என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு
    • மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மோட்டார் வாகன சட்டம் துணை விதி (1) விதி 370 தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டவிதி 1989-ன் படி போக்குவரத்து ஆணையர் ஒப்புதல் பெறப்பட்டுள்ள தன் அடிப்படையில் எல்லையோர மாவட்டங்க ளான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கனிமங்கள் ஏற்றி வரும் 10 சக்கரங்களுக்கு (28,000 கிலோ) மேற்பட்ட கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 10 சக்கரங்களுக்குட்பட்ட கனரக வாகனங்களில் கனிமங்கள் கொண்டு வரும் வாகனங்கள் கீழ்கண்ட வழித்தடத்தில் மட்டுமே சென்றுவர அனுமதிக்கப்படு கிறது. ஆரல்வாய்மொழி, செண்பகராமன்புதூர், துவரங்காடு, களியங்காடு வழியாக கேரள மாநிலம் செல்வதற்கு (அல்லது) வெள்ளமடம், காவல்கிணறு, ஆரல்வாய்மொழி, தோவாளை, அப்டா மார்க்கெட், புத்தேரி, இறச்சகுளம், களியங்காடு செல்வதற்கு அனுமதிக்கப்ப டுகிறது. மேற்படி விதிமுறைகள் 15-ந்தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதிக எடை கொண்ட வாகனங்களின் போக்குவரத்தால் சாலைகள் பாதிப்படைவதையும், பொதுமக்கள் நலன்கருதியும் இந்த விதிமுறைகள் நடைமுறை படுத்தப்படுகி றது. இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
    • 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை

    தக்கலை :

    கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றிய லாரிகள் தினமும் அதிக அளவில் சென்று வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் கனரக லாரிகள் அதிக அளவு பாரத்துடன் செல்வதால், குமரி மாவட்ட சாலைகள் சேதமடைவதாகவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த லாரிகளை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இருப்பினும் கனரக லாரிகள் செல்வது குறைந்தபாடில்லை. இந்த நிலையில் 10 சக்கரங்களுக்கு மேலான கனரக லாரிகளில் கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் இந்த தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.

    இதனை முன்னிட்டு தற்போது அதிக அளவிலான கனரக லாரிகள் நேற்று முதல் கேரளாவுக்கு படையெடுத்து சென்று வருகின்றன. இன்று அதிகாலையும் தக்கலை, சித்திரங்கோடு, முட்டைக்கோடு, செம்பருத்திவிளை வழியாக கனிமவளங்கள் ஏற்றிய கனரக லாரிகள் சென்றன. இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காலை 7 மணிக்கு பிறகு பள்ளி வாகனங்கள் செல்ல தொடங்கிய பிறகும், கனரக லாரிகள் சென்றதால் மாணவ-மாணவிகள் பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கோதநல்லூர் பேரூராட்சி தலைவி கிறிஸ்டல் பிரேமகுமாரி, துணை தலைவர் டேவிட் மற்றும் பொதுமக்கள் திரண்டு செம்பருத்திவிளை சந்திப்பில், கனரக லாரிகளை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கனரக லாரிகள் வரிசையாக சாலையில் நின்றதால் போக்குவரத்து மேலும் பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொற்றிகோடு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கனரக வாகனங்கள் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.

    • கலெக்டரிடம் குடும்பத்தினர் மனு
    • மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர்.

    நாகர்கோவில் :

