என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • 3 ஆயிரத்து 844 பேர் எழுதுகிறார்கள்
    • கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் (ஆண் மற்றும் பெண்) பதவிகளுக்கான முதன்மை தேர்வு 26-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. மொழித் தகுதி தேர்வு மதியம் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை நடக்கிறது.

    இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 844 பேர் எழுத உள்ளனர். இதற்காக மொத்தம் 4 தேர்வு மையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. அதாவது நாகர்கோவில் பார்வதிபுரம் பொன் ஜெஸ்லி என்ஜினீய ரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா இன்ஸ்டிடியூட், சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி.எஸ்.ஐ. இன்ஸ்டிடியூட் ஆகிய 4 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.

    விண்ணப்பதாரர்கள் அன்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படு வார்கள். தேர்வுக் கூட அனுமதி சீட்டில் குறிப்பிட் டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையத்தினை மாற்றம் செய்ய இயலாது. தேர்வு கூட அனுமதி சீட்டினை கொண்டு வராத விண்ணப்பதாரர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய வேறு அடையாள அட்டையை கொண்டு வருவது உகந்தது.

    செல்போன், கால்கு லேட்டர், பிற எலக்ட்ரானிக் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட் கைக்கடிகாரம் தேர்வு மையத்துக்குள் கண்டிப்பாக அனுமதிக்கப் பட மாட்டாது. எழுத்து தேர்வுக்கு வரும்போது கருப்பு அல்லது நீல நிற பால்பாயிண்ட் பேனா கொண்டு வர வேண்டும். பென்சில் கொண்டு வருதல் கூடாது.

    தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வாணைய இணையதளமான www.tn.gov.in/tusen.com என்ற இணைய தளத்திலிருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652-220167 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பைக் வாங்குவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம்
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவில், குட்டைக்காடு வனசாஸ்தா கோவில் மற்றும் தென்னூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நாளில் கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது.

    இந்த தனிப்படையினர் கோவில் கொள்ளை யர்களை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை யர்கள் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சாமியார்மடம் நெடியாங்கோடு, மேல்விளை பகுதியை சேர்ந்த சபரி (வயது 22), புலிப்பனம் கல்நாட்டிவிளை பகுதியை சேர்ந்த சாமுவேல்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான சபரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    10-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் கட்டிட தொழில் செய்து வந்தேன். அப்போது கருங்கல் பகுதியை சேர்ந்த ஜெனிஷா என்பவருடன் இன்ஸ்டா கிராமில் பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தேன். என் மீது மார்த்தாண்டம், திரு வட்டார், தக்கலை ஆகிய போலீஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனம் திருட்டு, கஞ்சா கடத்தல் ஆகிய வழக்குகளும் உள்ளன.

    கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சாமியார்மடம் ஆர்.சி சர்ச் அருகில் உள்ள சாமுவேல்ராஜ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது விலை உயர்ந்த வாகனங்களில் இளை ஞர்கள் செல்வதை பார்த்து, இந்த மாதிரி நாமும் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு தேவை யான பணத்திற்காக, பெரிய வீடுகள், கோவில்க ளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

    அதன் படி இருவரும் பகல் நேரங்களில் பெரிய வீடுகள், கோவில்களை நோட்டம் பார்த்து விட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிப்போம். கடந்த பிப்ரவரி மாதம் செறுகோல் கும்பளத்தில் உள்ள மஹாதேவர் கோவி லின் மதில் ஏறி குதித்து உள்ளே சென்றோம். அங்கு கொள்ளையடித்ததை, சாமுவேல் ராஜின் வீட்டின் பின்னால் ரப்பர் தோட்டத் தில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைத்து வைத்தோம்.

    தொடர்ந்து வலியாற்று முகம் இசக்கி அம்மன் ஆலயம், கன்னங்கரை ஸ்ரீவன சாஸ்தா கோவில் போன்றவற்றிலும் கை வரிசை காட்டினோம். அதன் பிறகு கோலத்து விளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் சென்று கோவிலின் பூட்டை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை அறுத்து எடுத்தோம்.

