இரணியல் அருகே வாகனம் மோதி பஸ் டிரைவர் உயிரிழப்பு

பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரணியல் அருகே வாகனம் மோதி பஸ் டிரைவர் உயிரிழப்பு
Published on

இரணியல் :

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகையா (வயது 69). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் திசையன்விளையில் இருந்து கல்லூரி பஸ்சில் மாணவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை இறக்கி விட்டு விட்டு இரவு பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.

பின்னர் இரவு சாப்பிடுவதற்காக களியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் முருகையா நடந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் மஞ்சுளா (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com