என் மலர்
நீங்கள் தேடியது "நுண்துளை அறுவை சிகிச்சை"
- உணவில் நார் சத்து குறைவாகவும், கொழுப்பு சத்து அதிகமாகவும் எடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது.
- குடல்வால்வு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் பொ ன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷா லிட்டி ஆஸ்பத்திரியில் 65 வயது நபர் வயிறு வீக்கம், வாந்தி, மலம் மற்றும் காற்று பிரிதலில் சிக்கல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவரை குடல் மற்றும் கல்லீரல் அறுவை சிகிட்சை சிறப்பு நிபுணர் டாக்டர் கரிகால் சக்கரவர்த்தி பரிசோதனை செய்தார்.
இதில் அவருக்கு குடல் வால்வு அழற்சி உருவாகி, உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காததால் குடல்வால்வு காரணமாக சிறுகுடல் மற்றும் பெருங்குடல் அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. எனவே அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குடல் வால்வு நீக்கப்பட்டது. அதன்பின் அவர் உடல்நிலை முன்னே ற்றம் அடைந்து வீடு திரும்பி னார்.
இதுதொடர்பாக டாக்டர் கரிகால் சக்கரவர்த்தி கூறியதாவது:-– குடல்வால்வு அழற்சி என்பது பரவலான நோய்களில் ஒன்று. பொதுவாக 10 முதல் 30 வயது வரை பெண்களை விட ஆண்களில் அதிகமாக காணப்படும்.
உணவில் நார் சத்து குறைவாகவும், கொழுப்பு சத்து அதிகமாகவும் எடுப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. இதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். குடல்வால்வு வெறும் அழற்சியாக வர லாம் அல்லது குடல் வா ல்வில் ஓட்டை, சீழ் வைத்தல், குடல் வால்வுடன் மற்ற குடல் ஒட்டுதல் என பல விதங்களாக பாதிக்கப்பட லாம்.மிகவும் அரிதிலும் அரி தாக குடல் வால்வு காரண மாக குடல் அடைப்பு ஏற்ப டுகிறது. வயதானவர்களுக்கு இந்நோய் வந்தால் முதலில் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்வது அவசியம். பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் குடல்வால்வு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