    கோவிலின் உண்டியலை உடைத்து பணம் எடுக்கும் போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திருடன்... திரு டன்... என்று சத்தம் போட்டார்கள். நான் பின் பக்கம் மதில் ஏறி தப்பி சென்றேன். சாமுவேல்ராஜ் முன்பக்கம் வழியாக தப்பி செல்லும் போது உண்டியல் பணம் மற்றும் அவனது செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை விட்டு விட்டு சென்று விட்டோம்.

    கையில் இருந்த சில்லறை காசுகளை கொண்டு ஜாலியாக செலவு செய்து சுற்றி வந்தோம். திருடிய நகை மற்றும் வெணகல விளக்குகளை ஏதாவது நகைகடையில் விற்கலாம் ஏன்று ஆலோசனை செய்து கொண்டு இருந்தோம். நேற்று மாலை சாமியார் மடம் அருகில் 2 பேரும் ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று பேசி கொண்டு இருக்கும் போது போலீசார் எங்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவ்வாறு அவன் கூறி உள்ளான்.]

    • தி.மு.க. கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் பேச்சு
    • தமிழக கவர்னர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் அண்ணா விளை யாட்டு அரங்கம் முன்பு நடந்தது. வடக்கு பகுதி செயலாளர் ஜவகர் வர வேற்று பேசினார்.

    குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று பேசியபோது, "முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஒழுக்கம், நன்னடத்தை உடையவர். எனவே அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி. தலைவ ராக பரிந்துரை செய்து கவர்னருக்கு அனுப்பினார். தகுதியானவரை தகுதி யுள்ள பதவிக்கு பரிந்துரை செய்வது தி.மு.க.வின் வழக்கம்.

    ஆனால் கவர்னர் அதை நிராகரித்து உள்ளார். எங்கோ இருந்து வந்த அவர், தமிழ் கலாசாரம் மற்றும் திராவிடம் பற்றி தெரியாத அவர் அனைத் துக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். அதை முறிய டிக்க வேண்டும். நல்லது செய்ய இடையூறாக இருக்கும் கவர்னரை மாற்ற வேண்டும். ஆனால் அதற்கு மத்திய அரசு தயாராக இல்லை. அவர் முட்டு கட்டை போட்டால் தான் அவரை அமித்ஷா ஏற்றுக் கொள்வார். அண்ணாமலை சென்றது நடைபயணம் இல்லை. சொகுசு நடை பயணம்" என்றார்.

    கூட்டத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பங்கேற்று பேசியதாவது:-

    கலைஞர் என்பது வெறும் பெயர் அல்ல. சந்தன தமிழின் சிந்தனை ஊற்று. கலைஞர் பட்டம் பெறவில்லை. ஆனால் தலைமை தாங்கினார். 60 ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சமம் யாரும் இல்லை. ஆனால் அவருக்கு சமமானவரை நிலைநிறுத்த பாசிஸ்டுகள் திட்டம் போட்டுள்ளனர். அதற்காக தான் நடை பயணம் நடக்கிறது. நடைபயணத்துக்கு சொகுசு காரில் வருகிறார். அவதூறு களை அள்ளி வீசுகிறார். கை அசைக்க யாரும் இல்லை என்றாலும் கை அசைக்கிறார். திட்டம் போடுபவர்களிடம் இருந்து மு.க.ஸ்டாலினை மீட்க வேண்டும் என்பது இல்லை. தமிழகத்தை மீட்க வேண்டும்.

    மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சமம் இல்லை. ஆனால் சமமாக இருக்க அவர் துடிக்கிறார். மதுரையில் மாநாடு போட்டார்கள். மாநாட்டில் தீர்மானம் போட்டது வேறு. ஆனால் மாநாட்டின் நோக்கம் என்ன? மாநாடு நடந்த அன்று மதுரையில் மதுபானங்கள் விற்று தீர்ந்தன. சிவகங்கை மாவட்டத்திலும் கோடிக் கணக்கில் மது விற்பனை நடந்துள்ளது. கலைஞர் காலத்தில் செய்ய முடியாததை எல்லாம் செய்ய முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முழு மதிப்பெண்ணுக்கு கூடுதலாக 1 மதிப்பெண் எடுத்தாலும் டாக்டர் ஆக முடியாத நிலை உள்ளது. தி.மு.க.வை விமர்சித்தால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தி.மு.கவை அப்புறப்படுத்தி விடலாம் என்று நினைக்கி றார்கள். அதற்கான நாடகம் தான் நடைபயணம். கர்நாடகாவில் பா.ஜனதா வால் வெற்றி பெற முடி வில்லை. பணத்தை அள்ளி வீசிய நிலையிலும் சிவ குமார் வெற்றி பெற்றார்.

