என் மலர்
கன்னியாகுமரி
- கூடுதலாக 3 வாக்குச்சாவடிகள் அமைப்பு
- பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வாக்குச்சா வடி மறு சீரமைப்பு தொட ர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலை மையில் நடந்தது.
தி.மு.க.சார்பில் அகஸ்தீ சன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிரு ஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் வக்கீல் ஜெயகோபால், பாரதிய ஜனதா சார்பில் ஜெகநாதன், தே.மு.தி.க. சார்பில் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இசக்கி முத்து மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசியல் கட்சியினர் கூறியதாவது :-
வாக்குச்சாவடிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றும்போது அதன் அருகில் இருக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும். பஸ் வசதி உட்பட அடிப்படை வசதிகள் அந்த வாக்குச்சாவடிக்கு இருக்கு மாறு செய்ய வேண்டும்.
விளவங்கோடு தொகுதி க்குட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி பகுதியில் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அதை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோல் மாவட்டம் முழுவதும் இறந்தவர்கள் பெயர்களை வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கினால் 80 முதல் 90 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடைபெறும். இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதால் தான் வாக்கு சதவீதம் நமது மாவட்டத்தில் குறைவாக இருந்து வருகிறது.
பூச்சிவிளாகம்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி னார்கள். கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் தற்போது 1695 வாக்குச்சாவ டிகள் உள்ளது. 1500 வாக்கா ளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு cள்ளது. அதன்படி பத்ம நாபபுரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகள் கூடு தலாக அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தற்போது 1698 வாக்கு சாவடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி தொகு தியை பொறுத்த மட்டில் 310 வாக்குச்சாவடிகளும், நாகர்கோவிலில் 275 வாக்குச்சாவடிகளும், குளச்சலில் 300 வாக்குச்சா வடிகளும், பத்மநாப புரத்தில் 273 வாக்குச்சாவடிகளும், கிள்ளியூ ரில் 268 வாக்குச்சா வடிகளும், விளவங்கோட்டில் 272 வாக்குச்சாவடிகளும் தற்பொழுது உள்ளது.
கன்னியாகுமரி தொகுதி யில் 3 வாக்குச்சாவடியும், நாகர்கோவில் தொகுதியில் 16 வாக்குச்சாவடியும், குளச்சல் தொகுதியில் 5 வாக்குச்சாவடியும், பத்மநாப புரத்தில் 10 வாக்குச்சாவடியும், விளவங்கோடு தொகுதியில் 28 வாக்குச்சாவடியும் , கிள்ளியூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடி என 64 வாக்குச்சாவடிகள் தற்பொ ழுது செயல்பட்டு வரும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
6 சட்டமன்ற தொகுதி களிலும் 22 வாக்குச்சாவடி களின் பெயர்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது .
அரசியல் கட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி மாற்றம் தொடர்பாக 2 நாட்களுக்குள் எழுத்து பூர்வமாக தகவல் கொடுத்தால் அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம் மற்றும் தேர்தல் தாசில்தார் சுசீலா, தாசில்தார்கள் ராஜேஷ், வினைதீர்த்தான், கண்ணன், அனிதா குமாரி, குமாரவேல், முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
- சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இரணியல் :
நாகர்கோவில் அருகே உள்ள களியங்காட்டை சேர்ந்தவர் ஈசான சிவம் என்ற ராஜா (வயது 33). இவர் இந்து தமிழர் கட்சி யின் மாநில பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு ஈசான சிவம் வெளியே சென்று விட்டு தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். நள்ளிரவு ஒரு கும்பல் அவரது கார் மீது கற்களை வீசி உடைத்ததுடன் வீட்டையும் சேதப்படுத்தியது. இதுகு றித்து ஈசான சிவம் இரணி யல் போலீசில் புகார் செய்தார். வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. கேமராவின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ஈசான சிவத்தி ற்கும் நாகர்கோவில் பகுதி யைச் சேர்ந்த ஜெபின் என்பவ ருக்கும் இடையே மோட்டார் சைக்கிள் வாங்கியது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த விரோ தத்தில் ஜெபின் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஈசானசிவத்தின் காரை கல்வீசி தாக்கி யிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜெபின் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற் கிடையில் சுசீந்திரத்தைச் சேர்ந்த சங்கர், முன்னப்பன் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு வரும் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தப் பப்பட்டு ஜெயிலில் அடைக் கப்பட்டனர். தலை மறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீ சார் தேடி வருகிறார்கள்.
- விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.
- மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட விவசாயிகளால் கும்பப்பூ நெல் சாகுபடி தற்போது பயிரிடப்பட்டு வரு
கிறது. அதேபோல் அகஸ்தீ ஸ்வரம் தென்தாமரை குளம்ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இலந்தையடிவிளை, முகிலன்குடியிருப்பு, கிண்ணிக்கண்ணண்விளை, கோவில்விளை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகள் தெற்கு பத்தில் சுமார் 750 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிர் பயிரிட்டுஉள்ளனர்.
இதற்காக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நடவு உள்ளிட்ட முதல்கட்ட பணிகளை செய்து முடி த்துள்ளனர். தற்போது நெற்பயிர் சிறிதளவு வளர்ந்து வரும் நிலையில் தெற்கு பத்துக்கு தண்ணீர் வரும் தலக்குளத்தின் மறுகால் நிரம்பாததால் வயல்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.
தண்ணீர் இல்லாததால்வ யல்களில் வெடிப்பு ஏற்பட்டு நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. முப்போகம் விளையும் இம்மண்ணில் தற்போது இருபோகம் விளைவதே கேள்விகுறியாகி வருகிறது.
நஷ்டம் ஒரு பக்கம் ஏற்பட்டு வந்தாலும்பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் ஆழ்ந்த சோகத்தில் மனமு டைந்து கண்ணீரும் கம்பலையுமான நிலை யில்இருந்து வருகின்றனர். எனவே விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள தலக்குளத்தின் மறுகால் நிரம்ப பொதுப் பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
- விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
- ரெயில்வே அதிகாரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்தும் சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுவாமியார்மடம் கால்வாய் மற்றும் இரணியல் நீர் மேம்பாலம் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கிள்ளியூர், குருந்தன்கோடு, திருவட்டார், தக்கலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக பாசனத்திற்கு நீரின்றி தவித்து வருகின்றனர். தென்னை, வாழை சாகுபடி பாசனத்திற்கு நீர் இல்லாததால் மிகவும் பாதிப்படைந்து உள்ளது.
இரணியல் ரெயில்வே மேம்பால சானல் பணிகள் முடிந்த போதிலும் கட்டுமான குறைபாடுகளின் காரணமாக கடைவரம்பு வரை நீர் செல்வது தடை பட்டது. ரெயில்வே அதி காரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்தும் அதனை சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது மிகவும் மந்த கதியில் பணிகள் நடை பெற்று வருகிறது. அது போன்று மாநில பொதுப் பணித்துறை மற்றும் நீர்பாசன துறையினர் சுவாமியார்மடம் கால் வாயில் சீரமைப்பு பணிகள் செய்து வருகின்றனர். பல முறை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்த பின்ன ரும் இந்த பணி முடி வடையாமல் உள்ளது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கால்வாய்களில் கடைவரம்பு வரை நீர் கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியம். ரெயில்வே மற்றும் பொதுப் பணித்துறை நிர்வாகங்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பணிகளை மிக விரைவில் முடித்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
இந்த பணிகளை முடித்து இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயனடையும் வகையில் பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
- சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் செல வில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்ட பணியின் தொடக்க விழா கொட்டாரம் மிஷியன் காம்பவுண்ட் பகுதியில் இன்று காலை நடந்தது.
கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜநம்பி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு புதிய குடிநீர் திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, கொட்டாரம் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும், பேரூர் தி.மு.க. செயலாளருமான வைகுண்டபெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் வசந்தகுமாரி, இந்திரா, பேரூராட்சி பொறியாளர் கமால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நகர்புற சாவைகள் மேம்பாட்டுத் திட்டம் 2023 - 24 கீழ் ரூ.79.95 லட்சம் மதிப்பில் தென்தாமரைகுளம் முஸ்லீம் பள்ளிவாசல் முதல் விஜயநகரி ஜங்சன் வரை தார் சாலை அமைத்தல், மேலசந்தையடி
சி.எஸ்.ஐ. சர்ச் சாலை தார்சாலை அமைத்தல் ஆகிய பணிகளின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
அமைச்சர் மனோ தங்க ராஜ் பணியை தொடங்கி வைத்தார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபு, வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரை பாரதி, தென் தாமரை குளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகாபிரதாப்,
பேரூராட்சி உறுப்பி னர்கள் சவுந்தர்ரா ஜன், பூவியூர் காமராஜ். எட்வின் ராஜ், ஆல்வின், கான்ஸ்டன் டைன் பேரூராட்சி செயல் அலுவலர் சந்தோஷ் மற்றும் பொறியாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வா கிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள நாவல் காடு நம்பியான் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நெல்சன் (வயது 50), பெயிண்டர். அதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரிச்சர் (43). இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை உள்ளது. இதன் காரணமாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
மேலும் கடந்த 2021-ம் ஆண்டு ரிச்சரை தாக்கியதாக நெல்சன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று இரவு நாவல் காடு பகுதியில் நெல்சன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரிச்சர் அவரை வழிமறித்து தகராறு செய்தார். இருவரும் தகாத வார்த்தையால் மாறி மாறி பேசினார்கள். இதில் ஆத்திரம் அடைந்த ரிச்சர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நெல்சனை சரமாரியாக வெட்டினார்.
கன்னம், வயிறு, மணிக்கட்டு பகுதிகளில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த நெல்சன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ரிச்சர், பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். நெல்சனை கொலை செய்த தகவலை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். நெல்சன் கொலை செய்யப்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பிணமாக கிடந்த நெல்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட நெல்சனின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் திரண்டு இருந்தனர். இதற்கிடையில் போலீசில் சரணடைந்த ரிச்சரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முன் விரோதம் காரணமாக பெயிண்டர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூதப்பாண்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவ- மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கினார்.
- கிழக்கு வட்டார செயல் தலைவர் அசிம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் உள்ள புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்த கழிப்பிட வசதி செய்து தர வேண்டி பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8.5 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டி முடிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவர்களுக்கான கழிப்பிட கட்டிடங்களை இன்று (21. 08. 2023) இராஜக்கமங்கலம் வட்டார தலைவர் அசோக்ராஜ் தலைமையில் கீழமணக்குடி பங்கு பணியாளர் ஆன்றனி பிரபு முன்னிலையில் மாணவர்களுடன் இணைந்து, கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் பள்ளியில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து மாணவ- மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் கீழமணக்குடி லாரன்ஸ், மணக்குடி பஞ்சாயத்து தலைவர் சிறில் நாயகம், பள்ளம் பஞ்சாயத்து தலைவர் கேவின், ஒன்றிய கவுன்சிலர் கேத்தரின் பிரபு, கிழக்கு வட்டார பொருளாளர் செல்லப்பன், பறக்கை ராபின்சன், ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார செயல் தலைவர் அசிம் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்
- விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது
நாகர்கோவில் :
தோவாளை 4 வழிச்சா லையில் புதிதாக கிளா ஸ்கோ பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. அகத்தியர் முனி குழ ந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பேட்ரிக் சேவியர், பங்குதந்தைகள் பிரைட் (தேவசகாயம் மவுண்ட்), ஸ்டீபன் (குறு ம்பனை), புரூனோ (வட சேரி), கோட்டாறு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் ஆகி யோர் அர்ச்சிப்பு செய்தனர். ஜாஷ்வா அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் மனோதங்கராஜ் புதிய பெட்ரோல் பங்கை திறந்து வைத்தார். டீசல் வினியோக எந்திரத்தை எச்.பி.சி.எல். மதுரை துணை பொது மேலாளர் செல்ல பிரபு திறந்து வைத்து முதல் விற்ப னையையும் தொடங்கி வை த்தார். அதனை குமரி விற்ப னை அலுவலர் டிம் ஜெ ய்ரூஸ் பெற்று க்கொ ண்டார். பெட்ரோல் வினி யோக எந்திரத்தை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். அதனை எச்.பி.சி.எல். மதுரை ரீடெய்ல் என்ஜி னீயரிங் தலைமை மேலாளர் சுரேஷ்குமார் பெற்று க்கொண்டார்.
