என் மலர்
கன்னியாகுமரி
- கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
- கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2265 வழங்கப்படும்
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், கேசவன் புதூர், அரும நல்லூர், தெரிசனங்கோப்பு, பூதப்பாண்டி, இறச்சகுளம், திட்டுவிளை உள்ளிட்ட இடங்களில் தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்களை விவசாயிகள் தோவாளை கொள்முதல் நிலையம் கொண்டு வந்து கொடுப்பார்கள். சமீப காலமாக அங்கு நெல்களை கொண்டு வந்தால், அதிகாரிகள் நெல்கள் ஈரமாக இருப்பதால் எடுக்க முடியாது என்று திருப்பி அனுப்புவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கொள்முதல் நிலையத்தில் 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2265 வழங்கப்படும். ஆனால் தனியார் ரைஸ்மிலில் 87 கிலோவுக்கு ரூ. 1750 கிடைக்கும். இதில் வண்டி வாடகை செலவுகள் அதிகம். ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள விவசாயி களிடம் நெல்களை கொள்மு]தல் செய்ய கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
- வயநாட்டில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் வழியில் கன்னியாகுமரி வந்தார்
- ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட உள்ளார்
கன்னியாகுமரி :
கேரள மாநிலம் வயநாடு சுல்தான் புத்தேரியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 34). இவர் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிறு வயதிலேயே நிறையபேர் இதய நோயால் இறந்து வருவதால், அதை தடுக்க உடற்பயிற்சி அவசியம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கேரள மாநிலம் வயநாடு முதல் கன்னியாகுமரி வழியாக காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் வரை நடை மற்றும் ஓட்டமாக செல்லும் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி அவர் கடந்த 11-ந்தேதி விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.
திருவனந்தபுரம், நாகர்கோவில், கொட்டாரம் வழியாக நேற்று கன்னியாகுமரி வந்தார். இன்று காலை 7 மணிக்கு அவர் கன்னியாகுமரி பெரியார் நகரில் இருந்து ஓட்டமாக புறப்பட்டு சென்றார். இவருடன் அவரது மனைவியும், மனைவியின் சகோதரனும் செல்கின்றனர். கன்னியாகுமரியில் இருந்து தனது ஓட்டப்பயணத்தை தொடங்கிய அவர் நெல்லை, மதுரை, சேலம், பெங்களூர், மும்பை வழியாக ஸ்ரீநகர் சென்று முடிக்க உள்ளார். ஒரு நாளைக்கு 60 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடி 2 மாதங்களில் ஸ்ரீநகரை சென்றடைய திட்டமிட்டுள்ளார். மொத்தம் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை ஓடியே கடக்க உள்ளார்.
- மர்மமாக இறந்துகிடந்தது குறித்து போலீசார் விசாரணை
- போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை :
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் படப்பகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி பிரேமலதா மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
சுரேசுக்கு மது பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரேமலதா தனது குழந்தைகளுடன் கணவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் சுரேஷ் தனியாக வசித்து வந்தார்.
தினமும் காலையில் வேலைக்கு செல்லும் அவர், மாலையில் மது அருந்தியபடி வருவாராம். நேற்று மாலையும் சுரேஷ் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வீட்டின் அருகே உள்ள கால்வாயில் அவர் பிணமாக கிடந்துள்ளார்.
இதனை அந்த வழியே சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கொற்றிகோடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர்.
அவர்கள் கால்வாயில் பிணமாக கிடந்த சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது மனைவிக்கும் தகவல் கொடுத்தனர்.
வீட்டுக்கு சென்ற சுரேஷ் கால்வாயில் பிணமாக கிடந்தது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. அவரை யாராவது அழைத்துச் சென்று தாக்கி இருக்கலாமா? அல்லது போதையில் கால்வாயில் தவறி விழுந்ததால் இறந்தாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
- திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருவட்டார் :
திருவட்டார் அருகே கொசுவன்பிலாவிளை மாத்தார் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது 53), கட்டிட தொழிலாளி.
