என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • திற்பரப்பில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
    • கோழிப்போர்விளையில் 32.2 மில்லி மீட்டர் பதிவு

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவும் விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை இடைவிடாது மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்பிறகு வானம் மப்பும் மந்தாரமு மாக காணப்பட்டது. அவ் வப்போது மழை பெய்தது. கோழிப்போர்விளையில் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 32.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    களியல், தக்கலை, அடையாமடை, கொட்டா ரம், மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிப்பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான இன்று அருவியில் குளிப்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தி ருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் தொடர்ந்து மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து சற்று அதிகரித்து உள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 17.56 அடியாக உள்ளது. அணைக்கு 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 581 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. பெருஞ் சாணி அணை நீர்மட்டம் 37.50 அடியாக உள்ளது. அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படு கிறது. தொடர் மழையின் காரணமாக விளவங்கோடு தாலுகாவில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக் கும் காயம் ஏற்பவில்லை. விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    வி வசாயிகளுக்கு தேவையான விதைகளை வேளாண் துறை அதி காரிகள் தங்கு தடையின்றி வழங்கி வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை 7.6, பெருஞ்சாணி 17.2, பூதப்பாண்டி 6.4, களியல் 20.6, குழித்துறை 26.4, கொட்டாரம் 14, மயிலாடி 8.4, நாகர்கோவில் 7.2, சுருளோடு 17, தக்கலை 19, குளச்சல் 6, இரணியல் 8.2, பாலமோர் 19.4, மாம் பழத்துறையாறு 20.6, திற்பரப்பு 16.8, கோழிப் போர்விளை 32.2, அடையாமடை 14.3, குந்தன்கோடு 14.4, ஆணைக்கிடங்கு 8.4, முக்கடல் 9.2.

    • மரக்கன்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • பெண் குழந்தைகள் இல்லத்தில் பா.ஜ.க பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது

    நாகர்கோவில் :

    பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73 வது பிறந்தநாள் விழா இன்று குமரி மாவட்டம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாள் விழா

    நாகர்கோவில் செட்டி தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பேரில் சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பிரதமரின் 73 வயதை குறிக்கும் வகையில் 73 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை பொன். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் மீனாதேவ், மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், தொழி லதிபர் என்ஜினீயர் ஜெயக் குமார், மாநகர தலைவர் ராஜன், கவுன்சி லர்கள் ரமேஷ், தினகரன், நாகர்கோ வில் தெற்கு மாநகர் முன் னாள் செயலாளர் ஸ்ரீதர் மற்றும் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.ஊட்டுவாழ் மடத்தில் உள்ள பெண் குழந்தைகள் இல்லத்தில் மாவட்ட பாரதியஜனதா பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் உணவு வழங்கப்பட்டது. இதில் சந்திர சேகர், விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு மாவட்ட பொருளாளர் முத்துராமன் ஏற்பாட்டில் இனிப்பு வழங்கப்பட்டது.

    • முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார்

    நாகர்கோவில் :

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளநிலை பொறியியல் முதலாம் ஆண்டு மாணவ-மாணவி களுக்கான வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பொறியியல் கல்வியின் தேவையையும், முக்கியத்துவத்தையும் அதில் சிறந்து விளங்க செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைத்தார். கணினி துறை பேராசிரியர் மீனாட்சி யம்மாள் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். வேதி யியல் துறை பேராசிரியர் ராதிகா கல்லூரியின் கட்ட மைப்பு வசதி பற்றி விளக்கி னார். ஆங்கிலத்துறை பேரா சிரியர் ஷாமிலா பேகம் கல்லூரியின் விதிமுறை களை பற்றி எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர், பேராசிரியை செய்து இருந்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.கேள்வி
    • விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவிக்க முன்வருமா?

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-திருப்பதிசாரம் வேளாண் விவசாய பண்ணையின் கீழ் 40 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. இதில் நடப்பாண்டில் 25 ஏக்கர் நிலத்தில் மட்டுமே விதைகள் உற்பத்தி செய்ய நெல் பயிரிடப்பட்டது. மீதமுள்ள 15 ஏக்கர் இருபோக நஞ்சை நிலத்தை அதிகாரிகள் கன்னிப்பூ சாகுபடியில் தரிசாக போட்டுள்ளனர்.

