என் மலர்
கன்னியாகுமரி
- பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது
- போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில், நவ.1-
குமரி மாவட்ட இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் இன்று பகல் நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகின சேரி செல்லும் ரோட்டில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார்.
பாலசுப்பிரமணியம் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே கார் சென்ற போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த கார் திடீரென பஞ்சரானதால் தாறு மாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.பால சுப்பிரமணியம் வந்த கார் மீது பயங்கரமாக மோதியதோடு மட்டுமல்லாது பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது.
இந்த சம்பவத்தில் 2 கார்களும் பலத்த சேதம டைந்தன. ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பஞ்சரான கார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
- மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
கன்னியாகுமரி :
தமிழக சட்டமன்ற உறுதி மொழி குழு அதன் தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவருமான வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் நாளை இரவு கார் மூலம் கன்னியாகுமரி வருகிறது. இந்தகுழுவில் மொத்தம் 12 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் 3-ந்தேதி காலையில் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை யில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். பின்னர் காமராஜர் மணி மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் ரூ.7 கோடி செலவில் கூடுதல் படகு தளம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். அதன் பிறகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள திருவள்ளு வர் சிலைக்கு தனிபடகு மூலம் செல்கின்றனர். அங்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளு வர் சிலைக்கும் இடையே கண்ணாடி இழையிலான இணைப்பு கூண்டு பாலம் அமைக்கும் பணியை பார்வையிடுகின்ற னர். அதன் பிறகு இந்த குழுவினர் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று திட்டப் பணிகளை ஆய்வு செய்கின்றனர்.தொடர்ந்து நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இந்த குழுவினர் ஆலோசனை நடத்துகிறார்கள்.
- அனுமதியின்றி வைத்தால் அகற்ற நடவடிக்கை
- தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும்
நாகர்கோவில், நவ.1-சென்னையில் அண்ணாமலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜ.க. கொடிக்கம்பத்தை போலீசார் அகற்றியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10 ஆயிரம் வீடுகளில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடி கம்பம் நட்டு கொடி ஏற்றுவார்கள் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று முதல் பா.ஜ.க. கொடி கம்பங்கள் நடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள், வீடுகளில் பாரதிய ஜனதா கொடி ஏற்றுவதற்கு தயாராகி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடுகளில் கொடி ஏற்ற தயாராகி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் கொடியேற்றுவதாக அறிவித்ததை தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்- டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. எந்த ஒரு அனுமதியும் இன்றி கொடிக்கம்பங்கள் வைத்தால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பாரதியஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கொடி கம்பங்களில் கொடியேற்றப்படும் என்று மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால் குமரி மாவட்டத்தில் மட்டுமே 100 நாட்களில் பத்தாயிரம் இடங்களில் கொடியேற்ற திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சியில் பல்வேறு சாலைப் பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார். இன்று 6-வது வார்டுக்குட்பட்ட நீல நாடார் தெரு, மூன்லைட் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.13.68 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 7-வது வார்டுக்குட் பட்ட பள்ளிவிளை, ஆதி சக்தி தெருவில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி போன்றவற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
மண்டல தலைவர் ஜவகர், உதவி பொறியாளர் சந்தோஷ், கவுன்சிலர் பால் தேவராஜ் அகியா, பகுதி செயலாளர் சேக் மீரான், மாநகர துணைச் செயலாளர் வேல்முருகன், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- யாகசாலை பூஜையுடன் 13-ந்தேதி தொடங்குகிறது
- முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன்குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழா 19-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
1-ம் திருவிழாவான வருகிற 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.6மணிக்கு விஸ்வரூபதரி சனமும்7மணிக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.8-30மணிக்கு சிறப்பு வழிபாடும்.
9மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்ப நிகழ்ச்சியும் நடக்கிறது.10 மணிக்கு பூர்ணாஹுதி மற்றும் தீபாரதனை நடக்கிறது, 10-45.மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கும் திரு வேலுக்கும் 18 கும்ப கலச சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு சிறப்பு வழிபாடும், பகல் 12 மணிக்கு வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு வழிபாடும் நடக்கிறது. மாலை 3 மணிக்கு திருவிளக்கு சகஸ்ரநாம வழிபாடு நடக்கிறது.5-30மணிக்கு சமய உரையும், 6-30 மணிக்கு பஜனையும் இரவு 7-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
இந்த கந்த சஷ்டி விழா வருகிற 19-ந்தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி தினமும் அதிகாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் காலை7 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 8-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது. பின்னர்.காலை 9 மணிக்கு கும்ப கலச யாக பூஜையும் அதைத் தொடர்ந்து 10மணிக்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடுகளும் நடக்கிறது. 6-வது நாளான18-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளைகுண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
7-வதுநாளான19-ந்தேதி காலை 8-45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும் 10மணிக்கு திருக்கல்யா ணவைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன்இந்திர வாகனத்தில்பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது.பகல்12மணிக்கு மங்களதீபாராதனையும், 12-30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும், மாலை 6-30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு
- மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்
குளச்சல் :
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் துணை சூப்பிரண்டு தங்கராமன் அறிவுரைப்படி குளச்சல் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் குருநாதன், சிதம்பரதாணு, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கள் சுரேஷ்குமார், பாலசெல்வன் உள்ளிட்ட போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடந்த 4 நாட்களில் குளச்சல், கருங்கல், இரணியல், தோட்டியோடு பகுதியில் நடத்திய வாகன சோதனையில், மது போதையில் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குடிபோதை வழக்குகள் பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மது குடித்து வாகனம் ஓட்டிய டிரைவர்கள், இரணியல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி அமீர்தீன் முன்பு ஆஜர் செய்யப்பட்டனர். அவர், வழக்குகளை விசாரித்து, குடிபோதையில் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கு அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.98,500 அபராதமாக விதித்து தீர்ப்பளித்தார்
- குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள்
- பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளான இன்று நாகர்கோ வில் வேப்ப மூட்டில் உள்ள மார்சல் நேசமணி சிலைக்கு மாவட்ட நிர்வா கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கலெக்டர் ஸ்ரீதர், மேயர் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார்கள். நிகழ்ச்சி யில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், தாசில்தார் ராஜா சிங், ஒன்றிய செயலாளர் மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதா சிவம், மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த், இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், நேசமணியின் பேரன் ரஞ்சித் அப்போலோஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்புள்ள நேசமணி சிலைக்கு அரசி யல் கட்சியினர் மாலை அணிவித்தனர். அ.தி.மு.க. சார்பில் அவை தலைவர் சேவியர் மனோகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி சந்துரு, ராணி துணை செயலாளர் சுகுமா ரன், இணைச் செயலாளர் சாந்தினி பகவதியப்பன், இளைஞர் அணி செயலாளர் ஜெயசீலன், வெங்கடேஷ் ஜெயகோபால், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயாகண்ணன், பகுதி செயலாளர் முருகேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் மகாராஜா பிள்ளை, வக்கீல் சுந்தரம் மற்றும் ரபீக் உள்ளிட்ட நிர்வாகி கள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்கள்.
காங்கிரஸ் சார்பில் விஜய்வசந்த் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், மாநக ராட்சி மண்டல தலைவர் செல்வகுமார்,இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சகாய பிரவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ம.க. சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- 10-ந்தேதி நடக்கிறது
- ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பங்கஜ்வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கும் மற்றும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாகர்கோவிலில் உள்ள வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் நடக்கிறது. இதில் மண்டல ஆணையாளர் குறைகளை கேட்டு நிவாரணம் அளிப்பார்.
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குதலில் ஏதேனும் குறைகள் இருப்பின் மண்டல அலுவலகத்தை அணுகலாம். அதேபோல வருங்கால வைப்புநிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர்கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்புபவர்கள், மாத சந்தா செலுத்துவது தொடர்பான குறையுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் 16 வருடங்களுக்கு மேல் பணி செய்து, வரும் 3 மாதத்திற்குள் 58 வயது முடிவடைகிற இ.பி.எஸ். உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓய்வூதிய விண்ணப்பத்தை சமர்ப்பித்தலில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேலும் தொழிலாளர்கள்-தொழில் நிறுவனர்கள் தங்கள் குறைதீர் மனுக்களை வருகிற 7-ந்தேதிக்குள் அலுவலகத்தில் நேரிலும் அல்லது அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பு
- காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் நடந்து வருகிறது.
