என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • மேயர் மகேஷ் எச்சரிக்கை
    • ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில், செப்.27-

    நாகர்கோவில் மாநகராட்சி 18-வது வார்டு சானல்கரை-சீயோன் தெருவில் ரூ.6 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். 31-வது வார்டு தளவாய்புரம் யூதாஸ்தெருவில் ரூ.4.25 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து 45-வது வார்டு பழவிளை தொழில்நுட்ப கல்லூரி அருகே நடந்த வரும் சாலை பணியையும், 47-வது வார்டு வல்லன் குமார விளையில் நடந்து வரும் சாலை பணிகளையும் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், சாலை பணிகளை தொடங்கும் போது சாலைகளை உடைத்து விட்டு பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை விரைவில் செய்து முடிக்கவேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பணிகள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகளிடமும், ஒப்பந்தகாரர்களிடமும் கூறினார்.

    இதனால் சிறிது பரபரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்சி லதா, கவுன்சிலர்கள் அமலசெல்வன். தங்கராஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அருள்செல்வின். பகுதி செயலாளர் ஷேக்மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
    • குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும்

    மார்த்தாண்டம் :

    தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் துணைத் தலை வர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயி ரக்க ணக்கான மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னைக்கு செல்கின்ற னர். அவர்களுக்கு வசதி யாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர், உள்ளிட்ட சில ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது.

    அதிலும் குருவாயூர், அனந்தபுரி ரெயில்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இரு க்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர் கதையாகி வருகின்றது.

    குமரி மாவட்டம் படித்த வர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் பலரும் சென்னையில் பணி செய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு முறை யும் சொந்த ஊர் வந்து, சென்னை திரும்ப ரெயிலில் டிக்கெட் கிடை ப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

    இதனால் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரெயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதே குமரி மக்களின் கோரி க்கையாகும்.

    அப்படி செய்வதன் மூலம் குமரி மாவட்ட மக்கள்,தலைநகர் சென்னைக்கு செல்ல கூடுதலாக ஒரு ரெயில் சேவை கிடைக்கும். குமரி மக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்படும்.

    தற்போது நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரம் 12 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரம் 50 நிமிடங்களாக குறைந்து ள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரெயில் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்ட மான கன்னியா குமரி வரை நீட்டிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார்.
    • உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    நாகர்கோவில் :

    பதிவு பெற்ற என்ஜி னீயர்ஸ் அசோசியேசன் சார்பில் நாகர்கோவில் செட்டிகுளம் ரோட்டரி டவுன் ஹாலில் வைத்து நவீன காங்கிரீட் தொழில் நுட்பமான பி.டி.ஸ்லாப் டெக்னாலாஜியைப் பற்றிய தொழில் நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.

    பதிவு பெற்ற என்ஜினீயர் சங்க தலைவர் என்ஜினீயர் ரஜீஷ்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பொருளாளர் கண்ணன் வரவேற்று பேசினார். என்ஜினீயர் செந்தில்குமார், சிறில் கிறிஸ்துராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக என்ஜினீயர் மாதன் பங்கேற்று பி.டி.ஸ்லாப் தொழில் நுட்பத்தை பற்றிய தனது 28 ஆண்டுகால உள் நாட்டு வெளிநாட்டு அனுபவங்களை 3 பகுதிகளாக பிரித்து வழங்கினார். மேலும் உறுப்பினர்கள் அனைவரின் சந்தேகங்களுக்கும் உரிய பதில்களை விளக்கி தெளிவு படுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் இயக்குனர் ராபர்ட் கென்னடியின் பிறந்த நாள் விழாவும் இனிப்பு வழங்கி கொண்டா டப்பட்டது. பின்னர் சிறப்பு விருந்தினர், கவுரவ விருந்தி னர்களுக்கு பொன்னாடை யும் நினைவுப் பரிசுகளும் தலைவர் ரஜீஷ்குமார் மற்றும் என்ஜினீயர்கள் சோமன் குமார் ஆகியோர் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இயக்குனர் கோவிந்தன் நன்றி கூறினார்.

    • முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் அடிக்கல் நாட்டினார்
    • மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    குளச்சல் :

    தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு குமரி மாவட்ட விசைப்படகு மீன் பிடிப்பவர் நலச்சங்கம் சார்பில் அலுவலக (குளச்சல்) வளாகத்தில் லூர்தம்மாள் சைமன் சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கோட்டார் முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார். குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், குமரி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சிக்குழு இயக்குனர் டங்ஸ்டன் மற்றும் அருட்பணியாளர்கள் ஸ்டான்லி, ஸ்டீபன், எட்வின், மரிய செல்வன், அமிர்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    லூர்தம்மாள் சைமன் மகன் பேர்ட்டி சைமன், விசைப்படகு சங்க தலைவர் வர்க்கீஸ், முன்னாள் தலைவர் பிரான்சிஸ், செயலாளர் பிராங்கிளின், பொருளாளர் அந்திரியாஸ், துணைத்தலைவர் ஆன்றனி, குளச்சல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் மரிய ரூபன், துறைமுக வியாபாரிகள் சங்க செயலாளர் ஜஸ்டஸ், மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின், மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா, நகர தலைவர் சந்திரசேகர், நெய்தல் மக்கள் இயக்க தலைவர் பெர்லின் உள்பட மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மீன் தலை சுமடு பெண்களுக்கு மீன் வியாபாரம் செய்வதற்கு மீன் பாத்திரங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    • 10 நாட்கள் நடக்கிறது
    • வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்ம ன்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவரா த்திரி திருவிழா நடைபெறு வது வழக்கம் அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவருகிற15-ந்தேதி தொடங்குகிறது. 24-ந்தேதி வரை 10நாட்கள்தொடர்ந்து நடக்கிறது

    .1-ம்திருவிழாவான15-ந்தேதி காலை 7-45 மணிக்கு மேல் 8- 45 மணிக்குள் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கும் காலை 10 மணிக்கும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    11 மணிக்கு அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 11- 30 மணிக்கு அலங்கார தீபாராதனையு ம்மதியம்12 மணிக்கு சிறப்பு அன்ன தானமும் நடக்கிறது. மாலையில் சமய சொற்பொழிவும் இரவு பாட்டுக் கச்சேரி நாதஸ்வர கச்சேரி, இன்னிசைக் கச்சேரி, பட்டிமன்றம், பரதநாட்டியம், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சி களும்நடக்கிறது.திருவிழா நாட்களில்10நாட்களும் இரவு8-30மணிக்குஅம்மன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    1-ம் திருவிழா வான15-ந்தேதிமுதல்3-ம் திருவிழா வான17-ந்தேதி வரை இரவு 8-30 மணிக்கு அம்மன் வெள்ளி க்கலை மான் வாக னத்திலும் 4-ம்திருவிழாவான18-ந்தேதி முதல்6-ம்திருவிழா வான20-ந்தேதி வரைஇரவு8-30மணிக்கு அம்மன் வெள்ளிக்கா மதேனு வாகனத்திலும்எழுந்தருளி கோவிலைச் சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.7- ம் திருவிழா வான21-ந்தேதிஇரவு8-30மணிக்கு வெள்ளி இமய கிரி வாகனத்திலும் 8-ம் திருவிழா வான 22-ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்திலும் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    9-ம் திருவிழா வான23ந்தேதி இரவு 8-30 மணிக்கு வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் எழுந்தருளி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 10-ம் திருவிழா வான24-ந் தேதி கால10-30 மணிக்குமேல்10-45மணிக்கு ள்அலங்கார மண்டபத்தில்அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலி க்கும் நிகழ்ச்சி நடக்கி றது. அதை தொடர்ந்து மதியம்1 மணிக்கு அம்மன் அலங்கார மண்டபத்தில் இருந்து வெள்ளி க்குதிரை வாகனத்தில் சிறப்பு அலங்கா ரத்துடன் மகாதானபுரம் நோக்கி பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கோவிலில் இருந்து புறப்படும் இந்த ஊர்வலம் கன்னியாகுமரி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, மெயின் ரோடு, ரெயில் நிலைய சந்திப்பு, விவேகா னந்தபுரம் சந்திப்பு, ஒற்றைபுளி சந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமத்தலிங்கபுரம், மகாதானபுரம் தங்கநாற்கர சாலை ரவுண்டானா சந்திப்பு வழியாகமாலை6மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள வேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது.

    அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மகாதானபுரம் பஞ்சலிங்க புரம் ஆகிய கிராமங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வீதி உலா முடிந்ததும் அம்மன் வெள்ளி பல்லக்கில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்கு நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில்5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டதிருக்கோவில்க ளின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன்நாயர், ஜோதிஷ்குமார், சுந்தரி நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த்மற்றும்கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவில் நிர்வாகத்தினர் பக்தர்கள் சங்கத்தினர் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.
    • புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கிள்ளியூர் :

    படந்தாலுமூடு அருகே உள்ள கள்ளிக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரெதீஷ் (வயது 35). டெம்போ டிரைவர். இவரது மனைவி சுஜிமோள், கடந்த மாதம் 2-ந் தேதி வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இதனால் ரெதீஷ், தனது 1½ வயது மகளுடன் புதுக்கடையில் உள்ள மாமனார் லாரன்ஸ் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த 23-ம் தேதி புதிய செங்கல் சூளைக்கு வேலைக்கு போவதாக ரெதீஷ் கூறி சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.இது தொடர்பாக லாரன்ஸ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள புளியன்விளையை சேர்ந்தவர் மரிய சிலுவை (வயது 65). இவர் நேற்று மதியம் அப்பகுதியில் உள்ள புளியங்குளத்தில் குளிக்கச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். அதன்பிறகு இரவு வரை அவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடினர். அப்போது புளியங்குளம் கரையில் அவரது செருப்பு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது மரியசிலுவை குளத்தில் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மரிய சிலுவை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அவரது தம்பி மரியஜார்ஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.
    • காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மகாத்மா காந்தி நினைவு மண்ட பத்தில்உள்ள காந்திஅஸ்தி கட்டத்தின் (நினைவிடம்) மீதுஆண்டு தோறும் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2-ந்தேதிஅன்று பகல் 12 மணிக்கு அபூர்வ சூரிய ஒளி விழும்.

    காந்தி நினைவு மண்டபத்தில் சூரிய ஒளி விழும் இந்த அபூர்வ நிகழ்வைக் காண அன்றைய தினம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

    அதேபோல இந்த ஆண்டு காந்தி ஜெயந்தி யானவருகிற அக்டோபர்மாதம்2-ந்தேதி பகல் 12 மணிக்கு கன்னியா குமரி காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள காந்தி அஸ்தி கட்டத்தின் மீது இந்த அபூர்வ சூரிய ஒளி விழுவதை பார்க்கலாம்.

    • சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    என்.ஜி.ஓ.காலனி :

    சுசீந்திரம் அருகே உள்ள கீழ தேரூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் முகேஷ் (வயது 25). இவர் கேட்டரிங் படிப்பு படித்து விட்டு வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயன்று வந்துள் ளார்.

    இந்த நிலையில் நேற்று இரவு முகேஷ் வீட்டிலிருந்து பொருட்கள் வாங்குவ தற்காக கடைக்கு சென்றார். கடைக்கு சென்று விட்டு அவர் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படுக்கை அறைக்கு சென்ற முகேஷ், நேரம் ஆகியும் வெளியே வராததால் பெற்றோர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது முகேஷ் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முகேஷ் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முகேஷின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது.

