என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சிலைகள் அமைக்க அதிரடி கட்டுப்பாடு
    • விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீ சார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    நாகர்கோவில் :

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (18-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமர்சையாக கொண்டாட இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா உள்ளிட்ட அனைத்து அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்துள்ள னர்.

    மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், மயில் விநாயகர், அன்ன விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள விநாய கர் சிலைகளை பொது மக்கள் வாங்கி செல்கின்ற னர். கோவில்களிலும், வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    பிரதிஷ்டை செய்யப்ப டும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை 2 வேளைக ளிலும் பூஜைகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வரு கிறது. பிரதிஷ்டை செய்யப் படும் சிலைகளை 22, 23, 24-ந்தேதிகளில் ஊர்வல மாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கப்ப டுகிறது. விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை மற்றும் ஊர்வ லத்திற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டா டப்படு கிறது.

    சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சா லைத்துறையிடமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறை யிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்ப டுவதை குறிக்கும் கடிதம் மின்சார துறையிடமிருந்து பெறவேண்டும். விநாயகர் சிலைகள் ஏற்கனவே வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுவ வேண்டும். அனு மதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் கள் கூடாரத்திலோ சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல மற்றும் வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.

    ஓலைப்பந்தல் அமைப்ப தைத் தவிர்க்க வேண்டும். சிலை நிறுவப்பட்ட இடத் தில் அரசியல் கட்சி அல்லது ஜாதி தலைவர்களின் தட்டிகள் வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி நேரமும் யாராவது 2 தன்னார்வ நல பாது காப்புக்காக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போலீசாருடன் ஆலோ சனை மேற்கொண்டார். விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியில் போலீசார் சிறப்பாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்

    • பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகையா (வயது 69). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் திசையன்விளையில் இருந்து கல்லூரி பஸ்சில் மாணவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை இறக்கி விட்டு விட்டு இரவு பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் இரவு சாப்பிடுவதற்காக களியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் முருகையா நடந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் மஞ்சுளா (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் தக்கலை மறைமாவட்ட சங்கமத்தில் நடைபெறுகிறது.
    • மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    தக்கலை சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்டமானது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இறைப்பணியாற்றி கொண்டிருக்கிறது. தக்கலை மறைமாவட்டம் உருவாகி 26 ஆண்டுகளில் முதன் முறையாக இம்மாமன்றம் நடைபெற உள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள சீரோ மலபார் உயர் பேராய மாமன்றத்திற்கு ஒரு முன் தயாரிப்பான இம்மாமன்றம் வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் தக்கலை மறைமாவட்ட சங்கமத்தில் நடைபெறுகிறது.

    தக்கலை மறை மாவட்ட ஆயர் மேதகு மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.

    இதில் வெவ்வேறு பணி நிலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுநிலையினர், துறவியர் மற்றும் குருக்கள் ஆகியோரை உள்ளடக்கிய 75 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட தங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தளிக்க இந்த மாமன்றம் உகந்த தளமாக இருக்கிறது.

    காலச்சூழலுக்கு ஏற்ப தக்கலை மறைமாவட்டத்தில் சீரோ மலபார் திருச்சபையின் பணியும் வாழ்வும்' என்னும் தலைப்பில் மறைமாவட்டம் சம்மந்தமான மிக முக்கியமான விஷயங்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. இம்மாமன்றம் சமகால சூழலைக்கருத்தில் கொண்டு, சபையின் நலனுக்காக நடத்தப்படுகிறது. இதிலிருந்து பெறப்படுபவை மறைமாவட்ட மேய்ப்பு பணிக்கான திட்டத்தை வடிவமைக்க உதவும்.

