search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட புதிய அலுவலகம்
    X

    நாகர்கோவிலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட புதிய அலுவலகம்

    • திருமாவளவன் எம்.பி. திறந்து வைத்தார்
    • 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலக திறப்பு விழா கலெக்டர் அலுவலகம் எதிரே சண்முகா தெருவில் நடந்தது. விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்களை ஒன்றியங்கள் மற்றும் மாநகராட்சி அடிப்படையில் 144 மாவட்டங்களாக பிரித்துள்ளோம். இதன்படி குமரியில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

    முதல்-அமைச்சரின் இந்த திட்டம் முன்மாதிரி திட்டமாகும். ஒட்டுமொத்த இந்தியா இந்த திட்டத்தை உற்று திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை மிரட்டி இருந்தால் அதனை விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறது. பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை, காலை உணவு திட்டம் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை அரசு நிறைவேற்றி உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் வரி சையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகி யோர் சனாதனத்தை தவி ர்த்து வருகின்றனர்.

    சனாதனம் குறித்து அமை ச்சர் உதயநிதி பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து இருப்பது இந்தியா கூட்டணியை உடைக்க மேற்கொள்ளும் சதி ஆகும். அவரது சதி முயற்சி பலிக்காது. சனாதனம் என்பது தீட்டு கொள்கையாகும். இந்தியா கூட்டணியை கண்டு பிரதமர் நரேந்திர மோடி நடுங்குகிறார். இறுதியாக இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றி வருகின்றனர். அடுத்து பாரத் என்ற பெயரும் நிரந்தரம் இல்லை.

    இனிமேல் இதனை இந்து ராஷ்ட்ரா என மாற்றுவார்கள். இதுதான் கோ ல்வால்கர் மற்றும் வீரசவாதரின் கனவு. இதனை தற்போது ஆர்.எஸ்.எஸ். நடைமுறை படுத்த முயல்கி றது. தமிழகத்தில் சனாதனத்திற்கு என்றும் இட மில்லை. அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பகலவன், திருமாவேந்தன், கோபி, தேவகி, சவுத்திரி, பாபு, நாஞ்சில் சுரேஷ், முஜிப் ரகுமான், ரியாஸ், சிராஜுதீன், உமேஷ், யூசுப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×