என் மலர்
கன்னியாகுமரி
- திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
- 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 17-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை, விசேஷ மாலை ஆராதனை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 8-ம் திருவிழாவான 15-ந்தேதி இரவு சப்பர பவனியும், 9-ம் திருவிழாவான 16-ந்தேதி இரவு சூசையப்பர் தங்கத்தேர் பவனியும், 10-ம் திருவிழாவான 17-ந்தேதி காலையில் மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரு தங்கத்தேர் பவனியும் நடக்கிறது.
இந்த திருவிழாவையொட்டி நடக்கும் நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், தேர் அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் "பாக்கும்படி" நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகு மரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்ப ணியாளர் உபால்டு தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணை தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணை செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதலில் தேர் அலங்காரத்துக்கான முன்பணம் செல்வம் என்பவருக்கு வழங்கப்பட்டது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.
பாக்கும்படி நிகழ்ச்சி முடிந்ததும் கொடிமர கம்பம் பங்கு மக்களால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருத்தலத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகு மாதா தேர் மற்றும் சூசையப்பர் தேர் ஆகிய 2 தேர்களும் பவனிக்கு தயார்படுத்துவதற்காக தேர் கூடத்தில் இருந்து பங்கு மக்களால் இழுத்து வெளியே கொண்டுவிடப்பட்டது.
- பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன
நாகர்கோவில் :
பர்னிச்சர்கள் என்றாலே குமரி மாவட்ட மக்களின் நினைவுக்கு வருவது ராயல் பர்னிச்சர் தான். நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகில் மறவன்குடியிருப்பில் அமைந்துள்ளது ராயல் பர்னிச்சர் நிறுவனம். கடந்த 20 ஆண்டுகளாக வாடிக்கை யாளர் சேவையில் சிறப்பான பெயர் பெற்று, தென் தமிழ கத்தின் மிக பெரிய ஷோரூமாக இது விளங்கி வருகிறது.
இங்கு தரமான பொருட்கள், நியாயமான விலை, கனிவான சேவை என்பதையே தாரக மந் திரமாக கொண்டு செயல்படுவதால், பல ஆயிரக்கணக்கான திருப்தியான வாடிக்கையாளர்களை தனக்கென கொண்டு உள்ளது.
இங்கு புது, புது டிசைன்க ளில் இம்போர்ட்டடு பர்னிச்சர்கள், உள்நாட்டு பர்னிச்சர்கள், ஸ்டீல் பர்னிச்சர்கள், புதிய மாடல் ஷோபாக்கள், நவீன மாடல் கட்டில்கள், டைனிங் மற்றும் டிரஸ்சிங் டேபிள்கள், டி.வி. ஸ்டாண்டுகள், வித, விதமான கம்ப்யூட்டர் டேபிள்கள் மற்றும் ரோலிங் இருக் கைகள், அலுவலகங்க ளுக்குரிய மேஜைகள், புக் செல்ப், பைல் ரேக் போன்ற அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஏராளமான மாடல்களில் உள்ளன.
இங்கு வாடிக்கையா ளர்களுக்கான சுலப தவணை திட்ட வசதியும் செயல்ப டுத்தப்பட்டு வருகி றது. குறிப்பிட்ட தொகைக்கு பொருள்கள் வாங்கும் வாடிக் கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவ ரியும் செய்கிறோம். மர பர்னிச்சர் களை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்கள் விரும்பும் படியான மாடல்களில் பர்னிச்சர் களை தங்களது சொந்த தொழிற்சா லையில், உயர்தர தேக்கு, ஈட்டி மரங்களிலிருந்து தர மானதாக மிக நேர்த்தியாக, லைப்டைம் உத்திரவாதத்து டன் திறமை யான தொழிலாளர்களை கொண்டு செய்து கொடுக்கின்ற னர். இந்த நிறுவனத்தில் இம்போர்ட்டடு பர்னிச்சர், ஸ்டீல் பர்னிச்சர், அலுவலக பர்னிச்சர் என்று ஒவ்வொன் றிற்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு, வாடிக்கை யாளர்கள் குடும்பத்துடன் வருகை தந்து பொருட் களை தேர்வு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட சோபா செட், கட்டில், டைனிங் டேபிள், பீரோக்கள் புதிதாக வந்துள்ளன. வாடிக்கை யாளர்கள் தங்க ளிடம் உள்ள வீட்டு உபயோக பொருட்களை அதிக விலைக்கு கொடுத்து, புதிய பொருட்களை வாங்கி கொள் ளும் எக்சேஞ்ச் வசதியும் எப்போதும் உண்டு. மேற்கண்ட தகவல்களை ராயல் பர்னிச்சர் உரிமையாளர் ஆரோக்கிய வினோ தெரிவித்தார்.
- சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே மேலபெருவிளை சானல்கரை பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகள் சிவ சாந்தினி (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று விட்டு சிவ சாந்தினி வீட்டிற்கு வந்தார். வீட்டில் இருந்த அவரது சகோத ரிக்கும், சிவ சாந்தினிக்கு இடையே தகராறு ஏற்பட் டது. இதையடுத்து அவரது தாயார் இருவரையும் சமாதானம் செய்துவிட்டு கடைக்கு சென்றதாக கூறப் படுகிறது.
சகோதரி தன்னுடன் தகராறில் ஈடுபட்டதால் மனமடைந்த சிவ சாந்தினி வீட்டில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது சகோதரி மற்றும் தாயார் சிவசாந்தி னியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிவசாந்தினி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
சிவசாந்தினியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏரா ளமானோர் அங்கு திரண்டு உள்ளனர். சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
- சுற்றுலா பயணிகள் வருகை “திடீர்”என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி :
வாரத்தின் கடைசி விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக ரித்துள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இன்று அதிகாலை கன்னி யாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதி யிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
கடந்த 3 நாட்களாக மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி இன்று அதிகாலை சூரியன் உதய மான காட்சி தெளிவாக தெரிந்தது. இதனால் சுற்று லா பயணி கள் சூரியன் உதய மான காட்சியை பார்த்து ரசித்தனர். அதே போல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணி கள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு விட்டு திரும்பினர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள் ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்க வில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும்போதும் கடற்கரை யில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல் போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டா ரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமரா ஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
வட்டகோட்டைக்கும் உல்லாச படகு சவாரி இயக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கன்னியாகுமரியிலும் இயக்க நடவடிக்கை
- நாளை முதல் தொடக்கம்
நாகர்கோவில் :
தென்னக ரெயில்வே யில் ஏ கிரேட் அந்தஸ்தில் நாகர்கோவில் ரெயில் நிலையம் உள்ளது. நாகர்கோவில் ரெயில் நிலையத்தி லிருந்து சென்னை, கோவை போன்ற பெரு நகரங் களுக்கும், மும்பை, பெங்களூரு போன்ற வெளி மாநிலங்களுக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியூர் களுக்கு செல்வதற்கு ரெயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக மாலை நேரங்களில் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட மாலையில் வெளி யூருக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப் படும். இந்த ரெயில் நிலை யத்தில் முதலாவது பிளாட் பாரத்தில் இருந்து இரண் டாவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு எக்ஸ்லெக்டர் வசதி மட்டும் உள்ளது. மேலும் ரெயில் நிலை யத்தில் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பேட்டரி கார் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பேட்டரி காரை இயக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தி னரும் சட்டமன்ற உறுப்பி னர்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.
பேட்டரி கார் வசதி இல்லாததால் ரெயில் நிலையத்தில் ரெயிலை விட்டு இறங்கும் முதிய வர்கள், கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள் ளாகி வந்தனர். ரெயிலை விட்டு இறங்கி நீண்ட தூரம் நடக்க வேண்டிய நிலை இருப்பதால் அவர்கள் அவதிக்குள்ளானார்கள்.
