search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெபக்கூடம் கட்டும் விவகாரம் - நாகர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு
    X

    ஜெபக்கூடம் கட்டும் விவகாரம் - நாகர் கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு

    • பதட்டம் நிலவியதால் போலீஸ் குவிப்பு
    • கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாத்தியார்விளை கிரவுண்ட் தெருவில் ஒரு வீட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்று வந்தது. அங்கு ஜெபக்கூடம் கட்டும் பணி நடந்த போது பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த நிலையில் நேற்று கட்டுமான பணிக்கான பொருட்கள் வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அங்கு திரண்டனர்.

    மேலும் வாத்தியார்விளை ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வடசேரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அவர்களை சமரசம் செய்த துணை சூப்பிரண்டு நவீன்குமார், கட்டுமான பணிகள் குறித்து நாளை (இன்று)பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை பணிகள் நடக்காது என்றார். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் ஊர் தலைவர் வைகுண்டமணி தலைமையில் ஏராளமானோர் இன்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில், ஜெப கூடம் கட்ட ஏற்கனவே தடை உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு கட்டிடம் கட்டுவதற்கு தேவையான பொருட்கள் வந்துள்ளன. இந்த செயல்களால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுவதால், கட்டிட பணியை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

    ஜெபக்கூடம் கட்ட தடை கேட்டு ஏராளமானோர் திரண்டதால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. பதட்டத்தை தணிக்க போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    Next Story
    ×