சதாவதானி பாவலர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

மாணவ-மாணவிகளுக்கு கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.500-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
சதாவதானி பாவலர் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
Published on

நாகர்கோவில், நவ.7-

நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பியாசா ஹாஜிபாபு ஏற்பாட்டில் இடலாக்குடி சதாவதானி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கண் மற்றும் பல் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தலைமையாசிரியை கவிதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஹாஜிபாபு, பொருளாளர் அன்சாரி, எஸ்.எம்.சி. தலைவி நித்யா, கவுன்சிலர் சொர்ணதாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாகர்கோவில் கோட்டார் லயன்ஸ் சங்க செயலாளர் தாஹா பாரூக் வரவேற்றார். முகாமை டாக்டர்கள் ஹசனுதீன், சேக் முஹம்மது ஆகியோர் தொடங்கி வைத்தனர். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் முஜீப் ரஹ்மான், ரியாஸ், தாஹிர், பிரபு, ஆசிரிய-ஆசிரியைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னாள் மாணவர் அத்தீக் ரஹ்மான் நன்றி கூறினார். 500-க்கும் மேற்பட்ட மாணக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com