நாகர்கோவில் அருகே விபத்தில் பெயிண்டர் பலி

ஐ.டி.ஐ. முடித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் அருகே விபத்தில் பெயிண்டர் பலி
Published on

இரணியல் :

குமரி மாவட்டம் பாலபள்ளம் அருகே உள்ள வடக்கு மிடாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது30). ஐ.டி.ஐ. முடித்துவிட்டு பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பழகுனர் பணிக்காக அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று தனது மோட்டார் சைக்கிளில் ராணி தோட்டம் பணிமனைக்கு சென்றார். பின்பு அங்கிருந்து மாலையில் வீட்டுக்கு திரும்பினார். கள்ளியங்காட்டு தனியார் மருத்துவமனை முன்பு வந்தபோது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஜெயராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயராஜூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அநத பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இது குறித்து அவரது உறவினர் சுபின் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com