இந்த நிலையில் மீண்டும் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் பிறப பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2 பேட்டரி கார்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு உள் ளது. பயணிகளின் நலன் கருதி ரெயில்வே பிளாட் பாரங்களில் பேட்டரி கார் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
நாளை (6-ந்தேதி) முதல் பிளாட்பாரத்தில் பேட்டரி கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
மேலும் பேட்டரி காருக் கான கட்டணத்தை நிர்ண யம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. குறைந்த கட்டணத்தை பேட்டரி காருக்கு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது ரெயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
நாகர்கோவில் ரெயில்வே யில் பேட்டரி கார் இயக்கப் படும்போது ரெயில் பயணி களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெரு நகரங்களுக்கு ஈடாக நாகர்கோவிலில் பேட்டரி கார் இயக்கப்படுவது பயணி களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் சர்வதேச சுற்றுலா தலமாக கருதப்ப டும் கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் வசதி இல்லாமல் சுற்று லா பயணிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வெளி மாநி லங்களில் இருந்து வரும் பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் பயணிகளும் அவதிப்பட்டு வருவதால் பேட்டரி கார் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவ டிக்கை மேற்கொண்டது. இங்கும் பேட்டரி காரை இயக்குவதற்கு டெண்டர் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக 2 பேட்டரி கார்களை கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நாகர்கோவிலில் டெண் டர் எடுத்த அதே நிறுவனமே கன்னியாகுமரி ரெயில் நிலையத்திலும் பேட்டரி கார் இயக்க டெண்டர் எடுத்துள்ளது. அங்கும் ஓரிரு நாட்களில் பேட்டரி கார் இயக்கப்பட உள்ளது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறுகை யில், நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ஏற்கனவே தனியார் மூலம் பேட்டரி கார் இயக்கப்பட்டு வந்தது. அதற்கான ஒப்பந்த காலம் நிறைவடைந்தது பிறகு பேட்டரி கார் இயக்குவது நிறுத்தப்பட்டது.
தற்பொழுது நாகர்கோ வில், கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் பேட்டரி கார் இயக்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒரே நிறுவனமே அதற்கு டெண்டர் எடுத்துள்ளது.
நாகர்கோவிலில் இயக்கு வதற்கான பேட்டரி கார் கொண்டு வந்துள்ள நிலை யில் நாளை முதல் அந்த பேட்டரி காரை இயக்க நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான கட்ட ணத்தை காண்ட்ராக்ட் எடுத்த நிறுவனமே முடிவு செய்யும் என்றார்.
- கைதான கொள்ளையன் பரபரப்பு வாக்குமூலம்
- சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பார்வதிபுரம் கிறிஸ்டோபர் காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி செல்வி (வயது 60). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செல்வி ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் சரவணக் குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நகை பறிப்பு நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையில் ஈடுபட்டது கேர ளாவை சேர்ந்த வாலிபர்கள் என்பது தெரிய வந்தது. இதை யடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் செல்வியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டது திருவனந்தபுரம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (19) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நந்தகுமாரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. அவரிடம் போலீசார் விசா ரணை நடத்தியபோது ஜாலி யான வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு நகை களை திருடி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக தெரிவித்தார்.
இந்த கொள்ளை வழக்கில் அவரது நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நந்தகுமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நந்தகுமார் மீது ஏற்கனவே கேரளாவில் 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார்.
- அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குளச்சல்:
மதுரை சொக்கலிங்கம் நகர் 5-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ராஜம் (42). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2021-ல் இந்த தம்பதியினர் குடும்பத்துடன் குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோடிமுனை வந்து அங்கு வசித்து வருகின்றனர்.
