது
- கனிம வளங்கள் நிறைந்த நாடு. உலகளவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாக உள்ளது.
நாகர்கோவில் :
தி ரைஸ் அமைப்பின் இயக்குனர் ஜகத் கஸ்பர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி ரைஸ் அமைப்பின் சார்பில் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் மலேசியா தலைநகர் கோலம்பூரில் நடைபெற்ற மாநாட்டில் 430 தொழில் வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இதைத்தொடர்ந்து 12-வது உலக தமிழ் தொழில் மற்றும் தொழிலாளர்கள் மாநாடு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வருகிற 24, 25, 26-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் 35 நாடுகளில் இருந்து தொழிலதிபர்கள், திறனாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாநாட்டில் 500 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் ஓமன் நாட்டின் நான்கு மூத்த அமைச்சர்களும் பங்கு கொள்கிறார்கள்.
தொலைத்தொடர்பு, ஐடி துறை, மீன்வளத்துறை, வேளாண் துறை, சுற்றுலா வளர்ச்சித்துறை அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாடு தமிழ் ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். கத்தார், சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் இருந்தும் தொழில் அதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த மாநாடு ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமையும். ஓமன் நாடு அரசு அந்த நாட்டு குடிமக்களை சிறு தொழில் முனைவோர் ஆக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. அதற்கு பேருதவிகளையும் அந்த நாட்டு குடிமக்களுக்கு செய்கிறது. ஆனால் என்னென்ன தொழில் செய்ய முடியும் என்கின்ற அனுபவம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் ஆரம்ப நிலையில் தான் அந்த நாட்டில் உள்ளது. ஓமன் நாட்டின் நிதி வளங்களோடு இருக்கக்கூடிய தொழில்அதிபர்களையும் இணைக்கும் முயற்சியாக தான் இந்த மாநாடு அமையும். கனிம வளங்கள் நிறைந்த நாடு. உலகளவில் முதலீட்டாளர்களை வரவேற்கும் நாடாக உள்ளது.
இந்த மாநாடு நடை பெறுவதன் மூலமாக உலக முதலீட்டாளர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஓமன் நாட்டை மையமாக கொண்டு மீன் பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் சார்ந்த மதிப்பு கூட்டு பொருள்கள் ஆகியவற்றிற்கும் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஓமன் நாட்டில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவது மிகவும் எளிமை யாக்கப்பட் டுள்ளது. வருமான வரி இந்த நாட்டில் இல்லை.
இந்தியா வில் இருக்கின்ற ஜி.எஸ்.டி. வரி என்பது அங்கு மதிப்பு கூட்டு வரியாக இருக்கிறது. மிக அதிகபட்சமாக 5 சதவீதம் மட்டுமே உள்ளது. நாம் ஈட்டுகின்ற லாபத்தை முழுமையாக நம் தாய் நாட்டிற்கு அல்லது நாம் குடிபெயர விரும்புகின்ற நாட்டிற்கோ எடுத்து செல்ல உரிமையும், வாய்ப்பையும் அந்த நாட்டு அரசு வழங்குகின்றது.
ஓமன் நாட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு நிதி நிறுவனங்கள் எளிதாக கடன் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றன. இந்த மாநாடு ஓமன்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
- 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நாகர்கோவில் :
மயிலாடி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மயிலாடி அடுத்த லட்சுமிபுரம் ஊரில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த ஊரை சேர்ந்த தனி நபர் ஒருவரின் இடத்தில் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில் மிகப்பெரிய அளவில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அந்த இடத்தில் டவர் அமைக்கும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு உடல்நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இப்பகுதியில் வசிக்கும் பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும். எனவே இதை பரிசீலனை செய்து குடியிருப்பு பகுதியில் அமைய இருக்கும் இந்த தனியார் செல்போன் டவரை நிறுத்தி, இப்பகுதியில் இருந்து 1½ கிலோ மீட்டருக்கு அப்பால் நிறுவுவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
- “பாக்கும்படி” நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு நடக்கிறது
கன்னியாகுமரி, அக்.31-
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற டிசம்பர் மாதம் 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 15-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி வருகிற 5-ந்தேதி காலை 10 மணிக்கு கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல முற்றத்தில் வைத்து நடக்கிறது.
இதற் கான ஏற்பா டுகளை கன்னி யாகு மரி தூய அலங்கார உபகார மாதா திருத் தல அதிபர் அருட்ப ணியாளர் உபால்டு, பங்குப்பே ரவை துணை தலைவர் செல்வ ராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள், 92 அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் (அம லாக்கம்) தொழிலாளர் உதவி ஆணையர் ஜெ.மணிகண்ட பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை முதன்மை செயலாளர், தொழிலாளர் ஆணையரால் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவு றுத்தப்பட்டுள்ளதை தொ டர்ந்து எனது தலைமையில் (மணிகண்ட பிரபு) தொழிலா ளர் உதவி ஆய்வாளர்களால் டெக்ஸ்டைல்ஸ், ஆயத்த ஆடைகள் மற்றும் இனிப்பு விற்பனை செய்யும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
மேலும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் அதிகபட்ச விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் இரட்டை விலை குறித்து சட்டமுறை எடையளவு விதிகளின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டது.
முத்திரை இடப்படாத, தரப்படுத்தப்படாத எடை யளவுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், பொட்டல பொருட்களின் விதிகளின் கீழ் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை, உரிய அறிவிப்புகள் இல்லாமல் இருப்பது மற்றும் பொட்டல மிடுபவர், இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் கருங்கல் ராஜீவ் சந்திப்பில் நடைபெற்ற இந்திரா காந்தி நினைவு தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கொடும் செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், பேரூராட்சி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார், கிள்ளியூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் டிஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர்பிரைட்சிங், குமார், சுனில்குமார், ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ், ஜெஸ்டின், அருள்ராஜ், பிறைட், ஸ்டாலின், மரிய அருள்தாஸ், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






