search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது
    X

    கன்னியாகுமரி அருகே குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.
    • குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனை மற்றும் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடு பவர்களை போலீ சார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் சர்ச் தெருவை சேர்ந்தவர் காஸ்டின் ராபின் என்ற லக்ஸ் (வயது 22). இவருடைய நண்பர் முருகன்குன்றம் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் (21). இவர்கள் மீது கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கை யையும் மீறி காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோர் தொடர்ந்து குற்றச்செ யல்களில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இவர்களது பெயர் குமரி மாவட்ட ரவுடிகள் பட்டியிலிலும் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காஸ்டின் ராபினையும், ஜெப்ரினை யும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி குண்டர் சட்டத்தின் கீழ் ரவுடிகளான காஸ்டின் ராபின், ஜெப்ரின் ஆகியோரை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார். குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×