என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
    • வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வடசேரியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 19 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் மகேஷ் அதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    முன்னதாக இன்று காலை 2-வது வார்டுக்குட்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பின்புறம் உள்ள மகளிர் தங்கும் விடுதி முன்பு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து களியங்காடு 4 முக்கு ரோடு, விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது களியங்காடு 4 முக்கு ரோடு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக புகார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மேயர் மகேஷ், இந்த பகுதியில் கல்வெட்டு (சிறிய பாலம்) அமைக்க உத்தரவிட்டார். மேலும் சாலையையும் உயர்த்தி காங்கிரீட் தளம் அமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் தெருவில் வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருந்தது. இதனை பார்த்த மேயர் வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

    அப்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    மேலும் 44-வது வார்டுக்குட்பட்ட மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் ரூ.60 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    • 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ஆரல்வாய்மொழி :

    ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதியில் பொய்கை குளம் உள்ளது. இந்த குளத்தில் ஏராளமான தாமரை பூக்கள் பூத்திருக்கின்றன. இந்த பூக்களை பறிப்பதற்காக ஆசாரிப்பள்ளம் அருகே உள்ள ஜெலின்குமார் (வயது 27) என்பவர் வந்தார். அப்போது அவரை மிசின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த 3 பேர் வழிமறித்து எங்கள் ஊருக்கு தாமரை பூ பறிக்க எவ்வாறு வரலாம் என கூறி தகராறு செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

    இதில் காயம் அடைந்த ஜெலின்குமார் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகிறார்கள்.

    • நிலவேம்பு கசாயமும் பொதுமக்களுக்கு விநியோகம்
    • அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது

    நாகர்கோவில் :

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கேரளாவை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த கலெக்டர் ஸ்ரீதர் உத்தர விட்டுள்ளார்.

    சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

    இதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் இணைந்து சுகாதார பணியாளர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலமாக காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையானது இன்று 2-வது நாளாகவும் நீடித்தது. இன்று காலை வரை 900 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் காய்ச்சல் அறிகுறி தென்படவில்லை. தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து ரெயில்கள் மூலமாகவும் கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் வரக்கூடும் என்பதால் மாவட்டம் முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் வாரியாகவும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும் டெங்கு அறிகுறியுடன் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் கலெக்டர் ஸ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வரும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடத்தில் தனி வார்டு ஒன்று இன்று திறக்கப்பட்டுள்ளது. தனி வார்டில் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை சிகிச்சைக்காக சேர்த்து வருகிறார்கள். ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களையும் அந்த வார்டுக்கு மாற்றி டாக்டர்கள் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

    • சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து சேவை 2 மணி நேரம் ரத்து

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சி அளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையை யொட்டி இன்று காலையில் கன்னியாகுமரியில்"திடீர்" என்று கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. அதேபோல இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்த ளிப்பாகவும் காணப்படுகிறது.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்பட வில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர்.

    இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெற வில்லை. மேலும் கன்னியா குமரி, சின்னமுட்டம், வாவத்து றை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
    • இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    காரக்குறிச்சி அருகே உள்ள கல்பாடி காருப்பாறை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70).

    இவர் நேற்று இரவு கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அவர் "திடீர்"என்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • போலீசார் ரேஷன் அரிசியை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ், தலைமை காவலர் கணேஷ் குமார், மற்றும் ேபாலீசார் மஞ்சத்தோப்பு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது சந்தே கத்துக்கு இடமான முறையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது அதை நிறுத்தி சோதனை செய்த போது 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது. போலீசார் அதை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

    இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

    • ஒன்றிய செயலாளர் பாபு தலைமையில் நடந்தது
    • அகஸ்தீஸ்வரம் பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையில் உள்ள சமூகநலக்கூடத்தில் நேற்று இரவு நடந்தது.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, பேரூர் கழக அவைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னர். முடிவில் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதா கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரேம்ஆனந்த், ஒன்றிய பிரதிநிதிகள் அகஸ்தியலிங்கம், நாகமணி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் உள்பட தி.மு.க. நிர்வா கிகள், அகஸ்தீஸ்வரம் பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    • அறநிலையத்துறை சார்பில் 20-ந்தேதி பேச்சுவார்த்தை
    • தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

    தென்தாமரைகுளம் :

    தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள தாமரைகுளம் பதி முன்பு இந்து அறநிலையத்துறை சார்பில் நுழைவுவாயில், சுற்றுசுவர் கட்ட கடந்த சில நாட்களுக்கு முன்பு அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்தாமரைகுளம் போலீஸ் நிலையம் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒரு தரப்பினர் மனு அளித்த னர்.

