என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • சக்தி வேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி யது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜி.ஓ.காலனி :

    நாகர்கோவில் கோட்டார் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 34). இவர் கன்னியா குமரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    சுசீந்திரம் புறவழிச்சாலை யில் வந்து கொண்டிருந்த போது சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளை தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (60) என்பவர் ரோட்டை கடந்து சென்றார். அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சக்திவேல், கனகராஜ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சக்தி வேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி யது. அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று படு காயத்துடன் கிடந்த கனக ராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் மனுக்கள் பெற்றார்
    • குமரிமாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன.

    நாகர்கோவில் :

    குமரிமாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கீழ் 490 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் நாகர்கோவில், பத்மநாபபுரம், பூதப்பாண்டி, குழித்துறை மற்றும் செங்கோட்டை ஆகிய 5 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் 5 தொகு திகளுக்குட்பட்ட கோவில்களில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல் குறை தீர்க்கும் முகாம் நாகர்கோவில் தொகுதிக்கு உட்பட்ட நாகராஜா கோவிலில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமுக்கு அறங்காவலர்குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி மனுக்களை பெற்றுக் கொண்டார். இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார்.

    முகாமில், கும்பாபிஷேகம் நடக்காத கோவில்களில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் திருப்பணிகளை உபய தாரர்கள் மூலம் செய்ய அனுமதி பெற்று தர வேண்டும். வேலைவாய்ப்பு, கோவில் திருவிழாக்களில் சமய சொற்பொழிவு மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடத்த அனுமதி வாங்குவது, ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கோவில்களில் மராமத்து பணிகளை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மனுக்கள் அளிக்கப் பட்டன. முகாமில் அறங்காவலர்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், சுந்தரி, கோவில் ஸ்ரீகாரியங்கள், மேலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு அருகே உள்ள கடம்புவிளை சாத்தங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 35) வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது தந்தை காமராஜனை அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (37) தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. இந்த முன்விரோதத்தில் ஜெபராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நின்ற காரில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புடைய வெல்டிங் உபகரணங்களை விஜயகுமார் திருடி சென்றதாக புகார் செய் யப்பட்டது. அதன்பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சங்குரொட்டி பகுதியில் கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் நாயர், ஏட்டு கணேஷ்குமார் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தலைமறைவாக இருந்த விஜயகுமார் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • உரிமையாளரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம்
    • போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கோட்டார் சுமை தாங்கி தெருவை சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் கடந்த 24 ந் தேதி வைத்தியநாதபுரம் முத்தா ரம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் செந்தில் குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செந்தில்குமார் நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தில்குமார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வந்த னர். இந்த நிலையில் செந்தில்குமார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் நேற்று மதியம் கோட்டார் போக்குவரத்து பிரிவு போலீஸ் நிலையம் முன்பு நின்று கொண்டி ருந்தது. இதை பார்த்த செந்தில் குமாரின் உறவி னர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு வந்து பார்த்தபோது காரில் யாரும் இல்லை. இதைத்தொடர்ந்து காரை யாரும் எடுத்துச் செல்ல முடியாமல் முன் மற்றும் பின் சக்கரத்தில் பூட்டு போட்டனர். இந்த நிலையில் நேற்று மதியம் அந்த பூட்டு களை உடைத்து மர்மநபர் கள் காரை எடுத்துச் சென்றனர். போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தப் பட்டிருந்த காரை பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 வாலி பர்கள் காரின் பூட்டை உடைப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் சென்னை பதிவு எண்ணை கொண்டது ஆகும். இதையடுத்து கார் பதிவின் மூலமாக உரிமை யாளரின் முகவரியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் முக வரி கிடைக்க வில்லை .

    இதனால் அதன் உரி மையாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கி டையில் காரில் போடப் பட்டிருந்த பூட்டை உடைத்து காரை திருடிச் சென்ற நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • நாளை மறுநாள் நடக்கிறது
    • முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    உலக இருதய தினத்தை முன்னிட்டு கால்வின் மருத்துவமனை சார்பில் நாகர்கோவிலில் 10 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டி நாளை மறுநாள் (29-ந்தேதி) நடைபெற உள்ளது.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பங்கேற்கும் வகையில் ஆண்கள், பெண்கள், 14-வயதுக்குட் பட்டவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என போட்டிகள் நடக்கிறது.

