என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலும்பு முறிவு மருத்துவமனை"

    • செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.
    • வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது

    கன்னியாகுமரி :

    நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமாரி (வயது 55). இவர் மூட்டுவலி மற்றும் மூட்டு தேய்மானத்தால் கடந்த 3 வருடங்களாக சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் குளச்சல் உடையார்விளை மிதுனா எலும்புமுறிவு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் ஶ்ரீராம் தலைமையிலான மருத்துவ குழுவினர், நவீன முறையில் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத இறக்குமதி செய்யப்பட்ட செயற்கை மூட்டுக்களை கொண்டு 2 மூட்டுக்களையும் 3 மணி நேரத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

    செயற்கை மூட்டுகள் பொருத்தப்பட்ட 3-வது நாளே ஜெயக்குமாரி, வேறு எந்த உதவிகளும் இன்றி நடந்தார். 5-வது நாள் வீட்டிற்கு நடந்து சென்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார். பல்வேறு ஊர்களில் சிகிச்சை எடுத்தும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இத்தகைய மிகப்பெரிய அறுவை சிகிச்சைக்கு மிகக் குறைந்த செலவில் தரமான சிகிச்சை கிடைத்ததில் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    இதுகுறித்து டாக்டர் ஶ்ரீராம் கூறுகையில், மூட்டு தேய்மானம் ஆர்த்ரை டிஸ் என்பது மூட்டுகளின் வீக்கம். எலும்புகளின் முனைகளில் உள்ள திசுக்கள் படிப்படியாக சேதம் அடைவதால், மேற்பரப்பில் வெளிப்படும் எலும்புகள், மற்றொரு எலும்போடு இணையும் இடங்களில் உராய்வு ஏற்பட்டு, வழக்கமான எலும்பு இயக்கத்திலிருந்து மாறி, கடுமையான வலியை ஏற்படுத்துகிறது.

    இந்த நிலைக்கு சிகிச்சையளிப்பதற்கும் முழங்காலின் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் மீட்டு எடுப்பதற்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் சிறந்த தீர்வாகும். மூட்டு மாற்றுதல் என்பது வலியிலிருந்து நிவாரணம், மேம்பட்ட இயக்கம் மற்றும் சிறந்த வாழ்க்கை தரத்தை வழங்குகிறது. மேலும் மூட்டு மாற்று சிகிச்சையின் பலன் 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 நாட்களிலேயே நடைபயிற்சி மற்றும் பிசியோ தெரபி மூலம் வலியின்றி இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் செல்ல முடிகிறது என்றார்.

    ×