என் மலர்
கன்னியாகுமரி
- ரெயில்வே போலீசாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
- 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர்
நாகர்கோவில் :
நாங்குநேரி ரெயில் நிலையத்தில் மாடியில் நின்று கொண்டு இன்று காலை வாலிபர் ஒருவர் ரகளை ஈடுபட்டு கொண்டி ருந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த வாலிபரை கீழே இறங்குமாறு தெரிவித்தனர். ஆனால் அந்த வாலிபர் கீழே இறங்கவில்லை. மாடியிலேயே அமர்ந்தருந்தார். பலமுறை அழைத்தும் அந்த வாலிபர் இறங்காததால் நாகர்கோவில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது வாலிபர் மாடியில் அமர்ந்து கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த வாலிபரை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.
ஆனால் அந்த வாலிபர் வருவதற்கு மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். உடனடியாக மாடியில் அமர்ந்திருந்த வாலிபரை மீட்க முயன்றனர். 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை மீட்டனர். மீட்கப்பட்ட வாலிபரை மாடியில் இருந்து கீழே இறக்கி கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் போதையில் அந்த வாலிபர் மாடியில் ஏறி இருந்தது தெரியவந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ரெயில் நிலையத்தில் வாலிபர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
- இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திர கவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள்
- பாராளுமன்ற நிலை குழுவினர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
கன்னியாகுமரி :
பாராளுமன்ற நிலைக் குழு அதன் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி. தலைமையில் நேற்று மாலை திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் எம்.பி.க்கள் ரமேஷ் சந்திர கவுசிக், கவுஸ்லேந்திரகுமார், காஜேன் முர்மு மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித்துறை கடற்கரையில் நின்றபடி கடலின் இயற்கை அழகை பார்த்து ரசித்த குழு சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதிக்கும் சென்றது. அங்கு மாலையில் கடலில் சூரியன் மறையும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
அதன் பிறகு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு வந்த பாராளுமன்ற குழுவினரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்றனர். அதன்பிறகு இந்த எம்.பி.க்கள் குழுவினர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, தியாக சவுந்தரி அம்மன் சன்னதி, மூலஸ்தான கருவறையில் அமைந்துள்ள பகவதி அம்மன் சன்னதி, இந்திர காந்த விநாயகர் சன்னதி, பாலசவுந்தரி அம்மன் சன்னதி, ஸ்ரீ தர்ம சாஸ்தா அய்யப்பன் சன்னதி, ஸ்ரீ நாகராஜர், சூரிய பகவான் சன்னதி ஆகிய சன்ன திகளுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இந்த பாராளுமன்ற நிலை குழுவினர் கார் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றனர்.
இந்த எம்.பி.க்கள் குழுவினருடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். இந்த பாராளுமன்ற நிலை குழுவினருடன் ஏராளமான துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிரடிப்படையினரும் பாதுகாப்புக்காக வந்து இருந்தனர்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- 46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம்
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் மேயர் தொடங்கி வைத்தார். 41-வது வார்டுக்குட்பட்ட வேதநகர் பி.யூ கார்டன் பகுதியில்ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 40-வது வார்டுக்குட்பட்ட புங்கையடி விநாயகர் தெருவில் ரூ.15லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
46-வது வார்டுக்குட்பட்ட ஈத்தாமொழி குறுக்கு தெருவில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 35-வது வார்டுக்குட்பட்ட கணபதி நகர் மேல தெருவில் ரூ11.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 27-வது வார்டுக்கு உட்பட்ட ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி, 25-வது வார்டுக்குட்பட்ட அழகம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, கவுன்சிலர்கள் அனிலா, வீரசூர பெருமாள், ராணி, கோபால சுப்பிரமணியன், அக்சயா கண்ணன், சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், ராஜேஷ், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
- லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது
- அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் அரிசி, வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது.
ஆந்திராவில் இருந்து இன்று 42 வேகன்களில் 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு ரெயிலில் வந்த ரேசன் அரிசி மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றினார்கள்.
பின்னர் லாரிகள் மூலம் கிட்டங்கிகளுக்கு ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது. கிட்டங்கிகளில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
- போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மீனாட்சி புரத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன் பகுதியில் உள்ள அறை ஒன்றில் பஸ்சின் பழைய சீட்டுகள் மற்றும் பொருட்கள் போடப்பட்டு இருந்தது.