    பிரதமர் ரோடு ஷோ நடத்தி இருக்கிறார். ஆனாலும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஒரே மொழி ஒரே நாடு என்று இந்தி யாவினுடைய அரசியல் அமைப்பு சட்டத்தை கிழித்து நொறுக்கி இந்த நாட்டின் அதிபராக வேண்டும் என்று மோடி ஆசைப்படுகிறார். தமிழக ஆளுநர் ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்து கிறார். அதிகார துஷ்பிர யோகம் செய்கிறார். நீட்டுக்கு விதிவிலக்கு கேட்டு தமிழ்நாடு அரசு தீர்மானத்தில் கையெழுத்து போட முடியாதால் தந்தையும் மகனும் இறந்து போனார்கள். மணிப்பூரில் திட்டமிட்டு இனப்படு கொலை நடத்தப்பட்டுள்ளது

    9 ஆண்டு பாரதிய ஜனதாவின் மத்திய ஆட்சியில் ரூ. 7.50 கோடி ஊழல் நடந்துள்ளது. செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை 17 மணி நேரம் விசாரிக்க என்ன இருக்கிறது. பா.ஜனதா கட்சி இனி ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநில நிர்வாகிகள் பசலி யான், தில்லை செல்வம், தாமரை பாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.
    • வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் நாய்களை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து மேயர் மகேஷ் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. ஆணையாளர் ஆனந்தமோகன், நகர்நல அதிகாரி ராம்குமார் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கூறுகையில், நாகர்கோவில் நகரில் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்களில் அதிகளவு நாய்கள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளையும் நாய்கள் கடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கு பதிலளித்து மேயர் மகேஷ் கூறுகையில், நாய்களை துன்புறுத்தி பிடிக்க முடியாது. நாய்களை பிடிக்க ஜீவகாருண்யா டிரஸ்ட் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிடிக்கப்படும் நாய்களுக்கு கருத்தடை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 52 வார்டுகளிலும் நாய்க ளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தந்த கவுன்சிலர்கள் ஜீவகா ருண்யா டிரஸ்டை தொடர்பு கொண்டு நாய்களைப் பிடிக்க தகவல் தெரிவிக்கலாம்.

    இதன் மூலமாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாய்களுக்கு கருத்தடை செய்தால் மட்டுமே இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஒரு வார்டில் ஒரு மாதத்தில் 50 நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தால் விரைவில் நாய்களை கட்டுப்படுத்திவிடலாம்.

    வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் தெருக்களில் விடப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    நாகர்கோவில் மாநகராட்சி 19-வது வார்டுக்குட்பட்ட மேல ஆசாரிபள்ளம், அய்யா கோவில் அருகில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, 20-வது வார்டுக்குட்பட்ட அருந்ததியர் காலனி பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி போன்ற வற்றை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். மேலும் 29-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் சர்ச் அருகில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட வயல் தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்தளம் அமைக்கும் பணி, 43-வது வார்டுக்குட்பட்ட கலை நகர் பிரதான சாலையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி மற்றும் மறவன்குடியிருப்பு மாதா மஹால் அருகில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி போன்றவற்றையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாநகராட்சி உதவி பொறியாளார் சுஜின், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர்கள் மோனிகா, ஆன்றோ ஸ்னைடா, விஜயன், சுகாதார ஆய்வாளர் சத்தியராஜ், ஜான், தி.மு.க செயற்குழு சதாசிவன், இளைஞரணி அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் சேக்மீரான், துரை, ஜீவா, வட்ட செயலாளர்கள் விமல், பாஸ்கர், முகம்மது பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூக்களை வாங்க ஆள் இல்லாததால் வியாபாரிகள் கவலை
    • பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்கிறது

    ஆரல்வாய்மொழி :

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி பேசும் மக்கள் எல்லாம் மாவேலி மன்னனை வரவேற்க வீட்டின் முன் அத்தப்பூ கோலமிட்டு ஓன சத்தியா விருந்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். வருகிற 29-ந் தேதி ஓணம் கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை துவங்கிய நாள் முதல் தோவாளை பூச்சந்தைக்கு குவியும் கேரளா மக்களால் வியாபாரம் படுஜோராக நடக்கும்.