நிகழ்ச்சியில் விஜய்வசந்த் எம்.பி., சகாயநகர் ஊராட்சி தலைவர் மகேஷ் ஏஞ்சல், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்கு மார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாக இயக்குனர் போஸ்கோ நன்றி கூறினார். முன்னதாக விழாவில் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிளாஸ்கோ பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- எம்.பி.,-எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
- 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
நாகர்கோவில் :
மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளை கண்டித்தும் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோட்டாரில் நடந்த பிரசார கூட்டத்தில் விஜய்வந்த் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். நாகர்கோவில் மேலராமன் புதூரில் நடந்த மண்டல விழிப்புணர்வு கூட்டத்திற்கு மண்டல தலைவர் புகாரி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். துணை தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். வார்டு தலைவர் ஜோதி லிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் நாகர்கோ வில மண்டலத்தில் கோட்டார், பெருவிளை, அருகுவிளை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே உட்பட 8 இடங்களில் இந்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 23 ஊராட்சி மற்றும் பேரூ ராட்சிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கருங்கல் பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெருவுக் கடை சந்திப்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரூ ராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் எம்.எல்.ஏ.வு மான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் காங் கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குளச்சல் நகர காங்கிரஸ் சார்பில் காமராஜர் பஸ் நிறுத்தத்தில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லுக்கூட்டம் பேரூர் காங்.சார்பில் உடை யார்விளை சந்திப்பில் தெருமுனை விளக்க கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் மனோகரசிங் தலைமையில் நடந்தது. மாநில பேச்சாளர் குமரி மகாதேவன்,பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது
- நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்
கன்னியாகுமரி :
கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் விழா, கருங்கல் ராஜீவ் சந்திப்பில் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். நிகழ்ச்சியில் கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமரேசன், மாநில பொதுச்செயலாளர் ஆஸ்கார் பிரடி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், காங்கிரஸ் மனித உரிமை துறை கிள்ளியூர் தொகுதி தலைவர் ராஜகிளன் மற்றும் துணை அமைப்புகளின் வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்.
- இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது.
- ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது.
நாகர்கோவில் :
தமிழகத்தின் கடைகோடி மாவட்டமான குமரி மாவட்ட மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாநி லத்தின் தலைநகரமான சென்னைக்கும் பிற ஊர்களுக்கும் அடிக்கடி செல்ல வேண்டி உள்ளது. இதற்கு ரெயில் சேவை மிக முக்கியமாக உள்ளது.
ஆனாலும் இரட்டை ரெயில் பாதை இல்லாத தால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் இருக்கின்ற ரெயில்களும் கிராசிங்கிற்காக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக செல்லும் நிலை நிலவுகிறது.
இந்த நிலையை மாற்ற மதுரையிலிருந்து நாகர்கோ வில் வரையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது இதில் மதுரை-திருநெல்வேலி இடையேயான பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன.
