என் மலர்
உள்ளூர் செய்திகள்

தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
- பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஆரல்வாய்மொழி :தோவாளையில் அஞ்சலக திருவிழா பேரணி
தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்
தோவாளையில் கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகத் துறை சார்பாக அஞ்சலக திருவிழா பேரணி முதுநிலை கோட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமையில் நடை பெற்றது. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, பொதுமக்களிடையே, மாணவ- மாணவி யரிடையே சேமிப்பு பழக்கத்தை வளர்க்க வேண்டும். மத்திய- மாநில அரசு நலத்திட்ட உதவிகளை அஞ்சலக மூலம் பெற்றுக் கொள்கிற வளர்ச்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சாந்தினி பகவதியப்பன், தொழிலதிபர் பகவதி யப்பன், ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு, ஊர் தலைவர்கள் கேசவ முருகன், வேலாயுதம், ஒன்றிய அ.தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர் முத்துசாமி மற்றும் அஞ்சலக அதிகாரிகள், பொதுமக்கள் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
அஞ்சலக திருவிழாவை யொட்டி அஞ்சலக துறை சார்பாக வினாடி-வினா நிகழ்ச்சி, ஆதார் அட்டை திருத்தம்-புதுப்பித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெற உள்ளது.