    29-ந்தேதி காலை 5 மணிக்கு போட்டியாளர்கள் பதிவு செய்யப்பட்டு காலை 6 மணிக்கு பட்டகசாலியன் விளை கால்வின் மருத்துவமனையில் இருந்து மாரத்தான் போட்டி தொடங்குகிறது. போட்டி யில் பங்கேற்ப வர்களுக்கு டி-சார்ட், காலை உணவு, மெடல் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்ப வர்களுக்கு ரொக் கத்தொகை வழங்கப் படுகிறது. முதல் பரிசு ரூ.7 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம், 3-ம் பரிசு ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து காலை 8 மணிக்கு வடசேரி அண்ணா விளையாட்டு மைதானத்தில் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடக்கி றது. இதில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார். இதற்கான ஏற்பாடுகளை கால்வின் மருத்துவமனை சார்பில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    • நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி :

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டு சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு என்ற தலைப்பில் இன்று நாடு முழுவதும் உலக சுற்றுலா தின விழா கொண்டா டப்பட்டது.

    குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குமரி மாவட்ட சுற்றுலாத்துறை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தின விழாவை கன்னியாகுமரி யில் இன்று கொண்டாடியது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரியில் மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. கன்னியாகுமரி நான்கு வழி சாலை முடியும் ஜீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து காலை 7 மணிக்கு தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார்.

    அகஸ்தீஸ்வரம் விவே கானந்தா கல்லூரி, விவேகானந்தா பாலி டெக்னிக் கல்லூரி, பால்குளம் ரோகிணி பொறி யியல் கல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். கன்னியா குமரி சீரோ பாயிண்ட் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த மினி மாரத்தான் ஓட்டம் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு வரை சென்று திரும்பி மீண்டும் அதே வழியாக சீரோ பாயிண்ட் பகுதியை சென்ற டைந்தது. மொத்தம் 6 கிலோ மீட்டர் தூரம் இந்த மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது.

    தொடக்க விழா நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அகஸ்தீசன், குமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பி ரண்டு மதியழகன், கன்னியா குமரி துணை சூப்பிரண்டு மகேஷ்குமார், குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், உதவி அலுவலர் கீதா ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதன் பின்னர் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணி நடந்தது. மேயர் மகேஷ் தலைமையில் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.

    விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழக படகுத்துறையில் வைத்து சுற்றுலாத் துறை சார்பில் தமிழக கலாச்சார முறைப்படி நெற்றியில் சந்தனம் குங்குமம் திலகமிட்டு சங்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு இனிப்புடன் சுற்றுலா கையேடும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இது தவிர பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இடையே சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவை யொட்டி பேச்சு மற்றும் கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி மாணவர்களின் பேரணியும் நடந்தது. ஓட்டல் மற்றும் லாட்ஜூகளில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அதிகாரி சதீஷ்குமார் உதவி அலுவலர் கீதா ராணி ஆகியோர் செய்து இருந்த னர்.

    • பதட்டம் நிலவியதால் போலீஸ் குவிப்பு
    • கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கு திரண்டனர்.

    மேலும் வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை சூப்பிரண்டு நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று)பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நடக்காது என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், ஜெப கூடம் கட்ட ஏற்கனவே தடை உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. இந்த செயல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால், கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதட்டத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    • மேயர் மகேஷ் பங்கேற்பு
    • வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் :

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்பட்ட அமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து நாகர்கோவில் கவிமணி பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ. 72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை யடுத்து 5 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டது.

    இதனை சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கவிமணி பள்ளியில் நடந்த விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புதிய வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் திட்ட அதிகாரி பாபு, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், தி.மு.க. நிர்வாகிகள் அருண் காந்த், சரவணன், தொடக்க கல்வி அலுவலர் தாம்சன், உதவி அதிகாரி எட்வின் ஜேக்கப், பள்ளி தலைமை ஆசிரியர் கமலா உள்பட பலர் கலந்து கொண்டனர். புதிய வகுப்ப றையில் மாணவ-மாணவி கள் எளிதில் கல்வி கற்றுக் கொள்ள வசதியாக வரைபடங்கள் வரையப் பட்டிருந்தது.

    தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் சம்பந்தப் பட்ட வரை படங்கள் ஒவ்வொரு வகுப்ப றையிலும் வரையப்பட்டு உள்ளது. இதேபோல் வல்லன்குமாரன்விளை பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில் மாநக ராட்சியில் 44-வது வார்டுக்குட்பட்ட சுவாமி விவேகானந்தர் தெருவில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 33-வது வார்டுக்குட்பட்ட காந்தி நகரில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 46-வது வார்டுக் குட்பட்ட வடக்கு சூரங்குடி பள்ளி வாசல் முன்புள்ள தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 47-வது வார்டு வள்ளன்குமாரவிளை பகுதி யில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார் தளம், 40-வது வார்டுக்குட்பட்ட பைத்தும் மால் நகரில் ரூ.5 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி, 26-வது வார்டு வசந்த் நகர் எம்.கே. தெருவில் ரூ10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்

    • மேலும் சலுகை கட்டணத்தில் சிகிச்சைகளும் செய்யப்படு கிறது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மார்த்தாண்டம் :

    சாமியார்மடம் ரத்னா நினைவு மருத்துவமனையில் பெண்களின் கர்ப்பப்பை கட்டிகளுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நேற்று தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த முகாமில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் தேவை ப்படுகின்ற வர்களுக்கு இலவசமாக ஸ்கேன் எடுக்கப்படுகிறது. முகாமில் மகளிருக்கு ஏற்படும் பல்வேறு விதமான உடல் பிரச்சினைகளுக்கும், வியாதிகளுக்கும் உடனடி யாக தகுந்த இலவச மருத்துவ ஆலோசனை வழ ங்கப்படுகிறது. மேலும் சலுகை கட்டணத்தில் சிகிச்சைகளும் செய்யப்படு கிறது.

    இதில் கலந்துகொள்ளும் பெண்களில் அறுவை சிகிச்சை தேவைபடு பவர்க ளுக்கு சலுகை கட்டணத்தில் அறுவை சிகிச்சை செய்யப்ப டுகிறது.

    சிறப்பு மருத்துவ முகாமை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் மகிழன் தொடங்கி வைத்தார். முகாமில் ரத்னா டெஸ்ட் டியூப் பேபி மைய இயக்குனர் டாக்டர் சாந்தி மகிழன் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை ரத்னா நினைவு மருத்துவமனை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    • கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.
    • ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வளாகத்துக்குள் மொத்தம் 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுஉள்ளன.

    இந்த உண்டியல்கள் அனைத்தும் 2 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். கோவிலின் வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டி யல் மட்டும் மாதந்தோறும் திறந்து எண்ணப்பட்டு வருகிறது. நிரந்தர உண்டி யல்கள் கடந்த மாதம்30-ந்தேதி திறந்து எண்ணப்ப ட்டது.

    இந்த நிலையில் 25 நாட்களுக்கு பிறகு 17 நிரந்தர உண்டியல்களும் குமரி மாவட்ட திருக்கோவில் களின் இணை ஆணையர் ரத்தின வேல்பாண்டியன், குமரி மாவட்ட திருக்கோ வில்களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்ரா ஜேஷ்கு மார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் தங்கம், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்க ளின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கணக்கர் கண்ணதாசன் பொருளாளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இன்று காலை திறந்து எண்ணப்பட்டது.

    இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாவர்கள், குமரி மாவட்டத்தில்உள்ள திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்திசெவ்வாடை பெண் பக்தர்கள் ஈடுபட்ட னர். இந்த உண்டியல் மூலம் ரூ.6 லட்சத்து 65 ஆயிரத்து 939 வசூலானது. மேலும் ஒரு கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைத்தன.

    • டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்
    • தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது

    தக்கலை :

    தக்கலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருவிதாங்கோடு கைத குழி பகுதியில் சென்ற போது, வேகமாக ஒரு டெம்போ வந்தது. அதனை நிறுத்தும்படி போலீசார் கூறினர். ஆனால் அந்த டெம்போ நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து போலீசார் விரட்டிச் சென்று மடக்கினர்.

    டெம்போ டிரைவர் பிடிபட்ட நிலையில் அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த டெம்போவில் செம்மண் கடத்துவது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் ஷாஜன் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் கண்ணனூர் பகுதியை சேர்ந்த அஜித், கைதகுழி பகுதியை சேர்ந்த விஜி என்றும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் மரியாதை
    • அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது.

    திருவட்டார் :

    குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய பொறியாள ரான ஹம்பிரே அலெக்சாண்டர் மிஞ்சின் என்பவரால் கட்டப்பட்டது. இவரது அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைததது.

    பொதுமக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்ம திப்பால் மன்னர், பொறி யாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்துவர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.

    அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு வந்து பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    நேற்று அவரின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது அர்ப்பணிப்பு மிக்க பணிகளை நினைவு கூர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சுருளோடு சுரேஷ் முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட அணி நிர்வாகிகள் அனாஸ், ஜெஎம்ஆர், அமல்ராஜ், கிளை செயலாளர்கள் அனிஷ்குமார், ஆல்பின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி, விவசாய அணியினர் செய்திருந்தனர். முன்னதாக மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் பிறந்த தினம் நேற்று என்பதால் அவரது படத்துக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    ×