    நம்பிக்கை வாழ்வு புத்துயிர் பெறவும், தெளிவான நோக்கங்களுடன் மறைமாவட்டத்தின் அனைத்து மட்டங்களிலும் மேய்ப்பு பணிகளை தீவிரமாக முன்னெடுக்கவும், அனைவரும் கூட்டாக இணைந்து இயங்கவும், அதன் வழி நற்செய்திக்கு சான்று பகரவும் இம்மாமன்றம் புதிய சாளரங்களை திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இம்மாமன்றத்தில் கருத்துரையாளர்களாக இரிஞாலகுட மறைமாவட்ட ஆயர் மார் போளி கண்ணுகாடன், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இறுதி கூட்டத்தில் சங்ஙனாச்சேரி உயர் மறைமாவட்ட பேராயர் மார் ஜோசப் பெருந்தோட்டம் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.மாமன்றத்தின் வழிகாட்டுதல் குழுவின் தலைவராக தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவ்வத்து பறம்பில், பொதுச்செயலாளராக பேரருட்தந்தை ஜோஷி குளத்துங்கல், உறுப்பினர்களாக அருட்தந்தையர் ஜோசப் சந்தோஷ், ஷாஜன், ஆண்டனி ஜோஸ், அனில் ராஜ் டோமினிக், அபிலாஷ் சேவியர் ராஜ், அருட்சகோதரி ஜெசி தெரெஸ், திருவாளர் ஜாண் குமரித்தோழன் மற்றும் சோனிக் ரீகன் ஆகியோர் உள்ளனர்.

    மாமன்றத்திற்கான அனைத்து செயல்பாடுகளையும் மாமன்ற தலைவர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.அறிக்கை
    • 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டசபை தொகுதி உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் நலனுக்காக திருப்பதிசாரம் அரசு நெல் ஆராய்ச்சி விதைப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி மையம் வாயிலாக நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. இதில் நடப்பாணடில் 23 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    இது அதிர்ச்சியையும், விவசாயிகளுக்கு இழப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் விதை நெல் வாங்க வருகின்ற விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதைகளை தாங்களே உற்பத்தி செய்யும்போது காப்பீடு பெறுவதற்கு தேவையான தர சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மாதந்தோறும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற அலுவலர்கள் தற்போது விவசாயிகளுக்கு விதைகள் வழங்க முடியாத அவலநிலையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து விதை நெல் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை உருவாக்கி விவசாயிகளை பாதுகாக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் நடைபெற்றது
    • அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்

    கன்னியாகுமரி :

    கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 2023-

    2024-ம் நிதி ஆண்டுக்கான நபார்டு வங்கி நிதி உதவி திட்டத்தின் கீழ் கொட்டா ரம், மயிலாடி, பறக்கை ஆகிய 3 இடங்களில் உள்ள கால்நடை மருத்து வமனைகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த புதிய கட்டிடங் களின் திறப்பு விழா கொட்டாரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பூதலிங்கம் தலைமை தாங்கி னார். நாகர்கோவில் உதவி இயக்குனர் டாக்டர் நோபிள், நோய் புலனாய்வுத்துறை உதவி இயக்குனர் டாக்டர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொட்டாரம் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு புதிய கால்நடை மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், மாநில தி.மு.க.வர்த்தகர் அணி இணை செயலாளர் தாமரைபாரதி, அகஸ்தீஸ்வ ரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன், கொட்டாரம் பேரூர்தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், தக்கலை கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்கு னர் டாக்டர்எட்வர்ட் தாமஸ், கால்நடை பல்கலைக் கழக உதவிபேராசிரியர் டாக்டர் ஜெனசிஸ், பொதுப் பணித் துறை செயற்பொறி யாளர் வேலுசாமி, உதவி செயற் பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் மாரித் துரை, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகுதியான பயனாளிகளுக்கு இன்று காலையிலும் குறுஞ்செய்திகள் வந்தது
    • பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் 4 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் 4 லட்சம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டன.

    பூர்த்தி செய்து பெறப்பட்ட விண்ணப்ப படிவங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்தது. இதையடுத்து அதை கள ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 2 லட்சம் விண்ணப்பங்கள் கள ஆய்வு செய்யப்பட்டது. கள ஆய்வுக்கு பிறகு விண்ணப்ப படிவங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான தகுதியான பயனாளிகள் குறித்த விவரங்கள் செல்போனில் குறுஞ்செய்தி மூலமாக வெளியானது. குமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2000 பயனாளிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞர் உரிமை திட்டத்திற்கான டெபிட் கார்டை வழங்கி தொடங்கி வைத்தார். நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் ஒரு சில பெண்களுக்கு மட்டுமே கலைஞர் உரிமைத்தொகை திட்டத்திற்கான குறுஞ்செய்திகள் வந்திருந்தது. சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வரவில்லை. இதனால் பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போயிருந்தனர்.