    40 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதிக்கு சந்தியாகுளம் மற்றும் அப்பகுதியில் அமைக் கப்பட்டுள்ள பெரிய உறை கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும், சம்மந்தப் பட்ட துறை அலுவலர்களின் அலட்சியத்தால் 15 ஏக்கர் நிலம் தரிசாக போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் விதைகள் வாங்க வருகின்ற விவசா யிகளுக்கு விதைகள் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட் டுள்ளது.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கும்பப்பூ சாகுபடிக்காக 92 மெட்ரிக் டன் விதைகள் விவசாயி களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றும் இது தொடர்பான பல்வேறு விளக்கங்களை அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் திருப்பதிசாரம் வேளாண் விவசாய பண்ணையின் கீழ் விதைகள் உற்பத்தி செய்வதற்கு 15 ஏக்கர் நிலத்தை வேளாண் அலுவலர்கள் ஏன் தரிசாக போட்டுள்ளார்கள் என்ப தற்கான பதிலினை அவர் தெரிவிக்கவில்லை.

    பாசனம் செய்வதற்கான சந்தியாகுளம் மற்றும் பெரிய உறை கிணற்றில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் அந்த 15 ஏக்கர் நிலத்தை தரிசாக போட்டு நெல் விதை ஏன் உற்பத்தி செய்யவில்லை. இதற்கான விளக்கத்தை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு தெரிவிக்க முன்வருமா? அரசின் மூலமாக மாதந்தோறும் சம்மந்தப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலர்கள் விவசாயிகளை அழைத்து கூட்டம் நடத்தி விவசாய நிலங்களை தரிசாக போடக்கூடாது என்றும் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கி வரு கிறார்கள். ஆலோசனைகள் வழங்குகின்ற வேளாண்மைத் துறை அலுவலர்கள் அரசுக்கு சொந்தமான நிலத்தை தரிசாக போட்டது ஏன்? இதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மைத்துறை உரிய பதிலளிக்க விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு உரிய பதில் கிடைக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறியுள்ளார்.

    • 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
    • விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது

    நாகர்கோவில் :

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டா டப்படுகிறது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து அமைப்புகள் தயாராகி வருகிறது.

    இந்து முன்னணி, இந்து மகா சபா, சிவசேனா, பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வீடுகளிலும், பொது இடங்களிலும் கோவில்களிலும் பிரதிஷ்டை செய்யப்படு கிறது.

    நாளை (18-ந்தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சிலை களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொ லிக்கிறது. விநாயகர் கோவில்களிலும் சிலை களை பிரதிஷ்டை செய்வ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித் துள்ளது. சிலைகளை ஏற்க னவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். உரிய அனுமதி பெற்று சிலைகளை பதிவு செய்ய வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன் படுத்தக்கூடாது. ஓலையால் வேயப்பட்ட கூரையில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூ டாது. பிரதிஷ்டை செய்யப் பட்ட விநாயகர் சிலைகள் அருகே 2 தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் கண் காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிஷனுக் குட்பட்ட பகுதிகளில் 2 ஷிப்டுகளாக போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.

    பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் 22, 23, 24-ந்தேதி ஊர்வல மாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. சிலை களை கரைப்பதற்கு 10 இடங்களில் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

    சொத்தவிளை கடற் கரை, கன்னியாகுமரி கடற்கரை, சின்னவிளை கடற்கரை, சங்குதுறை கடற்கரை, பள்ளி கொண்டான் அணை கட்டு, வெட்டுமடை கடற் கரை, மிடாலம் கடற்கரை, தேங்காய்பட்டணம் கடற் கரை, திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • கிலோ ரூ.500-க்கு விற்ற மல்லி ரூ.1500-க்கு விற்பனை
    • பிச்சி- ரூ.800, மல்லிகை- ரூ.1500, கிரேந்தி- ரூ.50, செவ்வந்தி- ரூ.100, அரளி- ரூ.100, சம்பங்கி- ரூ.180

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தைக்கு பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. நெல்லை மாவட்டம் பழவூர், ரோஸ்மியாபுரம், சங்கரன்கோவில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் இருந்து பல்வேறு பூக்கள் வருகின்றன. மதுரை மாவட்டத்தில் இருந்து மல்லிகை, ஊட்டி மற்றும் பெங்களூருவில் இருந்து ரோஜா பூக்கள் போன்றவையும் தினமும் வருகின்றன.