இதில் 16 வயது சிறுவன் தவிர மற்ற குழந்தைகள் பனவிளை சரல்விளையில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். 16 வயது சிறுவன் மதுரையில் 9-ம் வகுப்பு வரை படித்துள்ளான். கோடிமுனைக்கு வந்தப்பின் பள்ளிக்கு செல்லாமல் உள்ளான். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுவர்களின் தாய் ராஜம் மதுரைக்கு சென்றார். இவரை 16 வயது மற்றும் 9 வயது சிறுவன் ஆகியோர் குளச்சல் பஸ் நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டனர். பின்னர் சிறுவர்கள் வீட்டுக்கு திரும்பி செல்லவில்லை.
இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாத குழந்தைகள் குறித்து ராஜா, ராஜத்திற்கு தகவல் தெரிவித்தார். ராஜம் கோடி முனை திரும்பி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவர்களை தேடி வருகின்றனர். அண்ணன்-தம்பியான சிறுவர்கள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தீயணைக்கும் படை வீரர்கள் போராடி மீட்டனர்
- பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள அழகப்பபுரத்தை அடுத்துள்ள ஜேம்ஸ்டவுணை சேர்ந்தவர் அந்தோணி ராஜ். இவருக்கு சொந்தமான பசு மாடு நேற்று காலையில் அந்த பகுதியில் மேய்ச்ச லுக்காக வீட்டில் இருந்து வெளியில் அவிழ்த்து விடப் பட்டு இருந்தது.
அதன்பிறகு அந்த பசு மாடு நேற்று மாலை வரை வீடு திரும்ப வில்லை. இ தனால் அந்தோணி ராஜ் பசுமாட்டை தேடி மேய்ச்சல் நிலத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள 50 அடி ஆழ தண்ணீர் இல்லாமல் சேறும் சகதியு மாக இருந்த பாழடைந்த கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து சகதியில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டி ருந்ததை பார்த் தார். உடனே அவர் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அந்த பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை மழையிலும் விடாது போராடி ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் உயிருடன் மீட்டனர். அதன்பிறகு அந்த பசு மாட்டை அதன் உரிமையாளரிடம் தீயணைக்கும் படை வீரர்கள் பத்திரமாக ஒப்படைத்தனர்.
- பிறரோடு ஓப்பிடாமல், தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும்
- மாணவர்களுக்கு இஸ்ரோ விஞ்ஞானி ஆசீர் பாக்கியராஜ் அறிவுரை
நாகர்கோவில்,
சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு தலைவரும் குழித்துறை மறைமாவட்ட தொடர்பாள ருமான இயேசுரத்தினம் தலைமையில் நடந்தது. தாளாளர் மரிய வில்லியம் முன்னிலை வகித்தார்.
துணை முதல்வர் கிறிஸ்டஸ் ஜெயசிங் வர வேற்று பேசினார். முதல்வர் மகேஸ்வரன் அறிக்கை சமர்ப் பித்தார். விழாவில் சந்திர யான் விண்வெளி ஆய்வு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் ஆசிர் பாக்கிய ராஜ் பங்கேற்று 512 பேருக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் 8 பேருக்கு ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டங்களும், 127 பேருக்கு முதுநிலை பொறியியல் பட்டங்களும், 377 பேருக்கு இளநிலை பொறியியல் பட்டங்களும் வழங்கப்பட் டன.
தொடர்ந்து விஞ்ஞானி ஆசிர் பாக்கியராஜ் பேசும் போது, பட்டதாரிகளுக்கு நான் கூறுகின்ற அறிவுரை என்ன வென்றால் 'உனக்கு நிகர் நீ. பிறரோடு உன்னை ஒப்பிடுவதை விட்டுவிட்டு உன்னில் இருக்கும் திறமை களை வெளிக்கொணர வேண்டும் என்பதேயாகும்.நீங்கள் எந்த நிலையில் உயர்ந்தாலும் உங்கள் பெற் றோரையும் ஆசிரியர்களை யும் மதித்து செயல்பட வேண்டும் என்றார்.
கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, புல முதல்வர்கள், துறை தலைவர்கள், பேரா சிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.