தொடர்ந்து திருநெல்வேலி- நாகர்கோவில் இடையேயான இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடை பெற்று வருகின்றன. இதற்காக முதல் கட்ட மாக பாலங்கள் கட்டப் பட்டன.தொடர்ந்து தண்டவாளங்களை அமைப்ப தற்காக மண் சீர மைக்கப்பட்டு அதன் மீது ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த பணிகள் பெரும் பாலான இடங்களில் முடிந்து விட்டன. தற்போது ஆரல்வாய்மொழி-நாகர் கோவில் இடையே தண்ட வாளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. மேலும் சிக்னல் விளக்குகள் அமைக்கும் பணியும் இந்த பாதையில் நடந்து வருகிறது.
தோவாளை- நாகர்கோ வில் சந்திப்பு ரெயில் நிலை யம் இடையே உள்ள பழை யாற்று பகுதியில் ஏற்கனவே ஒரு பாலம் இருந்த அளவில் தற்போது மேலும் மூன்று பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒரு பாலம் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையிலும் மற்ற 2 பாலங்கள் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலை யத்திற்கு ரெயில்கள் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் தற்போது கருங்கல் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. மேலும் நாகர்கோவில் சந்திப்பு ெரயில் நிலையத்தில் இட நெருக்கடி உள்ளதால் நடைமேடை விஸ்தரிப்பு பணியும், முனைய விரி வாக்க பணியும் தொடங்க ப்பட இருக்கிறது.
இந்த பணியை முழு வீச்சில் செய்து முடிக்க ெரயில்வே நிர்வாகம் திட்ட மிட்டுள்ளது. திருநெல்வேலி வழித்தடத்தில் மேலும் 2 தண்டவாளங்கள் அமைந் தால் ெரயில்கள் தாமதம் இன்றி செல்ல வழி வகுக்கும். இதே போல் நாகர்கோவில் கன்னி யாகுமரி இடையேயான இரட்டை ெரயில் பாதை பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
சாமிதோப்பு, சுசீந்திரம், அகத்தீஸ்வரம், வடக்கு தாமரை குளம் போன்ற பகுதிகளிலும் ஜல்லிகள் கொட்டப்பட்டு தண்ட வாளங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெற்கு ெரயில்வே பொது மேலாளர் நேரில் ஆய்வு செய்தார். அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த பணிகள் மேலும் வேகம் எடுத்துள்ளன.
இதனால் இரட்டை ெரயில் பாதை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே விரை வில் நாகர்கோவில்- கன்னியாகுமரி- திருநெல்வேலி இரட்டை ெரயில் பாதை பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ெரயில் சேவை தொடங்கும் பட்சத்தில் நாகர்கோவிலில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும் பயண நேரம் குறைய வாய்ப்பு இருக்கிறது.
ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியும் தீவிரமாக நடை பெற்று வருகிறது.
- தாயார் திட்டியதால் விபரீத முடிவு
- தங்கள் குல தெய்வம் கோவில் பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
கன்னியாகுமரி :
தக்கலை அருகே உள்ள கீழ கல்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் பிரதீப்குமார் (வயது 24). 8-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர், மரம் ஏறும் தொழிலுக்கு சென்று வந்தார்.
ஆனால் பிரதீப்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவருக்கு மது பழக்கமும் இருந்துள்ளது. இதனை தாயார் லீலா கண்டித்துள்ளார்.
நேற்று இரவு பிரதீப்கு மார் வீட்டிற்கு வந்து உணவருந்தினார். அப்போதும் வேலைக்குச் செல்லாதது பற்றி தாயார் கேட்டுள்ளார். இதனால் மன வேதனை அடைந்த அவர், அந்தப் பகுதியில் உள்ள தங்கள் குல தெய்வம் கோவில் பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இன்று காலை அந்தப் பக்கம் சென்றவர்கள், அங்குள்ள மரத்தில் பிரதீப்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்துள்ளனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். இதற்கிடையில் தக்கலை போலீசாரும் அங்கு வந்தனர்.
அப்போது பிரதீப்குமார் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதீப்குமாரின் தாயார் லீலா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