    மேலும் குமரி மாவட்டத்தில் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி போன்ற பகுதிகளில் இருந்தும் பூக்கள் தோவாளை சந்தைக்கு வருகிறது.

    இந்த பூக்கள் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. இது தவிர கேரள மாநில வியாபாரிகளும் இங்கு வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் (18-ந்தேதி) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக தோவாளை சந்தையில் இன்றே பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

    சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட மல்லிகை இன்று 3 மடங்கு அதிகரித்து ரூ.1500-க்கு விற்பனையானது. பிச்சிப்பூ கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்டது. தோவாளை சந்தையில் இன்று பூக்களின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

    பிச்சி- ரூ.800, மல்லிகை- ரூ.1500, கிரேந்தி- ரூ.50, செவ்வந்தி- ரூ.100, அரளி- ரூ.100, சம்பங்கி- ரூ.180, வாடாமல்லி-ரூ.50, கனகாம்பரம்-ரூ.700, ரோஜா- ரூ.190, மரிக்கொழுந்து- ரூ.100, கோழிக்கொண்டை-ரூ.50, தாமரை (1) -ரூ.5.

    • திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
    • 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலக திறப்பு விழா கலெக்டர் அலுவலகம் எதிரே சண்முகா தெருவில் நடந்தது. விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம். இதன்படி குமரியில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் இந்த திட்டம் முன்மாதிரி திட்டமாகும். ஒட்டுமொத்த இந்தியா இந்த திட்டத்தை உற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி இருந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வரி சையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகி யோர் சனாதனத்தை தவி ர்த்து வருகின்றனர்.

    சனாதனம் குறித்து அமை ச்சர் உதயநிதி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து இருப்பது இந்தியா கூட்டணியை உடைக்க மேற்கொள்ளும் சதி ஆகும். அவரது சதி முயற்சி பலிக்காது. சனாதனம் என்பது தீட்டு கொள்கையாகும். இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் நரேந்திர மோடி நடுங்குகிறார். இறுதியாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி வருகின்றனர். அடுத்து பாரத் என்ற பெயரும் நிரந்தரம் இல்லை.

    இனிமேல் இதனை இந்து ராஷ்ட்ரா என மாற்றுவார்கள். இதுதான் கோ ல்வால்கர் மற்றும் வீரசவாதரின் கனவு. இதனை தற்போது ஆர்.எஸ்.எஸ். நடைமுறை படுத்த முயல்கி றது. தமிழகத்தில் சனாதனத்திற்கு என்றும் இட மில்லை. அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பகலவன், திருமாவேந்தன், கோபி, தேவகி, சவுத்திரி, பாபு, நாஞ்சில் சுரேஷ், முஜிப் ரகுமான், ரியாஸ், சிராஜுதீன், உமேஷ், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
    • சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே உள்ள அனாதைமடம் மாநகராட்சி மைதானத்தில் மதுரை எம்.கே.சி. நிறுவனத்தாரின் ஆழ்கடல் குகை மீன்கள் பிரமாண்ட கண்காட்சி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.

    திறப்பு விழாவில் எம்.கே.சி. நிறுவனத்தின் உரிமை யாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் பொருட்காட்சி அரங்கை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    தொடர்ந்து பொருட்கா ட்சி அரங்கத்தில் வைக்கப்ப ட்டிருந்த செல்பி பாயிண்டுகள், ஆழ்கடல் மீன்கள் கண்காட்சி அரங்கம், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் கடைகள் பகுதி, பொழுதுபோக்கு ராட்டினம் பகுதி ஆகி யவற்றை பார்வையிட்டார்.

    விழாவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல குழு தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஐவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சதாசிவம், கவுன்சிலர்கள் ஜெயராணி, ரோசிட்டா திருமால், ரமேஷ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    பொருட்காட்சி குறித்து அதன் உரிமையாளர்கள் சிட்டிபாபு, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    மதுரை எம்.கே.சி. நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் பொருட்காட்சிகளை பிரமாண்டமாக நடத்தி வருகிறது. இப்போது ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சி மற்றும் பொருட்காட்சியை 10 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி உள்ளோம். சுமார் 25 லட்சம் மக்கள் இதை பார்த்து மகிழ்ந்து உள்ளனர்.

