என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • பயணிகள் நிழற்குடை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    பொன்மனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கி செய்யப்பட்டது.



    அதன்படி கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர் வினுட் ராய், பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தின குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
    • மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கட்சியின் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், செயல் தலைவர்கள், மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    • மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது

    ஆரல்வாய்மொழி :

    வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்டவையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மறியல் போராட்டத்தையொட்டி பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    • நாகர்கோவிலில் விடியல் சேகர் பேட்டி
    • மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    நாகர்கோவில் :

    தமிழ் மாநில காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விடியல் சேகர் இன்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து சர்ச்சையை தொடங்கி உள்ளார். இந்தியாவும், தமிழகமும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டு திகழ்கிறது. ஆனால் தேர்தல், வாக்கு அரசியலுக்காக சிறுபான்மை மக்களை குறி வைத்து உதயநிதி ஸ்டாலின் சனாதானம் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார். இது தி.மு.க. கூட்டணிக்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. சிறைகளில் கூட கஞ்சா, செல்போன்கள் தாராளமாக கிடைக்கிறது. போதை பொருட்கள் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி அருகே போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. உளவுத்துறை போலீசார் அதை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். உளவுத்துறை செயல் இழந்து காணப்படுகிறது. சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் சென்ற வாகனமே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இது அரசின் நிர்வாக திறமை சீர்கேட்டை காட்டுகிறது.

    குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு அதிக அளவு கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக தமிழகத்தில் 6 லட்சம் விவசாயிகளின் சான்றிதழ்களை வேளாண் துறை அதிகாரிகள் அனுப்பாமல் உள்ளனர். இதனால் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியாமல் உள்ளனர்.

    கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு, மெட்ராஸ் ஐ பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் அமையும்.

    நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணியுடன் த.மா.க. உள்ளது. இந்த கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும். நாடாளுமன்ற தேர்தல் குறித்து த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வருகிற அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியா, பாரதம் என்பது ஒரே வார்த்தை தான். இதை அரசியலாக வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாவட்ட தலைவர் டி.ஆர். செல்வம், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம்

    நாகர்கோவில், செப்.13-

    நாகர்கோவில் மாநகராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட கோட்டவிளை பகுதியில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம், 18-வது வார்டு பிளசன்ட் நகரில் ரூ.21 லட்சத்தில் தார் சாலை, 4-வது வார்டு அசோக் கார்டனில் ரூ.5 லட்சத்தில் தார் சாலை, 17-வது வார்டு குழந்தை யேசு கோவில் முன்பு உள்ள சாலையில் ரூ.10 லட்சத்தில் கருந்தளம், 17-வது வார்டு அருள்நகரில் ரூ.20 லட்சத்தில் கருந்தளம், 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் அமலசெல்வன், கவுசிகி, வீரசூரபெருமாள், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • உணவில் நார் சத்து குறைவாகவும், கொழுப்பு சத்து அதிகமாகவும் எடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
    • குடல்வால்வு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பொ ன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரியில் 65 வயது நபர் வயிறு வீக்கம், வாந்தி, மலம் மற்றும் காற்று பிரிதலில் சிக்கல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிட்சை சிறப்பு நிபுணர் டாக்டர் கரிகால் சக்கரவர்த்தி பரிசோதனை செய்தார்.

    இதில் அவருக்கு குடல் வால்வு அழற்சி உருவாகி, உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் குடல்வால்வு காரணமாக சிறுகுடல் மற்றும் பெருங்குடல் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல் வால்வு நீக்கப்பட்டது. அதன்பின் அவர் உடல்நிலை முன்னே ற்றம் அடைந்து வீடு திரும்பி னார்.

    இதுதொடர்பாக டாக்டர் கரிகால் சக்கரவர்த்தி கூறியதாவது:-– குடல்வால்வு அழற்சி என்பது பரவலான நோய்களில் ஒன்று. பொதுவாக 10 முதல் 30 வயது வரை பெண்களை விட ஆண்களில் அதிகமாக காணப்படும்.

