என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
    X

    கன்னியாகுமரி அருகே தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை

    • சகாய ஜெனீஸ்டன் சவுதி அரே பியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார்
    • சாந்தூஸ் மேரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள ஒற்றையால்விளை அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சகாய ஜெனீஸ்டன். இவரது மனைவி சாந்தூஸ் மேரி என்ற சாந்தி. இவர்களுக்கு அஸ்மீத் (வயது 14) என்ற மகனும் அஸ்மிதா (13) என்ற மகளும் உள்ளனர். சகாய ஜெனீஸ்டன் சவுதி அரே பியாவில் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை தனது 2 குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு படுக்கை அறையில் உள்ள ஜன்னல் கம்பியில் சால்வையில் தூக்கு போட்டு சாந்தூஸ் மேரி தற்கொலை செய்து உள்ளார். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த குழந்தைகள் திறந்தி ருந்த கதவை தள்ளி விட்டு உள்ளே சென்று பார்த்த போது, இறந்து கிடந்த தாயாரை பார்த்து சத்தம் போட்டு அழுது உள்ளனர். இதனை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்த்தனர். அப்போது சாந்தூஸ் மேரி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×