என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுவாமியார்மடம் சானலில் கடைவரம்பு வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    சுவாமியார்மடம் சானலில் கடைவரம்பு வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • விஜய்வசந்த் எம்.பி. அறிக்கை
    • ரெயில்வே அதிகாரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்தும் சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய்வசந்த் வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுவாமியார்மடம் கால்வாய் மற்றும் இரணியல் நீர் மேம்பாலம் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கிள்ளியூர், குருந்தன்கோடு, திருவட்டார், தக்கலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் கடந்த ஓராண்டு காலமாக பாசனத்திற்கு நீரின்றி தவித்து வருகின்றனர். தென்னை, வாழை சாகுபடி பாசனத்திற்கு நீர் இல்லாததால் மிகவும் பாதிப்படைந்து உள்ளது.

    இரணியல் ரெயில்வே மேம்பால சானல் பணிகள் முடிந்த போதிலும் கட்டுமான குறைபாடுகளின் காரணமாக கடைவரம்பு வரை நீர் செல்வது தடை பட்டது. ரெயில்வே அதி காரிகளை பல முறை சந்தித்து கோரிக்கை வைத்தும் அதனை சரி செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது மிகவும் மந்த கதியில் பணிகள் நடை பெற்று வருகிறது. அது போன்று மாநில பொதுப் பணித்துறை மற்றும் நீர்பாசன துறையினர் சுவாமியார்மடம் கால் வாயில் சீரமைப்பு பணிகள் செய்து வருகின்றனர். பல முறை விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைத்த பின்ன ரும் இந்த பணி முடி வடையாமல் உள்ளது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த கால்வாய்களில் கடைவரம்பு வரை நீர் கொண்டு செல்ல வேண்டியது மிக முக்கியம். ரெயில்வே மற்றும் பொதுப் பணித்துறை நிர்வாகங்கள், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த பணிகளை மிக விரைவில் முடித்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.

    இந்த பணிகளை முடித்து இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயனடையும் வகையில் பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×