    இந்த நிலையில் அந்த பெண்களுக்கும் தாமதமாக குறுஞ்செய்திகள் வந்து சேர்ந்தன. நேற்று நள்ளிரவு வரை குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்த பிறகு பெண்கள் உற்சாகம் அடைந்தனர். இன்று காலையிலும் ஒரு சில பெண்களுக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது. இதுவரை சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. மீதமுள்ள தகுதியானவர்களுக்கும் படிப்படியாக குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

    தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் வருகிற 18-ந்தேதிக்குள் குறுஞ்செய்திகள் வந்து வங்கி கணக்கில் ரூபாய் ஆயிரம் டெபிட் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுஞ்செய்திகள் வராதவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட காரணத்திற்கான தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். 18-ந்தேதி நிராகரிக்கப்பட்ட பயனாளிகளுக்கான குறுஞ்செய்திகள் வரும் எதற்காக விண்ணப்ப படிவங்கள் நிராகரிக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படும். அதன் பிறகு அந்த பயனாளிகள் பக்கத்தில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மூலமாக மீண்டும் அதை விண்ணப்பிக்கலாம். அதன்பிறகு அதிகாரிகள் அதை பரிசீலித்து கலைஞர் உரிமை திட்டத்திற்கான திட்டத்தில் சேர்த்துக்கொள்வது குறித்து பரிசீலனை மேற்கொள்வார்கள்.

    இது தொடர்பாக குமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம்,விளவங்கோடு, கிள்ளியூர், திருவட்டாறு தாலுகா அலுவலகங்களில் உதவி மையங்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த உதவி மையங்கள் வருகிற 18-ந்தேதி முதல் செயல்பட தொடங்கும். கலைஞர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக தகவல்களை தெரிந்துகொள்ள பொதுமக்கள் நேரடியாக அந்த தாலுகா அலுவலகங்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு சேவை 3 மணி நேரம் ரத்து
    • பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவா சையையொட்டி நேற்று காலையில் கன்னியா குமரியில் கடல் நீர் மட்டம் தாழ்ந்து உள் வாங்கியது. இதனால் படகு போக்கு வரத்து தாமதமாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

    இன்றும் 2-வது நாளாக கடல் உள் வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்பட்டது. இதனால் 2-வது நாளாக படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப் பட வில்லை. இதனால் அங்கு காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.இதற்கிடையில் பகல் 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதைத் தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.

    • மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாகவும் காட்சி அளித்தது
    • ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற வாரவிடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக காணப்படுகிறது. வழக் கம்போல இந்த வாரத்தின் கடைசி விடுமுறை நாளான சனிக்கிழமையான இன்று அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலை 5 மணியில் இருந்தே குவிய தொடங்கினார்கள். ஆனால் மழை மேக மூட்டம் காரணமாக வானம் மப்பும் மந்தாரமாகவும் காட்சி அளித்தது. இடையிடையே சாரல் மழை விழுந்து கொண்டிருந்தது. மழை மேகம் கலையாமல் தொடர்ந்து நீடித்ததால் கன்னியாகுமரி கடற் கரைக்கு சூரிய உதயம் காண வந்த சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சூரியன் உதயமாகும் காட்சியை தங்களது செல்போன்களில் படம் பிடிக்கலாம் என்று கடற்கரையில் செல்போன்களை தூக்கிப்பிடித்தபடி காத்தி ருந்த சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். அதேபோல கன்னியா குமரியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட ராட்சத அலைகளால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • 200 பாசன குளங்கள் நிரம்பியது
    • திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்து வரும் கனமழையின் காரணமாக மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் பர வலாக மழை பெய்து வந்த நிலையில் இன்று காலையில் மாவட்டம் முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலை 4 மணி முதல் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக இடை விடாது மழை பெய்தது. அதன் பிறகு விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.

    கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம் பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. கொட்டா ரத்தில் அதிகபட்சமாக 14.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக அங்கு ரம்மிய மான சூழல் நிலவுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.

    தொடர் மழையின் காரணமாக பாசன குளங்க ளில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்களில் 200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பி வழிகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் 75 சதவீதம் நிரம்பியுள்ளது. மற்ற குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காட்டிய நிலையில் தற்பொழுது மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 17.46 அடியாக உள்ளது. அணைக்கு 479 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 580 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 36.50 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்ப டுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பெருஞ்சாணி 2.6, களியல் 3, கொட்டாரம் 14.2, குழித்துறை 4.2, மயிலாடி 10.2, நாகர்கோவில் 5.2, புத்தன்அணை 3, தக்கலை 1.4, குளச்சல் 6, இரணியல் 8.4, பாலமோர் 1.4, மாம் பழத்துறையாறு 2, அடையா மடை 4.2.

