என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு
    X

    தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் சாவு

    • மகள் கண்முன்பு பரிதாபம்
    • மகள் சித்ரா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் வேலப்பன். இவரது மனைவி மேரி கில்டா (வயது51). இவர் நேற்று மாலை மணப்பாறை பகுதியில் பொருள்கள் வாங்கி கொண்டு வீட்டுக்கு மகள் சித்ராவுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது குமாரபுரம் மிக்கேல் நகரை சேர்ந்த ஸ்டான்லி ஸ்டீபன் மற்றும் அவரது நண்பர் அனீஷ் ஆகிய இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாரா தவிதமாக நடந்து சென்று கொண்டிருந்த மேரி கில்டா மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடை ந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சி கிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே மேரி கில்டா பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக அவரது மகள் சித்ரா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மோ ட்டார் சைக்கிள் ஓட்டி வந்த ஸ்டான்லி ஸ்டீபன் (42) மீது வழக்கு பதிவு செய்தனர். மகள் கண் முன்பு தாய் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×