விழா ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
- தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
பூதப்பாண்டி :
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷன் களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குட்கா விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வது டன் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை காட்டுப்பு தூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்தினர். அப் போது ஒருவர் தப்பி ஓடி விட்டார். டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி னர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காரை சோதனை செய்தனர்.
அப்போது காரில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை இருந்தது தெரிய வந்தது. காரில் மூட்டை மூட்டையாக இருந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 300 கிலோ குட்கா புகையிலை சிக்கியது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலையையும், காரையும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் காட்டுப்புதூர் புது காலனி பகுதியை சேர்ந்த நாகராஜன் (வயது 40) என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய நபர் காற்றாடி விளையை சேர்ந்த ஜெயக்கு மார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். குட்கா புகையிலை எங்கிருந்து வாங்கப்படுகிறது. இதில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தப்பி ஓடிய ஜெயக்குமா ரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது
- வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
நாகர்கோவில், நவ.4-
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் இன்று கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் மழை பெய்து வந்த நிலையில் அதன்பிறகு மழை சற்று குறைந்து காணப்பட்டது.
இதையடுத்து மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் இன்று நாகர்கோவிலில் உள்ள கடைவீதிகளில் புத்தா டைகள் எடுக்க குவிந்திருந்த னர். இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் கூட்டம் அலைமோதியது.
சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் புத்தாடைகளை எடுத்து மகிழ்ந்தனர். தீபா வளியை குதூகலப் படுத்தும் வகையில் புத்தம் புதிய வடிவிலான குழந்தைகளுக் கான ஆடைகள் விற்பனைக்கு வந்திருந்தது. வடசேரி, செட்டிகுளம், கலெக்டர் அலுவலகம் பகுதியில் உள்ள கடை வீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது.
கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியதால் நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. கோட்டார் பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவித்தது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்தனர். வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்தே சென்றன. அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் பகுதியை கடந்து செல்வதற்கு மதிய நேரங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் கோட்டார், சவேரியார் ஆலய பகுதிகளில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். செட்டிகுளம், வேப்பமூடு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியதையடுத்து போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்களில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வந்ததையடுத்து பொதுமக்கள் பஸ்களில் எச்சரிக்கையுடன் பயணம் செல்லுமாறு போலீ சார் அறிவுறுத்தியுள்ளனர்.
வடசேரி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் போலீசார் மப்டி உடையில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரு கிறார்கள். சந்தேகப்படும் படியான நபர்கள் யாராவது சுற்றி திரிந்தால் தகவல் தெரிவிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். மார்த்தாண்டம், குளச்சல், அஞ்சு கிராமம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு கடைவீதிகளிலும் இன்று கூட்டம் அதிகமாக இருந்தது. பட்டாசுகள் விற்பனைக்கு வந்திருந்தாலும் இன்று கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
- வீட்டில் அனுமதியின்றி ஓலை வெடிகள் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- மகேஷ் தலைமறைவாகி விட்ட நிலையில் வீட்டில் இருந்த ராதா கைது செய்யப்பட்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள பரைகோடு பகுதியில் வீட்டில் வைத்து வெடி பொருட்கள் தயாரிக்கப்படுவதாக, தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் போலீசாருடன் சென்று அதிரடி சோதனை நடத்தினார்.
அப்போது பாட்டவிளாகம் பகுதியில் மகேஷ் (வயது 49) என்பவரது வீட்டில் வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் அனுமதியின்றி ஓலை வெடிகள் தயாரித்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாக்குமூடைகளில் இருந்த அந்த வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 42 கிலோ ஓலைவெடிகள், 3 மூடைகளில் இருந்தது.
இதனை தொடர்ந்து மகேஷ் அவரது மனைவி ராதா (44) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மகேஷ் தலைமறைவாகி விட்ட நிலையில் வீட்டில் இருந்த ராதா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