இந்த அறையில் இன்று மதியம் 12.40 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தன. தீ மளமளவென்று பரவியதையடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
மேலும் பயங்கர சத்தத்துடன் பொருட்கள் வெடித்து சிதறின. இதை பார்த்த போக்குவரத்து கழக ஊழியர்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 2 வண்டிகளில் வந்த 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயன்றனர். கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் அந்த அறையில் இருந்த பழைய பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டதை யடுத்து அண்ணா பஸ் நிலை யம் மற்றும் மீனாட்சிபுரம் சாலையில் கடுமையான புகை மண்டலங்கள் ஏற்ப ட்டது.
பொதுமக்களும் அங்கு திரண்டதால் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. தீவிபத்தில் டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டல் ஒன்றின் ஒருபுறமும் எரிந்து சேதம் அடைந்தது. அந்த ஓட்டலின் கண்ணாடிகள் மற்றும் பைப்புகளுக்கும் சேதம் ஏற்பட்டது.
இதுகுறித்து போக்கு வரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், டெப்போவை ஒட்டி உள்ள ஓட்டலின் மாடியில் வட மாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள வர்கள் தண்ணீரை ஊற்றி னார்கள்.
அதன் பிறகு தான் டெப்போவில் பழைய பொருட்கள் வைத்திருந்த அறையில் தீ எரிந்தது என்றனர்.
இது தொடர்பாக கோட்டார் போலீசில் போக்குவரத்து கழக அதிகாரிகள் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதலில் டெப்போவில் தீவிபத்து ஏற்பட்டதா? ஓட்டலில் ஏற்பட்டதா? தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தீ விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் மேயர் மகேஷ் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
- கணினியை பள்ளி நிர்வாகத்திடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
- முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் விஜய் வசந்த் எம்.பி. கலந்து கொண்டார்.
பின்னர் கணினி நாயகனை போற்றும் வகையில் மீனாட்சிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான கணினியை பள்ளி நிர்வாகத்திடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
- கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
- நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது
நாகர்கோவில் :
குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது உள்ளிட்டவை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்ப டுத்தப்பட்டது.
மேலும், முதல்-அமைச்ச ரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் நேரில் சந்தித்தது, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி யது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங் கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றனர்.
- கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
- திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழாநடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 8-15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாத்தூர் மடம் தந்திரி சுஜித் நாராயணரூ கொடிபட்டத்தை பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றினார்.
விழாவில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர் கள் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த திருவிழா நாட்களில் தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை போன்ற வை நடக்கிறது. திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது இதையொட்டி இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதி களிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்க மார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்
- பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளிருப்பில் கலந்து கொண்டனர்.
- ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குளச்சல் :
குளச்சல் அருகே உள்ளது ரீத்தாபுரம் பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் கடந்த சில மாதங்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
வார்டு கவுன்சிலர்களும் சீரான குடிநீர் வழங்க பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் நேற்று கவுன்சிலர்கள் பிராங்கி ளின், ஷோபா, சுசீலா, சிந்து, ஜெகதீஸ்வரி, ஜெயசேகர், ஜெயக்குமார், மரிய செல்வி, அனிதா, சோமன், ஆஸ்வால்டர் ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அவர்களிடம் செயல் அலுவலர் சங்கர் கணேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார். இரவு ஆகியும் தீர்வு ஏற்பட வில்லை.
இதனால் கவுன்சிலர்கள் நேற்றிரவு முழுவதும் உள்ளிருப்பில் ஈடுப்பட்டனர். பெண் கவுன்சிலர்கள் 3 பேர் தங்கள் குழந்தைகளுடன் விடிய விடிய உள்ளி ருப்பில் கலந்து கொண்டனர்.
