தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி

நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர்.
தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புத்தாக்க பயிற்சி
Published on

பூதப்பாண்டி:

பூதப்பாண்டியில் உள்ள தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் வார்டு உறுப்பினர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது. ஆர்.ஜி.எஸ்.ஏ.திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட 16 ஊராட்சிகளில் உள்ள பெண் வார்டு உறுப்பினர்களுக்கு தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்த பயிற்சியில் பெண்கள் பங்கேற்பு சுயசார்பு தன்மை, பணியில் சந்திக்கும் சவால்கள், பாலின சமத்துவம் மற்றும் பாலினசரி நிகர் வரவு செலவு திட்டம், அரசியல் அமைப்பு சமத்துவம், பெண்களுகளுக்கான உரிமைகள், சட்டங்கள், மத்திய, மாநில அரசின் திட்டங்கள் ஆளுமை திறமையை வளர்த்தல், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியினை பயிற்றுனர்கள் டைமன் அருள் மற்றும் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com