    இந்த ஆண்டு தலைகீழ் ஓணம் துவங்கிய மூன்றா வது நாள் ஆனால் வியாபாரம் இல்லை. ஒரு கிலோ மல்லிகைப்பூ 300 ரூபாய்க்கும், ஒரு தாமரை 12 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 500, சேலத்துஅரளி 170, தோவாளை அரளி 140, கொழுந்து 80, மஞ்சள் கேந்தி 50, சிவப்பு கேந்தி 60 மரிக்கொழுந்து 120, என பல பூக்களும் விலை குறைந்து காணப்படுகிறது.

    தோவாளை பூச்சந்தைக்கு வெயிலின் காரணமாக பூக்கள் அதிக அளவில் வந்துள்ளது. ஆனால் கேரளா மக்கள் வருகையில்லாததால் பூக்கள் விலை குறைந்து வாங்க ஆளில்லை. இதனால் வியாபாரிகள் சோகம் அடைந்துள்ளனர்.

    மேலும் கேரளாவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெறுவதாலும், மக்களிடையே ஓணம் கொண்டாடுவதில் ஆர்வம் குறைவதாலும், அதைவிட முக்கியம் பெங்களூர், ஓசூர் உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து பூக்கள் நேரடியாக கேரளாவுக்கு செல்வதாலும், தோவாளை பூச்சந்தையில் வியாபாரம் குறைந்து வெறிச்சோடி இருப்பதாக கூறப்படுகிறது.

    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
    • இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு வழி பாதையில் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நடைபாதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

    வேப்பமூடு முதல் டதி பள்ளி வரை உள்ள சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமை யிலான போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நடைபாதையில் கார் ஒன்று நிறுத்தப்பட்டி ருந்தது. போலீசார் காரின் வாகன உரிமையாளரை தேடிப் பார்த்தனர்.

    ஆனால் அவரை காணவில்லை. இதையடுத்து அந்த காருக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேராக வந்தவர்களும் இந்த சோதனையில் சிக்கினார்கள். அவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    • வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது
    • மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    நாகர்கோவில், ஆக.22-

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் இந்தக் கூட்டம் நடை பெறுகிறது.

    கூட்டத்தில், ஜூலை மாத குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளா கத்தில் உள்ள மாற்றுத்திற னாளிகள் நல அலு வலகத்தில் செய்யப்பட்டி ருக்கும். கலெக்டரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எம்.பி., எம். எல். ஏ.க்கள் பங்கேற்பு
    • வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் கொடித்தாறா விளை பகுதியைச் சேர்ந்த வர் வக்கீல் பால்மணி. இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி மேரி விஜயராணி காப்புக்காடு புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்த தம்பதியினரின் மகள் ஜெனிஷா பால்-க்கும், கருங்கல் உலகன் விளையை சேர்ந்த ஜஸ்டஸ் மற்றும் கிளார் கிறிஸ்டல் பியாட்டரிஸ் தம்பதியினரின் மகன் ஜகித் தேவப்பிரிய னுக்கும் நேற்று கீழ்குளம் பாத்திமா நகர் புனித ஜான் போஸ்கோ ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.திருமணத்தை ஆயர் ரெமிஜியூஸ் நடத்தி வைத்தார்.