இவர் தனது தம்பியின் பக்கத்து வீட்டின் மாடியில் சாய்ந்து கிடந்த ரப்பர் மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக சென்றார். அந்த ரப்பர் மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி இருந்தது.
இதை பார்க்காமல் கிறிஸ்துராஜ் மரத்தின் கிளைகளை வெட்டும்போது இவர் மீது விஷ வண்டுகள் கொட்டியது. இதில் இவரின் உடல் முழுவதும் வீக்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கிறிஸ்துராஜ் பரிதாபமாக இறந்தார். இவரது மகன் ஸ்டாலின் கொடுத்த புகாரின் பேரின் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
கிள்ளியூர் :
புதுக்கடை அருகே உள்ள இனயம் கடற்கரை பகுதி இனியா நகரில் படகுகள் உருவாக்கும் கம்பெனி உள்ளது. இதை சிதறால் பகுதியை சேர்ந்த ராபர்ட் (வயது 45) என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 23-ந்தேதி இரவு பணி முடிந்து கம்பெனியை மூடிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை மறுபடியும் வந்து பார்த்தபோது, கம்பெனியின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
கம்பெனியின் உள்ளே சென்று பார்த்தபோது, படகு தயாரிக்க பயன்படுத்தும் கட்டர், மெஷின், சுவிட்ச் போர்டு, வயர் உட்பட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக புதுக்கடை போலீசில் ராபர்ட் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் திருட்டில் ஈடுபட்டவர் கண்டன்விளை பகுதி சித்தன் தோப்பை சேர்ந்த ஜெஸ்டின் ஆன்றோ (36) என்பது தெரியவந்தது. இவர் தற்போது இனயம் மாதா காலனியில் வசித்து வருகிறார். மேலும் இனயம் புத்தன்துறை ஊராட்சியில் ஒப்பந்த முறையில் குப்பை அள்ளும் பணி செய்து வருகிறார் எனவும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை பகுதி கடலோர கிராமங்களில் உள்ள மேலும் பல படகு தயாரிப்பு கம்பெனிகளில் இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுள்ளதாக ஏற்கனவே புதுக்கடை போலீசில் புகார் உள்ளது. அந்த திருட்டு சம்பவங்களிலும் ஜெஸ்டின் ஆன்றோ சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
- புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகா னந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கோவிலில் ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி சன்னதி, பத்மாவதி தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி, கருடாழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன.
இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 27 லட்சத்து 30 ஆயிரத்து 302 பக்தர்கள் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். இந்த திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 381 பேரும், ஜூலை மாதம் 62 ஆயிரத்து 240 பேரும், ஆகஸ்ட் மாதம் 61 ஆயிரத்து 666 பேரும், இந்த செப்டம்பர் மாதம் நேற்று வரை 45 ஆயிரத்து 15 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை அன்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 341 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை
- நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை
நாகர்கோவில் :
தக்கலை அருகே அப்பட்டுவிளை சுபாஷ் நகரை சேர்ந்தவர் மிக்கேல். இவரது மனைவி மரிய நட்சத்திரம் (வயது 73).
இவர் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற ஜெப கூடத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். ஜெப கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை காண வில்லை.
இதையடுத்து மரிய நட்சத்திரம் நகையை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் நகை கிடைக்கவில்லை. இது குறித்து அவர் வடசேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
நகை மாயமான பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மரிய நட்சத்திரத்திடம் நகையை யாராவது பறித்து சென்றார்களா? அல்லது நகையை தவற விட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மாவட்ட செயலாளர் மகேஷ் பங்கேற்பு
- பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
ஆரல்வாய்மொழி :
ஆரல்வாய்மொழி நகர தி.மு.க. சார்பாக பூத் நிர்வாகிகள் கூட்டம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் உள்ள பூத் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் கலந்துகொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
ஒன்றிய சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜோசப், ஒன்றிய செயலாளர் செல்வன், தலைமை கழக பேச்சாளர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் ரகுமான், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் அகஸ்டின், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற முன்னாள் துணை தலைவர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர் முருகன் சதீஷ்குமார், ராஜபாபு, சந்திரன், சேதுவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.
- கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
சென்னை, நெல்லை இடையே வந்தே பாரத் ரெல் சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், அந்தியோதயா உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.
அதிலும் குருவாயூர், அனந்தபுரி ெரயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இருக்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது. தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் குமரி மாவட்டத்தை சேர்ந்த பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறையும் சொந்த ஊர் வந்து, திரும்ப ெரயில் டிக்கெட் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது. மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ெரயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வந்தே பாரத் ெரயிலின் வேகத்தோடு ஒப்பிட்டால் கூடுதலாக 45 நிமிடங்கள் இயக்கினாலே போதும். அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்டத்தில் இருந்து தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ெரயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்ப டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
- 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில், செப்.26-
குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரண மாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கும்பப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக் கப்பட்டுள்ளது. பேச்சிப் பாறை அணையின் நீர்மட் டம் இன்று காலை 21.50 அடியாக இருந்தது.
அணைக்கு 618 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 434 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது. அணைக்கு 306 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் 634 கன அடி தண்ணீரும் சானல் களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் நிரம்பி வழிகிறது. சானல்களிலும் தண்ணீர் வந்து கொண்டிருப்பதை யடுத்து விவசாயிகள் சாகு படி பணியை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் கும்பப்பூ சாகுபடி பணி நடைபெற்று வருகிறது. பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம் பகுதிகளில் ஏற்கனவே நாற்றுப் பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
உழவு பணிகளில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை யடுத்து அவர்களுக்கு தேவை யான விதை நெல் களை தங்குதடையின்றி வழங்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 6 ஆயிரம் ஹெக்டேரில் சாகு படி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள் ளது.
- வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
- மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவி ழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், சிறப்பு அன்ன தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 24-ந்தேதி நடக்கி றது. இதையொட்டி அன்று மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. இதை யொட்டி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஏராள மான மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், ஐஸ் வியாபாரம், விளையாட்டு சாதன பொருட்கள் கடை கள், ராட்சத ராட்டினம், சிறுவர்கள் விளையாடும் சறுக்கு விளையாட்டு மற்றும் சுழலும் ராட்டினம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்க ளும் இடம்பெறுகின்றன.
இந்த பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த பகுதியில் திருவிழா காலங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு இந்து அறநிலையத்துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஒரு நாள் மட்டும் திருவிழா கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
குமரி மாவட்ட கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், ஆய்வாளர் சரஸ்வதி, கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.
திருவிழா கடைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த குமார் என்பவர் இந்த திருவிழா கடைகளை ஏலம் எடுத்துள் ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதி மற்றும் நாகர் கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதி மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் அமைந்து உள்ள பகுதி, பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
- போலீசில் கணவர் புகார்
- சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
என்.ஜி.ஓ.காலனி :
சுசீந்திரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 32), தாமரை பூ வியாபாரி.
இவரது மனைவி ஜெயஸ்ரீ (22), பட்டதாரி.
இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணமானது. திருமணத்திற்கு பிறகு ஜெயஸ்ரீ, கணவருடன் தனியாக வசித்து வந்தாக தெரிகிறது. ஆறுமுகம் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு 8 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவாராம்.
நேற்று முன்தினமும் அவர் வழக்கம் போல் வேலைக்குச் சென்றார். இரவு 8 மணிக்கு அவர் வந்தபோது, வீட்டில் ஜெயஸ்ரீ இல்லை. வெளியில் எங்காவது சென்றிருப்பார் என ஆறுமுகம் கருதினார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனை தொடர்ந்து உறவினர் வீடுகளில் ஆறுமுகம் விசாரித்தார். ஆனால் ஜெயஸ்ரீ பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜெயஸ்ரீயின் தோழிகளை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இருப்பினும் அவர் எங்கு சென்றார் என்ற விவரம் கிடைக்கவில்லை.
ஆகவே தனது மனைவி மாயமானது குறித்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
புதுப்பெண்ணான ஜெயஸ்ரீ கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்றாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 மாதத்தில புதுப்பெண் மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