    • கைதான 2 பேர் சிறையில் அடைப்பு
    • குளச்சல் போலீசார் நடவடிக்கை

    குளச்சல் :

    குளச்சல் அருகே மேற்கு நெய்யூர் காரவிளையை சேர்ந்தவர் லாசர் (வயது 62). சோடா கம்பெனி நடத்தி வந்த இவர், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரசில் விவசாய அணி துணை தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். சம்பவத் தன்று நண்பர்களான குளச்சல் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த செல்லப் பன் (65), கூத்தாவிளை தேவதாஸ் (48) ஆகியோரு டன் குளச்சலில் உள்ள டீக்கடை அருகே நின்று லாசர் பேசிக்கொண்டி ருந்தார்.

    அப்போது அவர்க ளுக்குள் திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் செல்லப்பன், தேவதாஸ் ஆத்திரத்தில் லாசரை தள்ளி விட்டனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு 12-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரி தாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்ப பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து செல்லப்பன், தேவதாஸ் ஆகியோரை தேடிவந்தனர். இந்த நிலையில் தேவதாஸ், குளச்சல் போலீஸ் நிலை யத்தில் சரணடைந்தார்.அவரை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மேலும் தலை மறைவாகி இருந்த செல்லப்பனை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் அஞ்சுகிராமத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார் அங்கு சென்று செல்லப்பனை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

    கேரளாவையொட்டி உள்ள தமிழகத்திலும் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள 5 சோதனை சாவடிகளிலும் போலீசாருடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வருபவர்கள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக காய்ச்சல் பரிசோதனை எல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இன்று காலையில் 3-வது நாளாக சோதனை நீடித்தது. இதுவரை கேரளாவில் இருந்து வந்த 2400 பேருக்கு காய்ச்சல் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமாக சுகாதார பணியாளர்கள் காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்ததையடுத்து அந்த 3 பேரையும் சுகாதார துறை அதிகாரிகள் மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து காய்ச்சல் பரிசோதனை நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் மாநகர பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதா? கொசு உற்பத்தி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளனர். மேலும் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகர பகுதியில் வழக்கத்தை விட தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல் பாதித்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து வருகிறார்கள்.

    குமரி மாவட்டம் முழுவதும் வழக்கமாக 30 முதல் 35 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தினசரி பாதிப்பு 40 முதல் 50 ஆக உயர்ந்துள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி, பத்மநாபபுரம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு தனிவார்டு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது.
    • குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் தூத்துறை சேர்ந்த பைஜு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், புதுவை மாநிலம் மற்றும் கடலூர் பகுதியை சேர்ந்த 2 பேர், அசாம் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், கேரளா சேர்ந்த ஒருவர் உட்பட 12 மீனவர்கள் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு சென்று கொண்டிருந்த இழுவை கப்பல் மீனவர்கள் விசைப்படகு மீது மோதியது. இதில் அவர்களது விசைப்படகு நடுகடலில் மூழ்கியது. 12 மீனவர்களும் கடலிலே தத்தளித்துக்கொண்டிருந்த நேரத்தில் விபத்து ஏற்ப டுத்திய இழுவை கப்பல் 12 மீனவர்களை மீட்டு மாலத்தீவு கொண்டு சேர்த்தது.

    மாலத்தீவு அதிகாரிகள் 12 மீனவர்களையும் விசாரணை கைதிகளாக மாலத்தீவில் வைத்திருந்தனர். மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்து சென்று 12 இந்திய மீனவர்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

    பின்னர் மீனவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து 12 மீனவர்களும் விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து மும்பை வந்து சேர்ந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் நேற்றிரவு 11 மணிக்கு திருவனந்தபுரம் வந்து சேர்ந்தனர். அங்கி ருந்து மீனவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

    குமரி மாவட்ட மீனவர்கள் தங்களது இல்லங்களுக்கு வந்து சேர்ந்தனர். வீடுகளுக்கு வந்த மீனவர்களை அவரது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் மல்க வரவேற்றனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மாலத்தீவு இந்திய தூதரக அதிகாரிகளுக்கும், அரசுக்கும் தெற்காசிய மீனவர் தோழமை பணி சர்ச்சில் நன்றி தெரிவித்துள்ளார்.

    ×