    இந்த திருமண விழாவில் விஜய் வசந்த் எம்.பி., ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர்.பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மேற்கு மாவட்ட அதிமுக செயலா ளர் ஜாண் தங்கம், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத் தம்பி, கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிரிஸ்டல் ரமணி பாய், களியக்காவிளை பேரூராட்சித் தலைவர் சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, முன்னாள் மேல்புறம் வட் டார தலைவர் சதீஷ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மணமக் களை வாழ்த்தினார்கள். வாழ்த்திய அனைவருக்கும் மணமக்கள் சார்பில் வக்கீல் பால் மணி நன்றி கூறினார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா பொறுப் பேற்றது முதல் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மூலம் பெற்று தந்து வருகிறார். சமீபத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது திங்கள்நகர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரம், கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 3 லட்சத்திற்கும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ. 93.7 லட்சம், நெய்யூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 11 லட்சம் என மொத்தம் ரூ. 6 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்கான சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணிகளின் தொடக்க விழா அந்தந்த பேரூராட்சி பகுதிகளில் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்கள் திங்கள்நகர் சேவியர் ஏசு தாஸ், கல்லுக்கூட்டம் ரஜூ லின் ராஜகுமார், ரீத்தாபுரம் சுஜெய் ஜாக்ஸன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுமன், மனோகரசிங், பிரதீபா, காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் லாரன்ஸ், குளச்சல் சபீன், ஜெயசகிலா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் கழக நிர்வாகி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 28-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    • கன்னியாகுமரியில் ஓணப்பண்டிகையை முன்னிட்டு நடைபெறுகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன்கோவிலில் ஓணம் பண்டிகை வருகிற 28-ந்தேதி முதல்30-ந்தேதி வரை3நாட்கள்நடக்கிறது.வருகிற 28-ந்தேதி உத்தி ராடம் நட்சத்திரத்தை யொட்டி பச்சை நிறப்பட்டும், 29-ந்தேதி திருவோண நட்சத்திரத்தை யொட்டி கேரளபாரம்பரிய உடையான வெண்பட்டும், 30-ந்தேதி அவிட்டம் நட்சத்திரத்தையொட்டி சிவப்புநிற பட்டும் பகவதி அம்மனுக்கு ஓணக்கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    இந்த 3 நாட்களும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அபிஷேகம் முடிந்ததும் பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணி விக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் ஓணக்கோடிபட்டு அணிவித்து அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடக்கிறது. பின்னர் 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. பின்னர் காலை 8 மணிக்கு ஸ்ரீ பலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடக்கிறது. மதியம் உச்சி கால பூஜையும் உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனை யும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன் மற்றும் அறங்கா வலர் குழு உறுப்பினர்கள், இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகிறார்கள்.

    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    • நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் 98-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 2 ந்தேதி தொடங்கி யது. 20 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராம திலகம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பொருட்காட்சியில் நடைபெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது.

    மேலும் பொருட்கா ட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசா யிகளின் விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள், கண்காட்சி பொருட்கள், ஓவியங்கள் போன்ற வற்றில் சிறந்த பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி பேசும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிக்கு மட்டும், 2 வருடங்களில் சுமார் ரூ.5 கோடி ஒதுக்கப்ப ட்டுள்ளது. முதலில் ரூ.3 கோடியும், 2-வது முறையாக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் பைப் பதிக்கும் பணியினால் பணிகள் சரியான முறையில் செய்ய முடியாமல் தாமதமாகிவிட்டது.

    இருந்தாலும் எங்களால் முடிந்த அளவுக்கு சாலை களை போட்டு உள்ளோம். அடுத்த வாவுபலி பொரு ட்காட்சி நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலை களையும் கண்டிப்பாக சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    நிறைவு விழா நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, வக்கீல் ஷாஜிகுமார், அரு ள்ராஜ், விஜு, ரெத்தினமணி, சர்தார் ஷா, ரீகன், விஜய லட்சுமி, ரோஸ்லெட், மினி குமாரி, ஆட்லின் கெனில் மற்றும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மகள் கண்முன்பு பரிதாபம்
    • மகள் சித்ரா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவரது மனைவி மேரி கில்டா (வயது51). இவர் நேற்று மாலை மணப்பாறை பகுதியில் பொருள்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு மகள் சித்ராவுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது குமாரபுரம் மிக்கேல் நகரை சேர்ந்த ஸ்டான்லி ஸ்டீபன் மற்றும் அவரது நண்பர் அனீஷ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரா தவிதமாக நடந்து சென்று கொண்டிருந்த மேரி கில்டா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடை ந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே மேரி கில்டா பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக அவரது மகள் சித்ரா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மோ ட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஸ்டான்லி ஸ்டீபன் (42) மீது வழக்கு பதிவு செய்தனர். மகள் கண் முன்பு தாய் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×