search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணை பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் 110-வது நினைவு தினம்
    X

    பேச்சிப்பாறை அணை பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் 110-வது நினைவு தினம்

    • மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில் மரியாதை
    • அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது.

    திருவட்டார் :

    குமரி மாவட்டத்தின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சிப்பாறை அணை. 100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் இந்த அணை திருவிதாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய பொறியாள ரான ஹம்பிரே அலெக்சாண்டர் மிஞ்சின் என்பவரால் கட்டப்பட்டது. இவரது அயராது முயற்சியால் அணை கட்டும் பணி இறுதி வடிவம் பெற்று நிறைவடைந்தது. அடர்ந்த காட்டு பகுதியில் இவரது அயராது உழைப்பு மன்னரை வியக்க வைததது.

    பொதுமக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற இவர் இங்கிலாந்தில் 1868-ம் ஆண்டு அக்டோபர் 8-ந்தேதி பிறந்தார். 1913-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது மறைவு மன்னரை அதிர்ச்சியடைய செய்தது. இவர் மீது கொண்ட நன்ம திப்பால் மன்னர், பொறி யாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் உடலை நாகர்கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்துவர செய்து பேச்சிப்பாறை அணை பகுதியில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தார்.

    அவரது தன்னலமற்ற சேவையை நினைவு கூறும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான அக்டோபர் 8, நினைவு நாளான செப்டம்பர் 25 ஆகிய நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர், மக்கள் பிரதிநிதிகள் திரண்டு வந்து பேச்சிப்பாறை அணையிலுள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.

    நேற்று அவரின் 110-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது அர்ப்பணிப்பு மிக்க பணிகளை நினைவு கூர்ந்து பேச்சிப்பாறை அணைக்கு அருகில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறையினர் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

    தி.மு.க. மாவட்ட விவசாய தொழிலாளர் அணியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சுருளோடு சுரேஷ் முன்னிலையில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட் டது.

    இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், திருவட்டார் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஜோஸ் எட்வர்ட், மாவட்ட அணி நிர்வாகிகள் அனாஸ், ஜெஎம்ஆர், அமல்ராஜ், கிளை செயலாளர்கள் அனிஷ்குமார், ஆல்பின் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி, விவசாய அணியினர் செய்திருந்தனர். முன்னதாக மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் பிறந்த தினம் நேற்று என்பதால் அவரது படத்துக்கு மரி யாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×