என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுசீந்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி
- சக்தி வேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி யது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்.ஜி.ஓ.காலனி :
நாகர்கோவில் கோட்டார் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 34). இவர் கன்னியா குமரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
சுசீந்திரம் புறவழிச்சாலை யில் வந்து கொண்டிருந்த போது சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளை தெற்கு தெருவை சேர்ந்த சக்திவேல் (60) என்பவர் ரோட்டை கடந்து சென்றார். அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் சக்திவேல், கனகராஜ் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். சக்தி வேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டி யது. அவர் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று படு காயத்துடன் கிடந்த கனக ராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பலியான சக்திவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