குமரி மாவட்டத்திலும் சுகாதார துறை சார்பில் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் உள்பட 9 தாலுகாக்களில் தலா 3 இடங்களிலும், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4 இடங்களிலும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடந்து வருகிறது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் தற்பொழுது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. ஒரு குடும்பத்தில் முதலில் ஒருவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அந்த குடும்பத்தில் மற்ற அனைவரும் காய்ச்சலால் பாதிக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
காய்ச்சலுடன், சளி தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். காய்ச்சல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்ட நிலையில் தும்மலும் அதிக அளவில் இருந்து வருகிறது.
கைக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் பாதிப்பால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.
பள்ளி மாணவ-மாணவிகளும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளிக்கு செல்லாத நிலை இருந்து வருகிறது. ஏராளமான மாணவர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கால், கை வலி உட்பட உடல் முழுவதும் வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அல்லது தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்கிறார்கள். சமீபகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருபவர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் போது, ஒரு சிலர் மழையில் நனைந்து ஜலதோஷம் பிடித்து அதன் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு வருகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சலுடன் பல்வேறு இடங்களில் மெட்ராஸ் ஐ நோயும் பரவி வருகிறது.
பொதுமக்கள் சுய மருந்து எடுத்துக் கொள்ளாமல் டாக்டரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்கள் எண்ணிக் கையை விட தற்போது காய்ச்சலுக்கு சிகிச்சை வருபவர்கள் எண்ணிக்கை அதிக ரித்து உள்ளது. பொதுமக்கள் காய்ச்சிய தண்ணீரை பருக வேண்டும். காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு வாந்தி ஏற்பட்டு வருகிறது. வாந்தி ஏற்படுவதால் சோர்வு ஏற்படும்.
சோர்வை போக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான நீர் ஆதாரங்களை கொடுத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்துக் கொள்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்தி ரியில் உள்ள டாக்டர்களை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது என்றார்.
- அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மார்த்தாண்டம் :
தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடர்பான அறிமுக கூட்டம் நல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவி வளர்மதி கிறிஸ்டோபர் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அர்ஜூனன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் செயல் அலுவலர் விஜிலா விஜி பேசுகையில், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்யவும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்குவதற்கும் அவர்கள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அப்போதுதான் அரசு செப்டிக் டேங்க் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கியும், முறையான பயிற்சி வழங்கியும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் அறிக்கை
- 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்
நாகர்கோவில் :
குமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் வில்லுக்குறி பேரூராட்சிக்குட்பட்ட தோட்டியோட்டில் செயல்பட்டுவரும் பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதி மற்றும் அழகிய மண்டபம் பேரூராட்சிக்குட்பட்ட பிலாங்காலை முதியோர் இல்லம் போன்றவற்றை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டார். அங்குள்ளவர்களிடம் நேரடியாக பேசிய அவர் குறைகள் ஏதும் உள்ளதா? என கேட்டறிந்தார். பின்னர் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சுவதார் கிரஹக் என்ற பெண்கள் குறுகிய கால தங்கும் விடுதியானது சுரக்க்ஷா தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான தங்குமிடம் ஏற்பாடு, ஆலோசனை மையம் அதனுடன் சுயதொழில் என பெண்களுக்காக பல்வேறு உதவிகள் இம்மையம் ஏற்படுத்தி உள்ளது. வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களை 5 நாட்கள் வரை இங்கு தங்க வைக்கலாம். இருப்பினும், நீண்ட கால தங்கும் தேவைக்காக, அத்தகைய பெண்கள் மற்றும் கடத்தல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது 18 வயதிற்கு குறைந்த துன்பப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்கள், சக்தி சதனுக்கு பரிந்துரைக்கப்படு வார்கள்.
