என் மலர்
கன்னியாகுமரி
- நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை
- ஒரு கிலோ ரூ.118-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது
திருவட்டார் :
குமரி மாவட்டத்தில் முக்கியமான தொழில் பால் வெட்டும் தொழில். இங்கு இருந்து வெளி மாநிலங்க ளுக்கும், வெளிநாட்டிற்கும் அதிக அளவு ரப்பர் ஷீட்டுகள் ஏற்றுமதி செய்யப்ப டுகிறது. பேச்சிப் பாறை, கோதையாறு, குற்றியாறு, கடையாலுமூடு, பெருஞ்சாணி போன்ற பகுதிகளில் அதிக அளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்படுகிறது.
இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் ரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டு பராமரி க்கப்பட்டு வருகி றது. அரசு தோட்டங்க ளில் ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள்.
இங்கு பயிரிடப்பட்ட ரப்பர் மரங்க ளில் இருந்து வரும் ரப்பர் ஷிட்டுகள் முதல் தர மானது. இதனால் இங்கு உள்ள ரப்பர் ஷீட்டுகளுக்கு அதிக அளவு ஆர்டர்கள் வரும்.
தற்போது வட கிழக்கு பருவமழை ஒரு மாதமாக பெய்து வருகிறது. இதனால் பால் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு தொழில் எதுவும் தெரியாமல் இந்த தொழிலை மட்டும் நம்பி இருக்கும் தோட்ட தொழி லாளர்கள், தங்கள் அன்றாட செலவுக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கு பயிரிடப்பட்டு வந்த ரப்பர் ஷிட்டுகள் ஒரு கிலோ ரூ.300 வரை விற்பனை ஆனது. ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.118-க்கு தான் விற்பனை செய்யப்படுகிறது. மழையினால் பால் வெட்டும் தொழில் பெரிய அளவில் பாதிக்கப் படட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் தோட்ட தொழி லாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
- திற்பரப்பில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
- 3 அணைகளில் இருந்து 674 கன அடி தண்ணீர் திறப்பு
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரண மாக மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நாகர் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை, மாம்பழத்துறையாறு அணைகள் முழு கொள்ள ளவை எட்டி விட்டன. இதேபோல் சிற்றாறு-1 மற்றும் சிற்றாறு-2 அணை களும் வெள்ள அபாய அளவை கடந்து உள்ளது. 18 அடி கொள்ள ளவு கொண்ட 2 அணைகளிலும் தற்போது முறையே 15.88, 15.97 என்ற அளவில் நீர் மட்டம் உள்ளது. சிற்றாறு-1 அணைக்கு வரும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கோதையாற்றில் கலந்து திற்பரப்பு அருவி வழியாக பாய்கிறது.
இதன் காரணமாக திற்ப ரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளிய லிட்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் பாதுகாப்பாக குளிக்கவும், தண்ணீர் குறைவாக விழும் பகுதியில் நீராடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மூவாற்றுமுகம், குழித்துறை தாமிரபரணி ஆறு போன்றவற்றிலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடப்பட்டுள் ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 42.93 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 484 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 174 கன அடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 72.13 அடியாக உள்ளது. விநா டிக்கு 470 கன அடி தண்ணீர் அணைக்கு வரும் நிலையில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அனைத்து அணை களுக்கும் தண்ணீர் வரத்து உள்ள நிலையில் 42.65 அடி கொண்ட பொய்கை அணைக்கு மட்டும் நீர்வ ரத்து இல்லாத நிலையே உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் 8.50 அடியாகவே உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 14.6, ஆரல்வாய்மொழி 10.2, மயிலாடி 9.4, குளச்சல் 8.2, கன்னிமார் 8.4, பூதப்பாண்டி 6.8, கொட்டாரம் 6.4, பாலமோர் 5, நாகர்கோவில் 4.2, குருந்தன்கோடு 4, களியல் 3.2, முக்கடல் அணை 3.2, இரணியல் 3, மாம்பழத்துறையாறு 3, முள்ளங்கினாவிளை 2.8, சுருளகோடு 2.4, ஆணைக் கிடங்கு 2.2, அடையாமடை 2.1, புத்தன் அணை 2, தக்கலை 2, பெருஞ்சாணி 1.8,
- பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
- வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாக்கமங்கலம் :
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறை சவேரியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஜோன் ஆப் ஆர்க் (வயது 60). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை ராஜாக்கமங்கலத்திற்கு பொருள்கள் வாங்கு வதற்கு இவர் சென்றார். பொருள்கள் வாங்கிவிட்டு பஸ்சிற்காக ராஜாக்க மங்கலம் சந்திப்பில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சீமோன் என்ற கமலேஷ் (40) அங்கு வந்துள்ளார். அவர், ஜோன் ஆப் ஆர்க்கிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் ஆத்திரத்தில் கம்பியால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ஜோன் ஆர்க் ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டா டப்படும். தீபாவளி பண்டி கைக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் மாவட் டத்தில் உள்ள கடை வீதி களில் இன்று கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவிலில் கடந்த 2 நாட்களாக காலையில் விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதை யடுத்து கடை வீதிகளுக்கு காலை முதலே பொதுமக்கள் வரத்தொடங்கினார்கள்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொது மக்கள் இருசக்கர வாக னங்களிலும், நான்கு சக்கர வாகனங்களிலும் குடும்பத் தோடு கடை வீதிக்கு வந்தி ருந்தனர். இதனால் நாகர்கோ வில் செம்மங்குடி ரோட்டில் கூட்டம் அலை மோதியது. ஜவுளிக்கடை களில் தீபாவளி பண்டிகை யையொட்டி புத்தாடைகள் பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை அதை எடுத்து மகிழ்ந்தனர். மீனாட்சிபுரம் சாலை, கலெக் டர் அலுவலக சாலை, செட்டிகுளம், வட சேரி, வேப்பமூடு பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
