search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா
    X

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா

    • கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    • திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி மாதங்களில் 10 நாட்கள் திருவிழாநடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 8-15 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மாத்தூர் மடம் தந்திரி சுஜித் நாராயணரூ கொடிபட்டத்தை பஞ்ச வாத்தியங்கள் மற்றும் மேளதாளங்கள் முழங்க கொடி மரத்தில் ஏற்றினார்.

    விழாவில் விஜய் வசந்த் எம்.பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர் கள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இந்த திருவிழா நாட்களில் தினமும் திருவேங்கட விண்ணவரப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை போன்ற வை நடக்கிறது. திருவிழாவின் 9 -ம் நாளான வருகிற 31-ந்தேதி மாலையில் தேரோட்டம் நடக்கிறது இதையொட்டி இந்திரன் தேராகிய சப்பரதேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி எழுந்தருளி 4 ரத வீதி களிலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    10-ம் நாளான அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவிலின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், சுந்தரி, துளசிதர நாயர், ஜோதீஷ்க மார் மற்றும் கோவில்களின் கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்காளர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்

    Next Story
    ×