search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் சூரிய ஒளியில் ஜொலித்த பாரத மாதா கோவில்
    X

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் சூரிய ஒளியில் ஜொலித்த பாரத மாதா கோவில்

    • சுற்றுலா பயணிகள் செல்போனில் படம் பிடித்தனர்
    • சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர வளாகத்தில் பாரத மாதா கோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் அமைந்துள்ளது. இந்த கண்காட்சி கூடத்தின் முகப்பு வாயிலில் 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலை எழுப்பப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் ராமாயண வரலாற்றை சித்தரிக்கும் சித்திரங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மேல் தளத்தில் பாரத மாதா வெண்கல சிலையுடன் கூடிய கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்படுகிறது. இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை இந்த ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சூரிய ஒளியின் பிரதிபலிப்பினால் தங்க நிறத்தில் தகதகவென்று வித்தியாசமாக ஜொலித்தது. இந்த காட்சியை இன்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் செல்போன்களில் புகைப்படம் எடுத்துசென்றனர்.

    Next Story
    ×