    இது தொடர்பான பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நேற்று மாலை பதி முன்பு நடைபெற்றது. குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை தலைவர் ராஜன், உதவி ஆணையர் தங்கம், செயல் அலுவலர் ரெகு, தாசில்தார் சஜித் ஆகியோர் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் வருகிற 20-ந்தேதி அறநிலையத்துறை அலுவலகத்தில் வைத்து மீண்டும் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் அஸ்திவாரம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் குழந்தைகள், வயதானவர்கள் விழுந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது என பெண்கள் உட்பட பலர் தெரிவித்தனர். இதனையடுத்து தற்காலிகமாக பள்ளத்தை மூடுவதற்கு உயர் அதிகாரியிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    • வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
    • மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு

    குழித்துறை :

    மார்த்தாண்டம் போலீஸ நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு சங்கரம்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துநாயகம் (வயது 85), தொழிலாளி. இவர் வீட்டை விட்டு பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு அவர் இவரது மகன் ஜேம்ஸ் (51) ,வாடகை வீட்டில் தேடி சென்று உள்ளார். அப்போது முன் பக்க கதவு அடைத்திருந்துள்ளது, இதனால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டுள்ளார்.இதை எடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது
    • பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. காலையில் ஓரளவு மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெப்பத் தின் தாக்கம் நீடித்தே வரு கிறது.

    இருப்பினும் மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத் தின் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தே வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது.குளச்சலில் அதிகபட்சமாக 16.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    குளச்சல் 16.8, திற்பரப்பு 8.3, குழித்துறை 8, இரணியல் 7.4, களியல் 7.2, முள்ளங்கினாவிளை 4.6, பெருஞ்சாணி 3.2, பால மோர் 3.2, பேச்சிப்பாறை 3, கன்னிமார் 2.8, முக்கடல் அணை 2.6, புத்தன் அணை 2.6, நாகர்கோவில் 2.2, தக்கலை 2, பூதப்பாண்டி 1.2.

    மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு 446 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்த போதிலும் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் அடியிலேயே உள்ளது. பேச்சிப்பாறை அணையில் 17.76 அடியும், பெருஞ்சாணி அணையில் 37.05 அடியும் நீர்மட்டம் உள்ளது.

    • www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளபடி பின்பற்ற வேண்டும்.
    • விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.

    நீர் நிலைகளை பாது காக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழா வினை கொண்டாடும் போது, விநாயகர் சிலை களை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்தி மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளபடி பின்பற்ற வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப் பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவை யற்றதுமான, சுற்றுச் சூழலை பாதிக்காத மூலப்பொருள்க ளால் மட்டுமே செய்யப் பட்டது மான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்ப டுகிறது.

    சிலைகள் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்ப டலாம், மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தலாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக் கோல் பொருட் களை பயன்படுத்த கண்டிப் பாக அனுமதிக்கப் படாது, நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள் பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம் எண்ணெய் வண்ணப்பூச் சுக்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழ லுக்குகந்த நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சு இயற்கை சாயங்கள் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன் படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரயத்தின் விதி முறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்கள் கேட்டுக் கெள்ளப்படுகிறார்கள்.

    மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை மேலும் விவரங்களுக்கு அணுகலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2 பேர் படுகாயம்; 9 பேர் மீது வழக்கு
    • 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் திருவிழாவை யொட்டி இசை கச்சேரி நடந்தது. அப்போது இரவு சுமார் 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த பிரபாகரனுக்கும் ஜெய சூர்யா, கிஷோர், ஜெகன், ஆன்றனி உள்பட 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 5 பேரும் சேர்ந்து பிரபாகரனை அவ தூறாக பேசி கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

    இதில் படுகாயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சைக்காக கன்னியா குமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இதுகுறித்து பிரபாகரன் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஜெய சூர்யா, கிஷோர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

    இதேபோல் ஆரோக்கிய புரத்தை சேர்ந்த ஜெகன், ரகு, ராஜன், ஆன்றோ, பிரபாகரன் ஆகியோர் சேர்ந்து ஆன்றனியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆன்றனி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆன்றனி கன்னியாகுமரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஜெகன், பிரபாகரன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி அருகே கோவில் திருவிழா இசை நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×