    இப்போது முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோ விலில் பொருட்காட்சி தொடங்கி உள்ளது. தினமும்

    மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டு கழித்து மகிழலாம். அக்டோபர் 30-ந்தேதி வரை 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

    ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியில் ஆழ்கடலில் குகை இருப்பது போல 200 அடி நீளத்தில் செட்டிங் அமைத்து அதில் 50 வகைகளுக்கும் மேற்பட்ட ஆயிரக்கணக்கான கடல் மீன்கள் சுற்றி வரும் அழகு குழந்தைகள் முதல் அனை வரையும் பார்த்து குதூகலம் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

    கடலுக்கு அடியில் உள்ள மீன்களை நேரில் பார்த்து ரசிப்பது போல இந்த கண்கா ட்சி அமைக்க ப்பட்டுள்ளது. குகைக்குள் முழுவதும் ஏ.சி. வசதி செய்யப்பட்டுள்ளது.

    பொருட்காட்சி அரங்கிற்குள் ஏராளமான விளையாட்டு உபகரண பொருட்கள் கடைகள், குழந்தைகளை மகிழ்விக்கும் பொம்மை பொருட்கள் கடைகள், பேன்சி கடைகள், வீட்டிற்கு தேவையான பொருட ்களை வாங்கி செல்லும் வகையில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

    மேலும் ஜெயண்ட் வீல் ராட்டினம், பிரேக் டான்ஸ் ராட்டினம், கொலம்பஸ் மற்றும் டிராகன் ராட்டினம், குழந்தைகள், சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் சைனா டோரா டோரா, ஹனி பீ ராட்டினம் சன்மூன் ராட்டி னம் போன்ற வகைகளும், 3டி அரங்குகள், பேய் வீடு அர ங்கம் ஆகிய வையும் பிர மாண்ட அளவில் இடம்பெ ற்றுள்ளன.சுனாமி ராட்டினம் சிறுவர்களை குழந்தைகளை குதூகலப்படுத்தும் மேலும் இங்கே தின்பண்டங்கள் உணவகம், உணவு திருவிழா அரங்கமும், பொழுது போக்கு பூங்கா அரங்கமும் இடம்பெற்று ள்ளன.

    பார்க்கிங் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்ப ட்டுள்ளன. பொது மக்கள் சிறுவர், சிறுமிகள், குழந்தை கள் என அனைவரும் ஆழ்கடல் குகை மீன்கள் கண்காட்சியை பார்த்து வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி பயனடை யும் படி எம்.கே.சி. நிர்வாகம் சார்பில் கேட்டு க்கொள்கிறோம்.

    • 16 தீயணைக்கும் படை வீரர்கள் பங்கேற்றனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளத்தில் நடந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கன்னியாகுமரிஅருகே உள்ள நரிக்குளத்தில் வெள்ளத்தில் சிக்குபவர் களை மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    தமிழ்நாடு தீயணைப்புத் துறை இயக்குனர் ஆபாஷ் குமார், குமரிமாவட்டகலெக்டர் ஸ்ரீதர் ஆகியோரின் உத்தரவின் பேரில் குமரி மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகுமார் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் இம்மானுவேல் தலைமையில் 16 தீயணைக்கும் படை வீரர்கள் பங்கேற்றனர். அப்போது நரிக்குளத்தில்வெள்ளத்தில் சிக்கிஉயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5பேரை தீயணைக்கும் படைவீர்கள் மீட்பு மிதவை படகு மூலம் ஆழமான பகுதிக்குச் சென்று மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    இந்த காட்சியை தீயணைக்கும் படை வீரர்கள் தத்ரூபமாக நடத்திகாட்டினார்கள். அதன் பிறகு அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கும் காட்சியும் நடத்தி காண்பிக்கப்பட்டது. இந்த காட்சியைப் பார்த்த பொதுமக்கள் உண்மை சம்பவம் போல் திகைத்துப் போய் நின்றனர். அதன் பிறகு தான் இது ஒத்திகை நிகழ்ச்சி என்பதை உணர்ந்த பொதுமக்கள் அதனை வேடிக்கை பார்த்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஒத்திகை நிகழ்ச்சி கன்னியாகுமரி அருகே உள்ள நரிக்குளத்தில் நடந்தது.

    • கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
    • 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    குளச்சல் :

    குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகு களும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டு மரங்களும் மீன்பிடித் தொழில் செய்து வரு கின்றன.விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். இந்நிலையில் நேற்று முதல் குளச்சல் சுற்று வட்டார பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.இன்று காலையிலும் மழை பெய்தது.9 மணிவரை மழை நீடித்தது.தொடர்ந்து மேக மூட்டமாக இருந்து வருகிறது.

    காற்றின் வேகமும் அதிக மாக உள்ளது. இதனால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.

    இதனால் மீன் வரத்து குறைந்தது.இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின.அவற்றுள் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.

    • சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவித்தால் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து போட்டியிடுவேன்
    • தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ பேச்சு

    திருவட்டார் :

    அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க. திருவட்டார் கிழக்கு ஒன்றியம் சார்பாக குலசேகரம் சந்தை சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் குற்றியார் நிமால் தலைமை தாங்கினார். குலசேகரம் பேரூர் செயலாளர் ஜெஸ்டின் ராஜ் வரவேற் றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்கீர்உசேன், திருவட்டார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய சுதர்ஷன், துணை செயலாளர் அண்ணா, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பீனாகுமாரி, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பிரதீப்குமார், பேரூர் செய லாளர்கள் மோகன்குமார், விஜுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், மாநில பேச்சாளர் தீக்கனல் லெட்சு மணன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

    முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூட்டத்தில் பேசியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்த லில் தலைமை கழகம் அறிவித்தால் பத்மநாபபுரம் தொகுதியில் அமைச்சர் மனோ தங்கராஜை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அவர் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை.

    ஆவின் நெய் தற்போது 110 ரூபாயாக உயர்ந்து உள்ளது. அதனை குறைக்க அவர் என்ன நடவடிக்கை எடுத்தார். இந்த தொகுதிக்கு எந்த ஒரு பெரிய திட்டங்களும் கொண்டு வரவில்லை.

    குலசேகரத்தில் செயல் பட்டு வந்த ரப்பர் ஒழுங்கு முறை விற்பனை கூடம் கடந்த சில மாதங்களுக்கு முன் தீ பற்றி எரிந்தது அதில் உறுப்பினராக இருக்கும் ரப்பர் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை பெற்று கொடுக்கவில்லை. குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவேன் என்று கூறினார். ஆனால் எங்கேயும் பசுமையை காணவில்லை.

    ஊழல் செய்த அமைச்சர் ஒருவர் விசாரணை கைதியாக சிறையில் இருக்கிறார். அவரை அமைச்சராக நிர்வாகத்தில் வைத்திருப்பது நல்லது அல்ல. ஆனால் தமிழக முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது அமலாக்க துறை, மணல் குவாரிகளில் ரெய்டு செய்து கொண்டிருக்கிறது. அரசு ரப்பர் கழகம் விரை வில் மூடும் நிலைமைக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவ குற்றாலம், பேச்சிப் பாறை கூட்டுறவு சங்க தலைவர் அல்போன்ஸ், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி துணை செய லாளர் அன்சார், திருவட் டார் மேற்கு ஒன்றிய பொரு ளாளர் ஆல்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட கலை இலக்கிய அணி பொருளாளர் எல்ஜின் நன்றி கூறினார்.

    • விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி நாடாளு மன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த சில நாட்களாக கேரளாவில் இருந்து இறைச்சி, மீன், மருத்துவ கழிவு உள்பட பல கழிவு பொருட்களை லாரியில் கொண்டு வந்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி விட்டு செல்கிறார்கள்.

    இதை தடுக்க பல்வேறு சட்டங்கள் இருந்த போதும் கழிவுகளை தொடர்ந்து கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இதனால் சுற்று வட்டார பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் சோதனைகளை பலப்படுத்தி, கழிவுகள் எதுவும் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவு இட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×