search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார் அருகே 3 கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது
    X

    திருவட்டார் அருகே 3 கோவில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் கைது

    • பைக் வாங்குவதற்காக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம்
    • சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர்.

    திருவட்டார் :

    திருவட்டார் அருகே உள்ள கோலத்துவிளை பத்ரேஸ்வரி அம்மன் கோவில், குட்டைக்காடு வனசாஸ்தா கோவில் மற்றும் தென்னூர் பத்ரகாளி அம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களில் ஒரே நாளில் கொள்ளை சம்பவம் நடந்தது.

    இது குறித்து திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதய சூரியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது.

    இந்த தனிப்படையினர் கோவில் கொள்ளை யர்களை தீவிரமாக தேடி வந்தனர். சம்பவ இடங்களில் இருந்த சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றியும் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளை யர்கள் பற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் சாமியார்மடம் நெடியாங்கோடு, மேல்விளை பகுதியை சேர்ந்த சபரி (வயது 22), புலிப்பனம் கல்நாட்டிவிளை பகுதியை சேர்ந்த சாமுவேல்ராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கைதான சபரி போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-

    10-ம் வகுப்பு வரை படித்துள்ள நான் கட்டிட தொழில் செய்து வந்தேன். அப்போது கருங்கல் பகுதியை சேர்ந்த ஜெனிஷா என்பவருடன் இன்ஸ்டா கிராமில் பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்தேன். என் மீது மார்த்தாண்டம், திரு வட்டார், தக்கலை ஆகிய போலீஸ் நிலையங்களில் இரு சக்கர வாகனம் திருட்டு, கஞ்சா கடத்தல் ஆகிய வழக்குகளும் உள்ளன.

    கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சாமியார்மடம் ஆர்.சி சர்ச் அருகில் உள்ள சாமுவேல்ராஜ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது விலை உயர்ந்த வாகனங்களில் இளை ஞர்கள் செல்வதை பார்த்து, இந்த மாதிரி நாமும் பைக் வாங்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்கு தேவை யான பணத்திற்காக, பெரிய வீடுகள், கோவில்க ளில் கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.

    அதன் படி இருவரும் பகல் நேரங்களில் பெரிய வீடுகள், கோவில்களை நோட்டம் பார்த்து விட்டு இரவு நேரங்களில் கொள்ளையடிப்போம். கடந்த பிப்ரவரி மாதம் செறுகோல் கும்பளத்தில் உள்ள மஹாதேவர் கோவி லின் மதில் ஏறி குதித்து உள்ளே சென்றோம். அங்கு கொள்ளையடித்ததை, சாமுவேல் ராஜின் வீட்டின் பின்னால் ரப்பர் தோட்டத் தில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைத்து வைத்தோம்.

    தொடர்ந்து வலியாற்று முகம் இசக்கி அம்மன் ஆலயம், கன்னங்கரை ஸ்ரீவன சாஸ்தா கோவில் போன்றவற்றிலும் கை வரிசை காட்டினோம். அதன் பிறகு கோலத்து விளை ஸ்ரீ பத்ரேஸ்வரி அம்மன் ஆலயம் சென்று கோவிலின் பூட்டை இரும்பு கம்பியால் அடித்து உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலியை அறுத்து எடுத்தோம்.

    கோவிலின் உண்டியலை உடைத்து பணம் எடுக்கும் போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் திருடன்... திரு டன்... என்று சத்தம் போட்டார்கள். நான் பின் பக்கம் மதில் ஏறி தப்பி சென்றேன். சாமுவேல்ராஜ் முன்பக்கம் வழியாக தப்பி செல்லும் போது உண்டியல் பணம் மற்றும் அவனது செல்போன் கீழே விழுந்து விட்டது. அதை விட்டு விட்டு சென்று விட்டோம்.

    கையில் இருந்த சில்லறை காசுகளை கொண்டு ஜாலியாக செலவு செய்து சுற்றி வந்தோம். திருடிய நகை மற்றும் வெணகல விளக்குகளை ஏதாவது நகைகடையில் விற்கலாம் ஏன்று ஆலோசனை செய்து கொண்டு இருந்தோம். நேற்று மாலை சாமியார் மடம் அருகில் 2 பேரும் ஏதாவது வீட்டில் கொள்ளையடிக்கலாம் என்று பேசி கொண்டு இருக்கும் போது போலீசார் எங்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவ்வாறு அவன் கூறி உள்ளான்.]

    Next Story
    ×