என் மலர்
கன்னியாகுமரி
- குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
- குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடு பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் காஸ்டின் ராபின் என்ற லக்ஸ் (வயது 22). இவருடைய நண்பர் முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (21). இவர்கள் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செ யல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இவர்களது பெயர் குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியிலிலும் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காஸ்டின் ராபினையும், ஜெப்ரினை யும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகளான காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
- பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிரேசி எவாஞ்சல் தலைமை தாங்கினார்
கன்னியாகுமரி :
மங்கலகுன்று புனித பெர்னதெத் மேல்நிலைப்பள்ளியில் அரசின் சார்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கிரேசி எவாஞ்சல் தலைமை தாங்கினார். விழாவில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் குமரேசன், இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் டிஜீ, தாளாளர் பிலிப் ஆரோக்கிய திவியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது
- அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கன்னியாகுமரி :
புத்தேரியில் வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் செல்வி பொன் ராணி தலைமை தாங்கினார். புத்தேரி ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் வினோத் திட்டத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து விளக்கி பேசினார். வேளாண் துறை உதவி பொறியாளர் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலர் ராஜேஷ், உதவி தோட்டகலை அலுவலர் ஜெனிலா ஆகியோர் தங்கள் துறை சார்ந்த திட்டங்களை விளக்கி கூறினர். இதில் அப்பகுதி விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அஜிஸ், ஷீலா ஆகியோர் செய்திருந்தனர்.
- தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
- குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறை முக தெருவை சேர்ந்தவர் லூகாஸ் (வயது 61), மீனவர். இவருக்கு மனைவியும், 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.
லூகாஸ் குடும்ப பிரச் சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தீக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் திடுக்கிட்டு அலறி னார்கள். பின்னர் தீக்காயத்தினால் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் லூகாஸ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம்
- கலெக்டர் அறிவுரை
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டா ரத்துக்குட்பட்ட நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, இரவிபுதூர் அரசு தொடக்கப் பள்ளி, வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளி, குலசேகரபுரம் அரசு தொடக் கப்பள்ளி, மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி மையங்களில் நடைபெற்ற முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல் பாடுகளை செல்போன் செயலியில் மையப் பொறுப்பாளர் பதிவேற்றம் செய்வதை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் முதல் கட்டமாக மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் உள்ள தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது 2-வது கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை கிராமத்தில் இந்நிகழ்வினை தொடங்கி வைக்க உள்ளார்.
முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளதை முன்னிட்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. சமையல் பணி, மாண வர்களுக்கு உணவு வழங்கும் பணி முடிவுற்றதை புகைப் படங்கள் வாயிலாக பதி வேற்றம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் முன்னோட்ட நிகழ்வு குமரி மாவட்டம் முழுவதும் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படவுள்ள அனைத்து அரசு பள்ளிகளி லும் நடைபெற்று வருகிறது.
ஆய்வு நடந்த நல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 69 மாணவ, மாணவிகளும், இரவிபுதூர் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 101 மாணவ, மாணவிகளும், வழுக்கம்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் 114 மாணவ, மாணவிகளும், குலசேகர புரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 97 மாணவ, மாணவிகளும், மகாதானபுரம் அரசு தொடக்கப்பள்ளி யில் பயிலும் 57 மாணவ, மாணவிகளும் பயன்பெற உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பாபு, மகளிர் திட்ட இயக்குநர் பீபீஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கருணாவதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார்.
- ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
நாகர்கோவில் :
ஆரல்வாய்மொழி அருகே உள்ள செண்பகரா மன்புதூர் யோகீஸ்வரர் காலனியை சேர்ந்தவர் கருணாகரன். இவர் அந்த பகுதியில் சவுண்ட் சர்வீஸ் வைத்துள்ளார். இவர் ஒலிபெருக்கியை சோதனை செய்யும்போது அதிகம சத்தம் கேட்பதால் இவருக் கும், அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதை கருணாகரன் தனது மகன் செல்வத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து செல்வம் தனது நண்பர் அகஸ்தியர் காலனியை சேர்ந்த ஜான் அனீஸ்ராஜாவுடன் சென்று கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைத்த நாகராஜன் வீட்டிலிருந்த வெட்டு கத்தியை எடுத்து வந்து ஜான் அனீஸ்ராஜாவை வெட்டினார். இதில் படு காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஜான் அனீஸ்ரா ஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீ சார் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நாகராஜன் (வயது 25) மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் நாகராஜன் போலீசில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஜான் அனீஸ் ராஜா பெயர் ரவுடிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை
- 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
நாகர்கோவில் :
நாடு முழுவதும் 76-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது.
இதையடுத்து அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைக்கிறார். இதைத்தொடர்ந்து சிறந்த போலீசாருக்கு பதக்கங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி களும் நடக்கிறது. சுதந்திர தினத்தையொட்டி போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்றும் நடந்தது. மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும், ஒத்திகை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
சுதந்திர தினம் கொண்டாட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1200 போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடட்டுள்ளது. மைதானம் போலீசாரின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உ ள்ளது.
மாவட்ட எல்லை பகுதி களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கண் காணிப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் கண்காணித்து வருகிறார்கள். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை உள்ள கடற்கரை கிராமங்களி லும் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடலோர காவல் படையினர் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
சுசீந்திரம் தாணுமாலை யன் சாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உட்பட அனைத்து கோவில்க ளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகி றார்கள். லாட்ஜ்களி லும் அதிரடி சோதனை நடத்தபபட்டது.
கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜ்களில் சந்தேகப்படும்படியாக நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் சோதனை மேற்கொண்ட னர்.
லாட்ஜில் உள்ள வருகை பதிவேட்டையும் அவர்கள் சோதனை செய்தனர். மார்த்தாண்டம், நாகர் கோவில் பகுதியில் உள்ள லாட்ஜ்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போலீசார் இன்று 2-வது நாளாக சோதனை மேற்கொ ண்டனர். நாகர்கோவிலில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் முழுமையான சோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட் டது. மேலும் ரெயில்வே தண்டவாளங்களில் மெட் டல் டிடெக்டர் கருவியின் மூலம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
ரெயில்வே பாலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நாங்குநேரி, வள்ளியூர், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்
நடந்து முடிந்த 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா வசந்த்-கோ சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்றது
மாவட்டத்தில் வசந்த்-கோ சார்பில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 'வசந்த் அவார்ட் 2023' வழங்கும் நிகழ்ச்சியில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
- கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் ஆபூர்வ புகைப்படங்கள் மற்றும் அவரின் சாதனைகளை விளக்கும் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. இந்த கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியை முத்தமிழ் முற்றத்தின் தலைவர் கீழப்பாவூர் சண்முகையா தொடங்கி வைத்தார்.
கருணாநிதி யின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகம் சார்பில் மாதம் ஒரு நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அந்த நிகழ்வுகள் நடத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி, ஓவியர் கோபால கிருஷ்ணன், கீதா, ஓய்வுபெற்ற ஆசிரியை ஜெயமதி ரொசாரியோ, வளர்மதி, செந்தில் வேல்முருகன் மற்றும் சுப்பையா ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்வுகள் குறித்து கலந்தாலோசித்தார்கள்.
இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
- செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
- வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது
கன்னியாகுமரி :
நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது 55). இவர் மூட்டுவலி மற்றும் மூட்டு தேய்மானத்தால் கடந்த 3 வருடங்களாக சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் குளச்சல் உடையார்விளை மிதுனா எலும்புமுறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் ஶ்ரீராம் தலைமையிலான மருத்துவ குழுவினர், நவீன முறையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
செயற்கை மூட்டுகள் பொருத்தப்பட்ட 3-வது நாளே ஜெயக்குமாரி, வேறு எந்த உதவிகளும் இன்றி நடந்தார். 5-வது நாள் வீட்டிற்கு நடந்து சென்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். பல்வேறு ஊர்களில் சிகிச்சை எடுத்தும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இத்தகைய மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு மிகக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைத்ததில் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதுகுறித்து டாக்டர் ஶ்ரீராம் கூறுகையில், மூட்டு தேய்மானம் ஆர்த்ரை டிஸ் என்பது மூட்டுகளின் வீக்கம். எலும்புகளின் முனைகளில் உள்ள திசுக்கள் படிப்படியாக சேதம் அடைவதால், மேற்பரப்பில் வெளிப்படும் எலும்புகள், மற்றொரு எலும்போடு இணையும் இடங்களில் உராய்வு ஏற்பட்டு, வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.
இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கும் முழங்காலின் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் மீட்டு எடுப்பதற்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் சிறந்த தீர்வாகும். மூட்டு மாற்றுதல் என்பது வலியிலிருந்து நிவாரணம், மேம்பட்ட இயக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்குகிறது. மேலும் மூட்டு மாற்று சிகிச்சையின் பலன் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 நாட்களிலேயே நடைபயிற்சி மற்றும் பிசியோ தெரபி மூலம் வலியின்றி இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் செல்ல முடிகிறது என்றார்.
- குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் பொதுமக்களை சந்தித்து வருகிறார்கள்.
- யானையின் மீது அமர்ந்து நூதன பிரசாரம் நடத்திய நிர்வாகிகளை பொது மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
கன்னியாகுமரி :
அ.தி.மு.க. பொன் விழா மாநாடு மதுரையில் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டி முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. அறிவுரையின்படி குமரி மாவட்ட அ.தி.மு.க.வினர் பொதுமக்களை சந்தித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தோவாளையில் ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், மாவட்ட இணை செயலாளரும் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவருமான சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் கட்சி நிர்வாகி களுடன் அலங்கரிக்கப்பட்ட யானை மீது அமர்ந்து மாநாடு குறித்த அழைப்பு களை கையில் வைத்து கொண்டு வீதி வீதியாக மக்களை அழைக்கும் விதமாக பிரசாரம் மேற் கொண்டனர். யானையின் மீது அமர்ந்து நூதன பிரசாரம் நடத்திய அ.தி.மு.க. நிர்வாகிகளை பொது மக்கள் வியப்புடன் பார்த்தனர்.
- 12 நாட்கள் நடந்த ஆடி களப பூஜை நிறைவடைந்தது
- இன்று காலை நடந்தது
கன்னியாகுமரி :
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக் கான ஆடி களப பூஜை கடந்த 31-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு 11 நாட்களும் தினமும் காலை 10 மணிக்கு வெள்ளிக்குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பச்சைக்கற்பூரம், அக்கி, இக்கி, புனுகு, பன்னீர் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
அதன்பிறகு மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க வெள்ளி குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு சென்று வெள்ளிக்குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயணரரூ முன்னிலையில் கோவில் மேல்சாந்திகள் நடத்தினார்கள். பின்னர் அம்மனுக்கு வைரகிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணி விக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்கள் நற்பணி சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.
இந்த அன்னதானத்தை பக்தர்கள் சங்க பொருளாளர் வைகுண்டபெருமாள் தலைமையில் தலைவர் பால்சாமி தொடங்கி வைத்தார். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபா ராதனையும் அதைத் தத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடந்தது.
இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து அத்தாழ பூஜையும் ஏகாந்த தீபாராதனையும் நடந்தது.
கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை 12 நாட்கள் தொடர்ந்து காலை 10 மணிக்கு நடந்து வந்த இந்த களப பூஜை நேற்று நிறைவடைந்தது. இதையொட்டி இன்று காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடந்தது.
இதையொட்டி கோவிலின் வெளிப்பிரகாரம் உள்ள தெற்கு மண்டபத்தில் கோவில் மேல்சாந்திகள் யாககுண்டம் அமைத்து இந்த பூஜையை நடத்தினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக் கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பி னர்கள், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினரும் பகவதி அம்மன் பக்தர்கள் நற்பணி சங்கத்தினரும் இணைந்து செய்து இருந்தனர்.