    உணவில் நார் சத்து குறைவாகவும், கொழுப்பு சத்து அதிகமாகவும் எடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். குடல்வால்வு வெறும் அழற்சியாக வர லாம் அல்லது குடல் வா ல்வில் ஓட்டை, சீழ் வைத்தல், குடல் வால்வுடன் மற்ற குடல் ஒட்டுதல் என பல விதங்களாக பாதிக்கப்பட லாம்.மிகவும் அரிதிலும் அரி தாக குடல் வால்வு காரண மாக குடல் அடைப்பு ஏற்ப டுகிறது. வயதானவர்களுக்கு இந்நோய் வந்தால் முதலில் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் குடல்வால்வு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • 9 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர்
    • காணொளி மூலமாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக கர்நாடக மாநில திட்டக்குழு துணை தலைவர் பிரோத் கட்டே தலைமையில் முன்னாள் எம்.பி. நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பட்டேல் ஆகியோர் அடங்கிய 9 பேர் கொண்ட குழுவினர் நாகர்கோவிலுக்கு வந்தனர். மாநகராட்சி அலுவலகத்தின் செயல்பாடுகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    பின்னர் இந்த குழுவினர் கரும்பாட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். பின்னர் சோட்ட பணிக்கன்தேரிவிளை சமுதாய நலக்கூடத்தில் தமிழகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி செயல்பாடுகள் குறித்து காணொளி மூலமாக நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் தங்கமலர் சிவபெருமான், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் இந்த குழுவினர் கேரளா புறப்பட்டு சென்றனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்தீஸ்வரர் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ்மலை ஜோதிலிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஆவணி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தடுப்பு சுவரை இடித்துவிட்டு காங்கிரீட் சுவர் அமைக்க வனத்துறையினர் நடவடிக்கை
    • யானை கூட்டம் விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி உடையார்கோ ணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயம் செய்து வரு கிறார்கள். இந்த பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக வந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

    அட்டகாசம் செய்யும் யானைகள் தோவாளை கால்வாயில் உள்ள பாலத்தின் வழியாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் வனத்துறை சார்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தடுப்பு சுவர்களை இடித்து தள்ளி விட்டு காட்டு யானை களுக்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மீண்டும் யானை கூட்டம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழை தோட்டத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக வனத்துறையினர் நேரடி யாக சென்று விசாரணை மேற்கொண்டு சேதமடைந்த வாழை மற்றும் தென்னை களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் யானை வராமல் தடுக்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து வன அதிகாரி இளையராஜா தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதா வது:-

    பூதப்பாண்டி அருகே தெள்ளாந்தி பகுதியில் வாழை, தென்னை மரங்க ளை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. 3,4 யானைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களை சேதப்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் தோவாளை பாலத்தின் மேல் தடுப்புசுவர் கட்டப் பட்டுள்ளது.

    அந்த தடுப்புச்சுவரை இடித்து தள்ளி விட்டு தற்போது யானை விளை நிலங்களுக்குள் புகுந்துள் ளது. தற்பொழுது அந்த பகுதியில் தடுப்பு சுவரை அகற்றி விட்டு காங்கிரீட் சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்த பகுதியை அடைத்து விட்டால் யானை கூட்டம் விளைநிலங்கள் புகுவதை தடுத்து விடலாம்.

    மேலும் யானை வராமல் தடுக்கும் வகையில் அகழி வெட்டவும் ஏற்பாடு செய்துள்ளோம். வனத்துறை அதிகாரிகள் பாலத்தின் மேல் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் வரை அங்கேயே முகாமிட்டு கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். பொது மக்கள் அச்சப்பட தேவை யில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் நடந்தது
    • பக்தர்களுக்கு 7 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் பொற்றையடி வைகுண்டப தியில்1800அடி உயரம ருந்து வாழ்மலை அமைந்து உள்ளது.

    இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆவணிமாத பிரதோஷம் நடைபெற்றது.

    இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சனப் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்க ரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட16வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன்அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனைநடந்தது.இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் போன்ற 7 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன

    • நடைபயிற்சிக்கு சென்றவர்கள் ஒரு மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்
    • வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட சொத்த விளை பகுதியைச் சேர்ந்தவர் வறுவேல் அந்தோணி (வயது 65), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெசி லெட். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு வறுவேல் அந்தோணி தனியாக வசித்து வந்தார்.

