search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாணுமாலய சுவாமி"

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழாநடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 8-15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாத்தூர் மடம் தந்திரி சுஜித் நாராயணரூ கொடிபட்டத்தை பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றினார்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருவிழா நாட்களில் தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை போன்ற வை நடக்கிறது. திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது இதையொட்டி இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதி களிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்க மார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்

    • 30-ந்தேதி தெப்பத்திருவிழா
    • தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன

    நாகர்கோவில் :

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் சித்திரை மாத தெப்ப திருவிழா கடந்த 21-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரத்தில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.

    அதன்படி 7-ம் திருவிழா வான நேற்று காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மாலை 5 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9.30 மணிக்கு கைலாச பர்வத வாகனத்தில் சுவாமி திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

    இன்று 8-ம் திருவிழா ஆகும். அதன்படி இன்று காலை 5 மணிக்கு சிதம்ப ரேஷ்வரர் வீதியுலா வருதல் நடைபெற்றது. 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து நடராஜ பெருமாள், சிவாகாமி அம்பாளுக்கு அஷ்டாபிஷேகம், இரவு 9 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் வீதியூலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான நாளை (29-ந்தேதி) காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் அமைச் சர்கள் சேகர்பாபு, மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    மாலை 6 மணிக்கு சுவாமி மண்டகபடிக்கு தங்க பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் திருவீதி யுலா வருதல், நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடைபெ றும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திரு விழா 30-ந்தேதி நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப் பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை எழுந்தருளச்செய்து 3 முறை தெப்பக்குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் தெப்போற்சவம் நடைபெறுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெற உள்ளது.

    தெப்ப திருவிழாவை யொட்டி தெப்ப குளத்தின் நடுவே உள்ள மண்டபத்தில் அலங்கார மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் ஜொலிக்கும் மின் விளக்குகளின் ஒளி பிம்பம் தெப்பக்குளத்தில் பிரதிபலிக்கும் காட்சி கண்க ளுக்கு விருந்தளிக்கிறது.

    ×