என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை மறை மாவட்ட மாமன்றம் 28-ந்தேதி தொடங்குகிறது
    X

    தக்கலை மறை மாவட்ட மாமன்றம் 28-ந்தேதி தொடங்குகிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் தக்கலை மறைமாவட்ட சங்கமத்தில் நடைபெறுகிறது.
    • மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    தக்கலை சீரோ மலபார் கத்தோலிக்க மறைமாவட்டமானது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் இறைப்பணியாற்றி கொண்டிருக்கிறது. தக்கலை மறைமாவட்டம் உருவாகி 26 ஆண்டுகளில் முதன் முறையாக இம்மாமன்றம் நடைபெற உள்ளது.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள சீரோ மலபார் உயர் பேராய மாமன்றத்திற்கு ஒரு முன் தயாரிப்பான இம்மாமன்றம் வருகிற 28,29,30 ஆகிய தேதிகளில் தக்கலை மறைமாவட்ட சங்கமத்தில் நடைபெறுகிறது.

    தக்கலை மறை மாவட்ட ஆயர் மேதகு மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார்.

    இதில் வெவ்வேறு பணி நிலைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுநிலையினர், துறவியர் மற்றும் குருக்கள் ஆகியோரை உள்ளடக்கிய 75 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தனிப்பட்ட தங்கள் விருப்பு வெறுப்புகளை கடந்து, தங்கள் கருத்துக்களை பகிர்ந்தளிக்க இந்த மாமன்றம் உகந்த தளமாக இருக்கிறது.

    காலச்சூழலுக்கு ஏற்ப தக்கலை மறைமாவட்டத்தில் சீரோ மலபார் திருச்சபையின் பணியும் வாழ்வும்' என்னும் தலைப்பில் மறைமாவட்டம் சம்மந்தமான மிக முக்கியமான விஷயங்கள் இதில் விவாதிக்கப்படுகின்றன. இம்மாமன்றம் சமகால சூழலைக்கருத்தில் கொண்டு, சபையின் நலனுக்காக நடத்தப்படுகிறது. இதிலிருந்து பெறப்படுபவை மறைமாவட்ட மேய்ப்பு பணிக்கான திட்டத்தை வடிவமைக்க உதவும்.

    நம்பிக்கை வாழ்வு புத்துயிர் பெறவும், தெளிவான நோக்கங்களுடன் மறைமாவட்டத்தின் அனைத்து மட்டங்களிலும் மேய்ப்பு பணிகளை தீவிரமாக முன்னெடுக்கவும், அனைவரும் கூட்டாக இணைந்து இயங்கவும், அதன் வழி நற்செய்திக்கு சான்று பகரவும் இம்மாமன்றம் புதிய சாளரங்களை திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இம்மாமன்றத்தில் கருத்துரையாளர்களாக இரிஞாலகுட மறைமாவட்ட ஆயர் மார் போளி கண்ணுகாடன், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் அந்தோணிசாமி சவரிமுத்து, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். இறுதி கூட்டத்தில் சங்ஙனாச்சேரி உயர் மறைமாவட்ட பேராயர் மார் ஜோசப் பெருந்தோட்டம் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.மாமன்றத்தின் வழிகாட்டுதல் குழுவின் தலைவராக தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பவ்வத்து பறம்பில், பொதுச்செயலாளராக பேரருட்தந்தை ஜோஷி குளத்துங்கல், உறுப்பினர்களாக அருட்தந்தையர் ஜோசப் சந்தோஷ், ஷாஜன், ஆண்டனி ஜோஸ், அனில் ராஜ் டோமினிக், அபிலாஷ் சேவியர் ராஜ், அருட்சகோதரி ஜெசி தெரெஸ், திருவாளர் ஜாண் குமரித்தோழன் மற்றும் சோனிக் ரீகன் ஆகியோர் உள்ளனர்.

    மாமன்றத்திற்கான அனைத்து செயல்பாடுகளையும் மாமன்ற தலைவர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×