இன்று காலையும் தீர்வு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.இவர்களுடன் பேரூராட்சி தலைவர் எட்வின்ஜோஸ், துணைத்தலைவர் விஜூமோன், 14-வது வார்டு கவுன்சிலர் ஷீலா ஆகியோரும் உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்கள் வார்டுகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்தும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.2- வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில் ஆழ்துளை கிணறு அமைத்தததற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் பேரூராட்சி குழாயை சேதப்படுத்தி சிலர் திருடி சென்றதாக, செயல் அலுவலர் சங்கர் கணேஷ், குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
- பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
- குலசேகரம் அருகே இன்று காலை விபத்து
திருவட்டார் :
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று காலையில் பள்ளி, கல்லூரி வாக னங்கள் செல்லும் போது, தேவிகோடு பகுதியை சேர்ந்த விஜு (வயது 40) தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். திருவரம்பு ரோட்டில் நாகக்கோடு பகுதியில் அவர்கள் வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது.
இதில் இரு சக்கர வாகனம், லாரியின் முன் பக்கத்தில் சிக்கி கொண்டது. விஜூவும் அவரது மனைவியும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அந்தப் பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் டாரஸ் லாரியை மடக்கி பொதுமக்கள் சிறைபிடித்தார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசா ரணை நடத்தினர்.
விபத்து தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், தினமும் காலை, மாலை பள்ளி- கல்லூரி வாகணங்கள் செல்லும் நேரங்களில், கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம் என்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- சகாய ஜெனீஸ்டன் சவுதி அரே பியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்
- சாந்தூஸ் மேரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சகாய ஜெனீஸ்டன். இவரது மனைவி சாந்தூஸ் மேரி என்ற சாந்தி. இவர்களுக்கு அஸ்மீத் (வயது 14) என்ற மகனும் அஸ்மிதா (13) என்ற மகளும் உள்ளனர். சகாய ஜெனீஸ்டன் சவுதி அரே பியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் சால்வையில் தூக்கு போட்டு சாந்தூஸ் மேரி தற்கொலை செய்து உள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் திறந்தி ருந்த கதவை தள்ளி விட்டு உள்ளே சென்று பார்த்த போது, இறந்து கிடந்த தாயாரை பார்த்து சத்தம் போட்டு அழுது உள்ளனர். இதனை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது சாந்தூஸ் மேரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யவும் நடவடிக்கை
- குமரியில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 651 பேர் விண்ணப்பம்
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப படிவங்கள் பொது மக்க ளுக்கு வழங்கப்பட்டது. 5 லட்சத்து 77 ஆயிரத்து 127 ரேஷன் கார்டுதாரர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப் பட்டு இருந்தது.
முதல் கட்டமாக 400 ரேஷன் கடைகளில் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டது. முதல் கட்ட முகாமில் 2 லட்சத்து 3 ஆயி ரத்து 268 பேர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கி னார்கள். இதைத் தொடர்ந்து மீதமுள்ள 367 ரேஷன் கடைகளில் 2-வது கட்ட மாக விண்ணப்ப படி வங்கள் பெறப்பட்டது. இதில் ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 752 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் கடந்த 18-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. இதில் 22 ஆயிரத்து 631 பேர் விண்ணப்ப படிவங்களை வழங்கி உள்ளனர். குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 659 பேர் பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர். ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 487 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவுகளை சரிபார்க்கும் பணி நாளை (24-ந்தேதி) தொடங்குகிறது.
764 ரேஷன் கடைகளிலும் விண்ணப்ப படிவங்களை அந்தந்த பகுதியில் அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கி றார்கள். ஆய்வு பணியின் போது சந்தேகம் இருப்பின் களப் பணியாளர்கள் அந்த வீட்டிற்கு சென்று நேரில் ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் ரேஷன் கார்டில் உள்ள சிலரின் பெயரை விடுவித்து விட்டு கலைஞர் உரிமைத் திட்டத்திற்கு விண்ணப் பித்திருப்பது தெரிய வந்துள்ளது. அதை முறை யாக ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் உள்ள அனைவரது பெயரும், கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படி வங்களில் எழுதப் பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் குடும்ப அட்டையில் உள்ள அனைவரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே தகுதியானவர்கள் ஆவார்கள்.
எனவே குடும்ப அட்டையில் உள்ள நபர்கள் யாரா வது அரசு துறைகளில் வேலை பார்க்கிறார்களா? என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் வீடுகளில் கார் வைத்திருந்தாலும் அவர்களது விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்ப படிவங்களை வருகிற 31-ந் தேதிக்குள் ஆய்வு செய்து இறுதிப்பட்டியல் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.






