கொல்லங்கோட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போலீசார் ரேஷன் அரிசியை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
கொல்லங்கோட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

கொல்லங்கோடு :

கொல்லங்கோடு ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜஸ்டின் ராஜ், தலைமை காவலர் கணேஷ் குமார், மற்றும் ேபாலீசார் மஞ்சத்தோப்பு பகுதியில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர்.

அப்போது சந்தே கத்துக்கு இடமான முறையில் ஒரு கார் வந்து கொண்டிருந்தது அதை நிறுத்தி சோதனை செய்த போது 300 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை கேரளாவுக்கு கடத்துவது தெரியவந்தது. போலீசார் அதை கைப்பற்றி அரசு கிடங்கில் ஒப்படைத்தனர்.

இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com