    தூத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பைஜு. இவருக்கு சொந்த மான விசைப்படகில் கடந்த 7-ந்தேதி இரவிபுத்தன் துறை, தூத்தூர் மற்றும் கேரள மாநிலம் விழிஞ்சம், பாண்டிச்சேரி, அசாம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    மீன்பிடித்து விட்டு இவர்கள் தேங்காய்பட்டி னம் துறைமுகத்திற்கு திரும்பிக்கொண்டி ருந்தனர். நேற்று அதிகாலை வந்து கொண்டிருந்த போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதியது. பின்னர் அந்த கப்பல் நிற்காமல் சென்று விட்டது. கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. படகில் இருந்த 12 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    கடலில் நீந்தியப்படியே உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மாலத்தீவு நாட்டு கடற்படையினர் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்டு அங்குள்ள தீவில் தங்க வைத்தனர். இது குறித்து குமரி மாவட்டம் மீன்வளத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீனவர்களை மீட்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தலைமையின் பொதுச்செய லாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்தநிலையில் மீன வர்கள் குடும்பத்தினர் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், மாலத்தீவில் தவிக்கும் 12 மீனவர்களையும் உடனடி யாக மீட்டு கொண்டு வர வேண்டும். சேதமடைந்த விசை படகிற்கு உரிய நிவாரணமும், மீனவர்க ளுக்கு நிவாரணமும் வழங்க வேண்டும். விசை படகு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கப்பல் மீது அரசு உடனடி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
    • கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 4 சோதனை சாவடிகளில் சோதனை நடந்து வருகிறது. களியக்காவிளை, கோழிவிளை, நெட்டா, பளுகல் சோதனை சாவடிகளில் போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வரும் பஸ்களை தடுத்து நிறுத்தி பஸ் பயணிகளுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் கார்களில் வரும் பொதுமக்களையும் சுகாதாரத்துறையினர் தடுத்து சோதனை நடத்தினார்கள். மருத்துவ குழுவினர் அங்கேயே முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன பணிகளை குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கலெக்டர் ஸ்ரீதர் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தினார்.

    கேரளாவில் இருந்து காய்ச்சல் பாதிப்புடன் குமரி மாவட்டத்திற்கு வருபவர்கள் உடனடியாக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    மேலும் குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் தொழிலாளர்களும் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடலிவிளை உயர்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்த ரூ. 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர், அப்பகுதி கவுன்சிலர், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்தார்
    • மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு நடத்தி முடித்த நிலையில் இன்று காலை 52-வது வார்டுக்கு உட்பட்ட தெங்கம்புதூர், குளத்து விளை ஆகிய பகுதிகளில் மேயர் மகேஷ் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார்
    • பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அகில பாரத இந்து மகா சபா தலைவர் பாலசுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் சிவசேனா, பா.ஜனதா கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் தரப்பில், சிலை கரைக்கப்படும் இடங்களில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக சொத்தவிளை பகுதியில் மின்விளக்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊர்வலங்கள் சொல்லும் பகுதிகளில் மரக்கிளைகள் அதிகளவு உள்ளது. அந்த மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். கீரிப்பாறை பகுதியில் புதிதாக விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். ஆட்டோக்களில் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசிய போது கூறியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகள் 22, 23, 24 ஆகிய தேதிகளில் கரைக்கப்படுகிறது. சிலைகள் கரைப்பதற்கு 10 இடங்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வலங்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர், சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று காவல் துறையின் உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய காவல் ஆய்வாளரிடமிருந்து பெற வேண்டும். காவல் துறையால் தெரிவிக்கப்படும் விதிமுறைகளுக்குட்பட்டு ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்காலிகக் கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

    எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். ஓலைப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம் மற்றும் அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினிலாரி போன்ற வாகனங்களில் மட்டுமே சிலைகளை கரைப்பதற்கு கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும். ஊர்வலம், சிலையை கரைக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். ஊர்வலம் செல்லும் பாதை காவல் துறையினர் வரையறுத்துக் கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்க வேண்டும். சிலை கரைப்பு நடைபெற்ற பகுதிகளில் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் உள்ளாட்சி மற்றும் பேரூராட்சி அமைப்பால் சுத்தம் செய்யப்பட வேண்டும். சிலை அமைப்பாளர்களால் உரிய இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும், விதிமீறல்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்யவும், ஊர்வலம் புறப்படும் இடத்திலிருந்து விஜர்சனம் செய்யும் இடங்களுக்கான வழித்தடங்களையும் முன்கூட்டியே காவல் துறையினர் தெரிவிக்கவும் வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசு
    • சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் மற்றும் விவேகானந்த கேந்திர வித்யாலயா சார்பில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த 53-வது ஆண்டு விழா, 1893-ம் ஆண்டு சிக்காகோவில் நடைபெற்ற சர்வ தர்ம சபையில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவை நினைவு கூறும் உலக சகோதரத்துவ தினவிழா ஆகிய இருபெரும்விழா விவேகானந்தபுரம் விவேகானந்தகேந்திர வளாகத்தில் நடந்தது. கேந்திர உதவித்தலைவர் அனுமந்த ராவ் தலைமை தாங்கினார். விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா வரவேற்றுப் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துஉள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திராவில்10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேலும் கேந்திர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் விவேகானந்தர் கேந்திர வித்யாலயா பள்ளி உதவி முதல்வர் சஞ்சீவி ராஜன் நன்றி கூறினார். பின்னர் பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    • போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார்.
    • பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் :