அங்கு அவர்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை தங்கலாம். சக்தி சதனில் தங்குவதற்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்படலாம். சம்பந்தப்பட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மூலம் தேவை அடிப்படையில் இருப்பினும், 55 வயதுக்கு மேற்பட்ட வயதான பெண்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் தங்கலாம். அதன் பிறகு அவர்கள் முதியோர் இல்லங்கள் அல்லது பிற நிறுவனங்களுக்கு மாற்றப்பட வேண்டும். மேலும் இக்குறுகிய கால தங்கும் விடுதியில் இருந்த 16 வயது சிறுமி, 10-ம் வகுப்பு படிப்பை தொடர்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்பட்டு வரும் முதியோர் இல்லங்களில் அக்டோபர் மாதம் முழுவதும் முதியோர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. மாவட் டத்தில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மூத்த குடிமக்கள் தொடர்பாக வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருகின்றது.
மூத்த குடிமக்கள் உதவி எண் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழிதவறியவர்கள் மற்றும் கைவிடப்பட்ட முதியவர்கள் உறவினர்களிடம் ஒப்படைக்க உதவுதல் உள்ளிட்டவை செயல்படுத்தப் பட்டு வருகிறது.
முதியோர் உதவி எண்ணில் அழைக்கும் போது முதி யோர்களின் உடல்ரீதியான, பாதுகாப்பு, மனநல ஆலோ சனை, சுகாதார தேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் உறுதி செய்து கொடுக்கப்படு கிறது. மாவட்டத்தில் தற்போது 31 முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
பிள்ளைகளால் கைவிடப் படும் முதியோர்களை பாதுகாத்து அவர்களிடம் அன்பும் பாசமும் காட்டி மூத்த குடிமக்களை சிறப்பான முறையில் பராமரித்து வருகின்றனர். பிலாங்காலை மற்றும் மாத்தார் முதியோர் இல்லங்களில் 129 முதி யோர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு தற்போது முதியோர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறன்றது.
முதியோர் உதவி எண் 14567 ஆகும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மூத்த குடிமக்கள் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று அவர்களின் குறைகள் அறியப்பட்டு தீர்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் வழக்கு தொடர் பாக மாவட்ட ஆட்சியரின் தீர்ப்பே இறுதியானது ஆகும். எந்த நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாலும் ஆட்சியரின் தீர்ப்பே இறுதி தீர்ப்பாக கருதப்படும்.
எனவே ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்க ளுக்கு பாதுகாப்பு வழங்கி அவர்களை சிறந்த முறையில் பராமரித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பிலாங்காலை முதியோர் இல்லத்தில் கொண்டாடப் பட்ட சர்வதேச முதியோர் தினவிழாவில், கலெக்டர் ஸ்ரீதர் முதியோர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். முதியோர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். கூட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலர் சரோஜினி, குறுகிய கால தங்கும் விடுதி தலைவர் சாந்தா பாலகிருஷ்ணன், மாத்தார் மற்றும் பிலாங் காலை முதியோர் இல்ல நிர்வாகிகள் மற்றும் முதி யோர்கள் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தொகுதி தொண்டர்களுக்கு அறிவுரை
- தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் மகேஷ் வேண்டுகோள்
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும், நாகர்கோ வில் மாநகராட்சி மேயரு மான மகேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டி யலை திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலைத் தேர்தல் ஆணை யம் வெளி யிட்டுள்ளது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி, நாகர்கோ வில் மற்றும் குளச்சல் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதி களிலும் கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 9-ந்தேதி வரை புதிய வாக்கா ளர்களைச் சேர்க்க வும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் மனுச் செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) 5-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை), 18-ந்தேதி (சனிக் கிழமை), 19-ந் தேதி (ஞாயிற் றுக்கிழமை) ஆகிய 4 நாட்க ளில் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங் களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள மாநகர், ஒன்றிய, நகர் பகுதி, பேரூர், வட்ட, கிளை செயலாளர்கள் அனைத்து சார்பு அணிகளின் நிர்வா கிகள் இணைந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி 1-1-2024 அன்று 18 வயது நிரம்பக் கூடிய புதிய வாக்காளர்களை வாக்கா ளர் பட்டியலில் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள், முகவரி மாற்றம் செய்தல், ஆதார் எண்ணை வாக்கா ளர் பட்டியலுடன் இணைப்பு போன்ற பணி களை சிறப்பாக மேற் கொண்டு தகுதயுள்ள வாக் காளர்கள் விடுபட்டு விடா மல் இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.






