

நாகர்கோவில், செப்.13-
நாகர்கோவில் மாநகராட்சியில் 4-வது வார்டுக்குட்பட்ட கோட்டவிளை பகுதியில் ரூ.5 லட்சத்தில் கான்கிரீட் தளம், 18-வது வார்டு பிளசன்ட் நகரில் ரூ.21 லட்சத்தில் தார் சாலை, 4-வது வார்டு அசோக் கார்டனில் ரூ.5 லட்சத்தில் தார் சாலை, 17-வது வார்டு குழந்தை யேசு கோவில் முன்பு உள்ள சாலையில் ரூ.10 லட்சத்தில் கருந்தளம், 17-வது வார்டு அருள்நகரில் ரூ.20 லட்சத்தில் கருந்தளம், 46-வது வார்டு சிவாஜி தெருவில் ரூ.7.94 லட்சத்தில் கான்கிரீட் தளம் ஆகிய வளர்ச்சி பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், கவுன்சிலர்கள் அமலசெல்வன், கவுசிகி, வீரசூரபெருமாள், பகுதி செயலாளர் சேக் மீரான், இளைஞரணி அகஸ்தீசன், சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.