    அவரது 3 மகன்களும் வெளிநாட்டில் வேலையில் உள்ளனர். மகள் திருமணமாகி புத்தளம் பகுதியில் வசித்து வருகிறார். வறுவேல் அந்தோணிக்கு மது பழக்கம் இருந்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவர் காயம் அடைந்தார்.

    இதன் காரணமாகவும் மனைவி இறந்த சோகத்திலும் வறுவேல் அந்தோணி இருந்து வந்தார். நேற்று வீட்டில் இருந்து சென்ற அவர் இரவு வீட்டுக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று காலை சொத்தவிளை கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றவர்கள், அங்குள்ள ஒரு மரத்தில் வறுவேல் அந்தோணி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள், வறுவேல் அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் வறுவேல் அந்தோணி தூக்குப் போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • தண்டவாளம் பராமரிப்பு பணி
    • தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    நாகர்கோவில் :

    தெற்கு ரெயில்வே வெளி யிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறப்பட்டிருப்ப தாவது:-

    தண்டவாளம் பராம ரிப்பு பணிகள் காரணமாக கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சில தினங்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அதன்படி நாளை (வியாழக்கிழமை) மற்றும் 21, 24 ஆகிய தேதிகளில் கே.எஸ்.ஆர்.பெங்களூருவில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் ரெயில் (எண் 1685) வழக்கமாக கிருஷ்ணராஜபுரம், வைட்பீல்டு, மாலூர், பங்கார பெட், குப்பம், திருப்பத்தூர் நிலையங்கள் வழியாக இயக்காமல் எஸ்.எம்.வி.டி.பெங்களூரு, பெங்களூரு கண்டோன் மென்ட், பையா பனாகல்லி, ஓசூர், தர்மபுரி, ஓமல்லூர், சேலம் வழியாக இயக்கப்படும்.

    24-ந்தேதி கன்னி யாகுமரி-கே.எஸ்.ஆர்.பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16525) இதே வழித்தடத்தில் ஏதாவது ஒரு நிலையத்தில் 1 மணி நேரம் 15 நிமிடம் நின்று தாமதமாக செல்லும். மேலும் 23-ந்தேதி புறப்படும் கொச்சுவேளி-எஸ்.எம்.வி.டி.பெங்களூரு ரெயில் (எண் 16319), 24-ந்தேதி புறப்படும் எஸ்.எம்.வி.டி.பெங்களூரு-கொச்சுவேளி ரெயிலும் (எண்.16320) முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

    மதுரை-புனலூர்-மதுரை தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (எண் 16729/16730) வருகிற 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் கோவில்பட்டி, சாத்தூர் நிலையங்களில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். தாம்பரம்-நாகர்கோவில்-தாம்பரம் அந்த்யோதயா தினசரி அதிவேக ரெயில்கள் (எண் 20691/20692) வருகிற 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படையில் சாத்தூர் நிலையத்தில் 2 நிமிடங்கள் நின்று செல்லும். திரு நெல்வேலி-பாலக்காடு- தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (எண் 16791/16792) 20-ந்தேதி முதல் சோதனை அடிப்படை யில் ஏற்றமானூர் நிலை யத்தில் 1 நிமிடம் நின்று செல்லும்.

    கன்னியாகுமரி-புனலூர் (வண்டி எண் 06640) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (புதன்கிழமை) முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதல் ஒரு பெட்டியுடன் இயக்கப்படும். புனலூர்-கன்னியாகுமரி (வண்டி எண் 06639) முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கி ழமை) முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதல் ஒரு பெட்டியுடன் இயக்கப்ப டும். நாகர்கோவில்-கன்னியாகுமரி ரெயில் (எண் 06643) இன்று முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியு டனும், கன்னியாகுமரி-நாகர்கோவில் ரெயில் (எண் 06642) நாளை முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியுடன் இயக்கப்படும். நாகர்கோ வில்- திருநெல்வேலி ரெயில் (எண் 06641) நாளை முதல் இருக்கை வசதியுடன் கூடிய கூடுதலாக ஒரு பெட்டியுடன் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×