    தோவாளை சி. எஸ்.ஐ பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங் கலை மற்றும் முதுகலை பொறியியல், எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. போதகர் நெல்சன் ஜெபம் செய்தார். கல்லூரி முதல்வர் ஸ்பென்சர் பிரதாப் சிங் வரவேற்றார். தாளாளர் எபனேசர் ஜோசப் தலைமை தாங்கினார்.

    கல்லூரியின் தலைவர் குமரிப் பேராயர் செல்லையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், மாணவர்கள் அனைவரும் இறை நம்பிக்கை, உண்மை மற்றும் நன்றியுணர்வோடு வாழ்ந்து உலகில் சாதனை யாளர்களாக மாற வேண்டும் என்றார்.

    குமரிப் பேராய நலிவுற்றோர் வளர்ச்சித் துறையின் இயக்குனர் லாரன்ஸ், கல்லூரியின் காசாளர் பொன். சாலமோன், மாணவிகள் பிரெய்சலி, அகுள் மேரி ஆகியோர் முதலாம் ஆண்டு மாணவர்களை வாழ்த்தி வரவேற்றனர். முதுநிலை வணிக நிர்வாகத்துறை தலைவர் நாக்ஸன் நன்றி கூறினார். இந்த விழாவில் கல்லூரியின் அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள். பணியாளர்கள். பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம்
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்

    என். ஜி. ஓ. காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள தேவகுளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாலையப்பன் (வயது 59), தொழிலாளி.இவரது மனைவி லட்சுமி ( 50), தேவகுளம் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆயா வாக பணிபுரிந்து வருகிறார்.

    மாலையப்பன் உடல்நிலை சரியில்லாமலும், குழந்தை இல்லாத விரக்தியிலும் இருந்துவந்தாராம். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி லட்சுமி, அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் மாலையப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாலையப்பன் இன்று அதிகாலை பரிதாப மாக இறந்தார்.

    இது குறித்து அவரது மனைவி லட்சுமி, சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள கோடியூர் பகுதியை சேர்ந்தவர் தாசன் (வயது 62). கூலி தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று மது குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்த தாசன், மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது குடி போதையில் மது பானம் என நினைத்து ரப்பர் பால் உறைய வைக்கும் ஆசிட்டை குடித்து விட்டார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். அவரை அவர் மகன் சுஜின் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    பின்பு தாசன் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது.
    • நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடசேரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று காலை ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் மார்த்தாண்டம் அருகே சென்ற போது பஸ்சின் இருக்கைக்கு கீழ் ஒரு தங்க பிரேஸ்லெட் கிடந்தது. இதைப் பார்த்த பயணி ஒருவர் உடனே அதை மீட்டு பஸ் கண்டக்டர் சத்தியதாசிடம் கொடுத்தார். அந்த பிரேஸ்லெட் ¾ பவுன் இருந்தது. பின்னர் பஸ் நாகர்கோவில் வந்ததும் பிரேஸ்லெட் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இதற்கிடையே பஸ்சில் பயணம் செய்த காரங்காடு பகுதியைச் சேர்ந்த ஜெஸ்லின் பினி என்பவரின் பெற்றோர் தனது மகள் நகையை தவறவிட்டு விட்டதாக கூறி பஸ் நிலையத்தில் வந்து விசாரித்தனர்.

    இதைத் தொடர்ந்து அவர்களை அழைத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பிரேஸ்லெட்டின் அடையாளங்களை கேட்டறிந்தனர். அப்போது பிரேஸ்லெட்டின் அடையாளங்களையும், ஜெஸ்லின் பினி பஸ்சில் பயணம் செய்தது குறித்த விவரங்களும் சரியாக இருந்ததைத் தொடர்ந்து அந்த பிரேஸ்லெட்டை உரியவரிடம் ஒப்படைத்தனர். நகையை பத்திரமாக கொண்டு வந்து வழங்கிய கண்டக்டர் சத்தியதாசை அதிகாரிகள் பாராட்டினர்.

    ×