    இதையடுத்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் ஏராளமான திரண்டு இருந்தனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    ஆரல்வாய்மொழி :தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி

    தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்

    தோவாளையில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகத் துறை சார்பாக அஞ்சலக திருவிழா பேரணி முதுநிலை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, பொதுமக்களிடையே, மாணவ- மாணவி யரிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும். மத்திய- மாநில அரசு நலத்திட்ட உதவிகளை அஞ்சலக மூலம் பெற்றுக் கொள்கிற வளர்ச்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், தொழிலதிபர் பகவதி யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு, ஊர் தலைவர்கள் கேசவ முருகன், வேலாயுதம், ஒன்றிய அ.தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் முத்துசாமி மற்றும் அஞ்சலக அதிகாரிகள், பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    அஞ்சலக திருவிழாவை யொட்டி அஞ்சலக துறை சார்பாக வினாடி-வினா நிகழ்ச்சி, ஆதார் அட்டை திருத்தம்-புதுப்பித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெற உள்ளது. 

    • 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.
    • திருக்கொடியிறக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    இரணியல் :

    இரணியல் அருகே உள்ள கண்டன்விளையில் புகழ் பெற்ற குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் உள்ளது. 1924-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி அன்றைய ஆயர் அலோ சியஸ் மரிய பென்சிகர் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டு திறக்கப்பட்ட இந்த ஆலயத்தின் 100-வது ஆண்டு தொடக்க திருவிழா நாளை மறுநாள் தொடங்கி 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது.

    தொடக்க நாள் திருவிழா வான நாளை மறுநாள் (29-ந் தேதி) காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்புத் திருப்பலி, கல்லறை தோட்டம் மந்திரிப்பு, சிற்றுண்டி, காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குணமளிக்கும் திருப்பலி, மாலை 5 மணிக்கு திருக்கொடி பவனி, 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. மாலை 6.45 மணிக்கு குழித்துறை மறை மாவட்டம் தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் முன்னி லையில், மார்த்தாண்டம் மறை மாவட்டம் ஆயர் டாக்டர் வின்சென்ட் மார் பவுலோஸ் நூற்றாண்டு நினைவு கட்டிடத்தை அர்ச்சித்து திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொ டர்ந்து திருக்கொடியேற்றம், திருப்பலி, அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது. 2-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திரு முழுக்குத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.

    குழந்தை தெரேசாவின் பெயர் கொண்ட திருவிழா அக்டோபர் 1-ந் தேதி காலை 9 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 6.45 மணிக்கு ஆயர் அத்தனாசியுஸ் ரத்தினசாமி தலைமையில் மலர் சாற்று தல், நூற்றாண்டு நினைவுச் சின்னம் அர்ச்சிப்பு, தொ டர்ந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு தங்கத்தேர்ப்பவனி, அன்பின் விருந்தும் நடக்கி றது.

    4, 5, 6, 7 மற்றும் 8-ம் திரு விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 8-ம் நாள் விழாவில் காலை 11 மணிக்கு ஜெபமாலை மலை சிற்றாலய குண மளிக்கும் திருப்பலி நடைபெறுகிறது.

    9-ம் நாள் விழாவில் அக்டோபர் 7-ந் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்புத் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருப்பலி நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு திருத்தேர் பவனியும், 10-ம் நாள் விழாவில் 8-ந் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு பெருவிழா சிறப்புத் திருப்பலி, காலை 10 மணிக்கு மலையாள திருப்பலி, 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் தொடர்ந்து பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.

    நூற்றாண்டு தொடக்க திருவிழா ஏற்பாடுகளை பங்குப் பணியாளரும் காரங் காடு வட்டார முதல்வருமான சகாயஜஸ்டஸ், இணைப் பணியாளர்கள் ஏசுதாசன், ராபின்சன், பங்கு அருட் பணி பேரவை துணைத் தலைவர் ஜெஸ்டஸ், செய லாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் லில்லிமலர் மற்றும் பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • ஐ.டி.ஐ. முடித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    குமரி மாவட்டம் பாலபள்ளம் அருகே உள்ள வடக்கு மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது30). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பழகுனர் பணிக்காக அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ராணி தோட்டம் பணிமனைக்கு சென்றார். பின்பு அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு திரும்பினார். கள்ளியங்காட்டு தனியார் மருத்துவமனை முன்பு வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஜெயராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அநத பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து அவரது உறவினர் சுபின் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×