குலசேகரம் அருகே பேரூராட்சி துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை

அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குலசேகரம் அருகே பேரூராட்சி துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவட்டார்:

குலசேகரம் அருகே உள்ள ஆனைக்கூட்டுவிளை கிளக்கம்பாகம் பொன்மனை பகுதியை சேர்ந்தவர் அஜில் ராஜ் (வயது 38). இவருக்கு அனுஜா (26) என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். அஜில்ராஜ் பொன்மனை பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த சில மாதங்களாக இவருக்கும், மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக அவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் அஜில் ராஜ் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று மதுவுடன் தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரைகளை தின்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடலை குலசேகரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com