பொதுமக்கள் குடும்பத் தோடு வந்து புத்தாடைகளை தேர்வு செய்து வாங்கி சென்றனர். இதேபோல் தீபாவளி பண்டிகையை யொட்டி பேக்கரிகளில் பல்வேறு விதமான இனிப்பு வகைகளும் தயார் செய்து வைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் அவற்றை வாங்கி சென்றனர். பட்டாசு கடைகளிலும் இன்று கூட் டம் அதிகமாக இருந்தது. பல்வேறு விதமான பட்டாசு கள் விற்பனைக்கு வந்துள் ளது. பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான பட்டாசு களை ஆர்வமாக வாங்கி சென்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், பேக்கரிகளில் கூட்டம் அலைமோதியதையடுத்து நாகர்கோவில் நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
கோட்டார், செட்டிகுளம், வடசேரி பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அண்ணா பஸ் நிலையம், வட சேரி பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட் டது. கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சுந்தரவதனம் உத்தர வின்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மப்டி உடை யில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். சந்தேகப்ப டும்படி யாக நபர்கள் யாராவது சுற்றித்திரிந்தால் அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கு மாறும் ஒலி பொருக்கி மூலமாக அறி விப்புகள் வெளியிடப்பட் டது. அஞ்சுகிராமம், கன்னி யாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, மார்த்தாண்டம், இரணியல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடை வீதிகளிலும் இன்று ஜவுளி கள் எடுப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
அண்ணா பஸ் நிலையம், வடசேரி, கோட்டார், செட்டிகுளம் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
- 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும்
- மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது
நாகர்கோவில் :
சென்னையில் அண்ணா மலை தங்கி இருந்த வீட்டில் நடப்பட்டு இருந்த பா.ஜனதா கொடிக்கம்பத்தை போலீ சார் அகற்றினர்.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன் படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி கம்பம் நடப்பட்டு கொடி ஏற்றப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்திருந்தார். ஆனால் பொது இடங்களில் கொடி யேற்றுவதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை யடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி யை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றப்படும் என்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இன்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் வீட்டில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.
ஊட்டுவாழ் மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். மாநில செயலா ளர் மீனா தேவ், மாவட்ட துணைத் தலைவர் தேவ், கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஸ்ரீதர், சந்திர சேகர், அனுசுயா, அஜித், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.
இதே போல் மூவேந்த நகர் பகுதியில் மாநில செயலாளர் மீனாதேவ் கொடியேற்றி வைத்தார். கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் பா.ஜனதா நிர்வாகிகள் கொடி ஏற்றி வைத்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.
- கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.
- கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறை அருகில் உள்ள வாவத்துறை கடலில் கடந்த 1-ந்தேதி மாலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த பிணத்தை மீட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர் யார்? என்று அடையாளம் தெரியாததால் அங்கு உள்ள குளிரூட்டப்பட்ட பிண அறையில் பாதுகாத்து வைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் வழக்குப்பதிவு செய்து கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? எப்படி இறந்தார்? என்பன போன்ற விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த அந்த நபர் யார்? என்பது பற்றி 5 நாட்களுக்கு பிறகு நேற்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள சின்ன அய்யனார் ஊத்து பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) என்பதும், அவர் பழையபொருட்கள் விற்கும் ஆக்கர் வியாபாரி என்பதும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும், இதனால் அவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் சின்னமாத்தூர் அருளானந்தம் நகர் பகுதியில் தனது தந்தையுடன் வசித்து வந்ததாகவும், குடும்ப பிரச்சினை காரணமாக கன்னியாகுமரி கட லில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.
மேலும் இந்த தகவல் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கோவிந்தராஜ் காணாமல் போனது குறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் துப்பு துலக்கப்பட்டு அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மெயின் ரோட்டை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது
- போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை
தக்கலை :
தக்கலை அருகே பனவிளை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 63). இவர் இன்று காலை டீ குடிக்க தக்கலை பனவிளை அருகில் உள்ள டீ கடைக்கு சென்று விட்டு திரும்பினார். மெயின் ரோட்டை கடக்கும் போது தக்கலையில் இருந்து அழகியமண்டபம் நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் தேவராஜ் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர் பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது சம்மந்தமாக இவரது மகன் ஏவின் ராஜா ஷாஜி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்
- சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
- 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன
கருங்கல் :
பாலூர் அருகே பரவ விளை முதல் கல்லடை செல்லும் இணைப்பு சாலை சுமார் 10 வருடங்கள் முன்பு போடப்பட்டது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இச்சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாலூர் ஊராட்சி சார்பில் மேற் கண்ட சாலையின் நடுப் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவ தற்காக குழி தோண்டி குழாய்கள் பதித்துள்ளனர். இதனால் சாலை முழு வதுமாக சேதம டைந்துள் ளது.
சாலை முழுவதும் சகதி நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்து ரோட்டோ ரமாக குடிநீர் குழாயை அமைப்பதோடு, சாலையை சீரமைத்து தார்போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
- 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன
நாகர்கோவில் :
அஞ்சுகிராமம் அருகே உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணித்தல், தானியங்கி, மேலாண்மை பொருளாதாரம் மற்றும் பயன்பாட்டு சமூக அறிவியலில் உள்ள போக்குகள் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீலமார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.
கல்லூரி முதல்வர் ராஜேஷ், இணை பேராசிரியர்கள் டாக்டர் பெனிஷா, டாக்டர் எம்.ரெஜி கருத்துரை வழங்கினர்.
ஸ்ரீனிவாஸ் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.பி.எஸ்.ஐத்தல் தலைமை விருந்தினராக பங்கேற்றார். அவர், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்கள் பற்றிய விழிப்புணர்வு அளித்து மாணவர்கள் ஆராய்ச்சியை தொடர தூண்டினார். திறமையான தன்னியக்கத்திற்கான தொழில்நுட்ப மேலாண்மை சமூகத்தில் தொழில்கள் பற்றி விளக்கினார்.
மேற்கு வங்காளம் ராய்கஞ்ச் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பி.கே. பால், பங்களாதேஷ் பேகம் ரோகேயா பல்கலைக்கழகத்தின் டாக்டர் வஸ்செட், டாக்டர்.நீல் பி.பால்பா மற்றும் பலர் விழாவில் கருத்துரை வழங்கினர். பேராசிரியர் சஞ்சு நன்றி கூறினார்.
கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சுமார் 120 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டு, 86 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்கு தேர்வு செய்யப்பட்டன. இக்கருத்தரங்கில் கல்லூரி துணை முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
- நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ராஜ கோபுரம் கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்காக தேவபிரசன்னம் பார்த்த போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றுவதற்கு பதிலாக நெய் தீபம் விளக்கு ஏற்றி வழி பாடு நடத்த வேண்டும் என்றும் அருள்வாக்கு கூறப்பட்டது.
அதன்படி மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள அம்மனின் விக்ரகம் முன்பு தினமும் நெய் தீப விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தும் முறை தொடங்கப் பட்டுள்ளது. இதனை குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
- எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்
குளச்சல் :
இரணியல் அருகே கண்டன் விளை சடையமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-
எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 12-ம் வகுப்பு, 2-வது மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று எனது இளைய மகன் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். அப்போது குசவன்குழி பகுதியை சேர்ந்த தொழிலாளி ரவி, எனது மகனை வழிமறித்து மிட்டாய் வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி அந்த பகுதியில் உள்ள காலி கட்டிடத்திற்கு அழைத்து சென் றார். பின்னர் எனது மகனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார்.
இதையடுத்து எனது மகன் அங்கிருந்து ஓடி வந்து விட்டார். இந்த நிலையில் மீண்டும் எனது 2-வது மகன் திருமண வீட்டிற்கு சென்று விட்டு வந்தபோது வலுக்கட்டாயமாக ரவி அவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட முயன்றார். இதை பார்த்த எனது மூத்த மகன் ரவியை எச்சரித்தார். இதனால் எனது மகன் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்ட ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி யிருந்தார். இதுதொடர்பாக குளச்சல் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ரவி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
- 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
நாகர்கோவில், நவ.5-
தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் துறை சார்பாக தேசிய அளவி லான கருத்தரங்கு நடை பெற்றது. தாளாளர் எபநேசர் ஜோசப் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தி னராக இஸ்ரோ சிறப்பு விஞ்ஞானி டாபினி மனோஜா கலந்து கொண்டு கணினி பொறியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் நவீன கால மேம்பாடுகள் மற்றும் பல்வேறு ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.
விழாவில் கல்லூரி முதல் வர் ஸ்பென்சர் பிரதாப் சிங், கணினி பொறியியல் துறை தலைவர் ஹாரியட் லிண்டா மற்றும் பலர் கலந்துகொண்ட னர். சுமார் 15 பொறியியல் கல்லூரிகளிலிருந்து 110 மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆய்வு கட் டுரைகளை சமர்ப்பித்தார்கள்.
விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஷெர்லி கனக பிரியா, துணை ஒருங்கிணைப்பாளர் மகிபா, மாணவர் பிரதிநிதி மெல்வின் சேம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.






