என் மலர்
கன்னியாகுமரி
- கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடக்கிறது
- கஜபூஜையுடன் இன்று காலை தொடங்கியது
கன்னியாகுமரி :
உலக நன்மைக்காக கன்னியாகுமரி விவேகா னந்தர்பாறை நினைவா லயம் மற்றும் கன்னியா குமரி, தூத்துக்குடி கிளை விவேகானந்த கேந்திரம் ஆகியவை இணைந்து ஸ்ரீ மகா ருத்ர சத சண்டி பெருவேள்வி யாகத்தை கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் இன்று நடத்தின.
முதலில் நெத்தி பட்டம் அணிவித்து அலங்க ரிக்கப்பட்ட யானையை வைத்து கஜ பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது. தமிழ்நாடு மற்றும் மும்பையை சேர்ந்த 64 சிவாச்சாரியார்கள் வழிபாட்டை நடத்தினார்கள்.
இன்று காலை தொடங்கிய வேள்வி பூஜை வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெள்ளி மலை ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வின் தூத்துக்குடி கிளை பொறுப்பாளர் முத்துக் குமார், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன்.
கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட தலைவர் சின்னத்தம்பி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக் குமார், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித் தங்கம், பார்க்வியூபஜார் வியாபாரிகள் சங்க செய லாளர் பகவதியப்பன், விவேகானந்த கேந்திர ஒப்பந்ததாரர் தினேஷ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறையில் இயற்கையாக வே அம்மனின் கால் பாதம் பதிந்திருந்த ஸ்ரீபாத மண்டபத்தில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சண்டி பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளையும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
- கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன
மணவாளக்குறிச்சி :
வெள்ளிச்சந்தைஅருகில் உள்ள அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி தலைவர் கிருஷ்ணசுவாமி வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் விஜிமலர் தலைமை தாங்கினார்.
கேரள பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் பிரசாரா மற்றும் பெங்களூர் புனித பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் நூர்நிகார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அருணாச்சலா பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோசப் ஜவஹர் ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரி துணை தலைவர் சுனி கிருஷ்ணசுவாமி, இயக்குநர் தருண் சுரத் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் 267 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளர்களாக சுங்கான்கடை அய்யப்பா கல்லூரி பேராசிரியை காயத்ரி, பெண்கள் கிறித்தவ கல்லூரி பேராசிரியை கிறிஸ்டி கிரேஸ், பெங்களூர் டி சேல்ஸ் கல்லூரி பேராசிரியை அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது.
- நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம்
ராஜாக்கமங்கலம் :
இந்தியா முழுவதும் என் மண் என் தேசம் எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து மண் சேகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒன்றியமாக அது டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமுதத் தோட்டம் எனும் தோட்டம் அமைக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழா மேலசங்கரன்குழி முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நேரு யுவகேந்திரம் மற்றும் அஞ்சல் துறை சார்பில் சுங்கான்கடை ஸ்ரீ அய்யப்பா கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது. நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நேரு யுவகேந்திரா இளையோர் நல அலுவலர் ஞானசந்திரன் அஞ்சல் துறை அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மேலசங்கரன்குழி பஞ்சாயத்து தலைவர் முத்து சரவணன், ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பொன் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஜெயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
- முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
திருவட்டார் :
பொன்மனை பேரூராட்சியும் முஞ்சிறை தனியார் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து பேரூராட்சி அலுவலகத்தில் இலவச சித்த மருத்துவ முகாமை நடத்தின. பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜெயமாலினி, துணை தலைவர் அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் சாந்தி, கீது அமலாபுஷ்பம், சித்த மருத்துவ டாக்டர்கள் அரவிந்த், சுனிதா, மற்றும் பயிற்சி டாக்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாமில் பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இருமல், சளி, தோல் நோய்கள், ரத்த அழுத்தம், கழுத்து, இடுப்பு, எலும்பு தேய்மானம், பெண்களுக்கான உடல் பருமன், தைராய்டு கோளாறு, மாதவிடாய் கோளாறு குழந்தைகளுக்கான கணம், உடல்மெலிவு போன்ற நோய்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன. முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியான கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
- சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போயிருந்தது
- கைது செய்யப்பட்ட சிவா இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
குளச்சல் :
குளச்சல் அருகே உள்ள கல்லுக்கூட்டம் பிள்ளவி ளையை சேர்ந்தவர் காட்சன் (வயது41). இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீசுதா (39) சென்னை திருவல்லிக்கேணி யில் அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் பிள்ளவிளை யில் உள்ள வீட்டில் யாரும் இல்லை. ஆலங் கோட்டில் உள்ள காட்சனின் மைத்துனர் சேகர், அடிக்கடி வீட்டுக்கு வந்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 9-ந் தேதி அவர் வந்த போது கதவு உடைக்கப்பட்டு கிடந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டிற்குள் சென்று பார்த்த போது, மாடியில் உள்ள 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.அதில் இருந்த சுமார் 16 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 23 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை யர்களை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன் தலைமையிலும், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலும் தனிப்படை கள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் குளச்சல் போலீசார் நேற்று செம்பொன்விளையில் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப் போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அவர் ஸ்ரீசுதா வீட்டில் புகுந்து கொள்ளையடித்தவர் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரது பெயர் சிவா (29) என்பதும் குளச்சல் வெள்ளியாகுளம் பனவிளையை சேர்ந்தவர் என்பதும், தெரிய வந்தது. அவரிடமிருந்து 4 பவுன் நகை மற்றும் மேற்கு கல் லுக்கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர் பால்மணி (46)வீட்டின் ஓடு பிரித்து திருடிய செல்போன் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சிவா இரணியல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- மாலை டீ குடித்துவிட்டு இருக்கும்போது திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார்.
- பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டாலின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இரணியல் :
பூவன்கோடு அருகே உள்ள செங்கோடி ஒட்டலிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 53). பெயிண்டர். இவருக்கு ஜெயா (49) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். ஸ்டாலின் தற்போது குடும்பத்துடன் நெய்யூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தினவிளையில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.
மாலை டீ குடித்துவிட்டு இருக்கும்போது திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டாலின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவரது மகன் லிபின்சாமுவேல் (21) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.
- கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
குழித்துறை :
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பிறேமராஜ் ரவிஷாந்தர் (வயது 54). இவர் இலங்கை அகதிகள் முகாமில் தலைவராக இருந்து வருவதோடு, அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.
இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளை கள்அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
- விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிவிக்கை பெறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சுமார் 4930 எக்டேர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகிய வற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும், இத்திட்டத் தின் மூலம் காப்பீடு செய்து பயன்பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4203 பிரீமிய மாக செலுத்தி ரூ.84 ஆயிரத்து 50 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.
கடன்பெறும் விவசாயி களுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின் பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்த லாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.
இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29-ந்தேதி கடைசி நாளாகும்.
மேலும், இது தொடர் பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவல கங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெறு மாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
- டெல்லி சிறப்பு பிரதிநிதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் எஸ்.ஏ.அசோகன். ஓ.பி.எஸ். அணி, இ.பி.எஸ். அணி என இரண்டாக பிரிந்தபோது அசோகன் ஓ.பி.எஸ். அணியில் இடம் பெற்றார். இதையடுத்து மாவட்ட செயலாளர் இல்லாமல் செயல்பட்டது. குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்த ரம் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கட்சி தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக நிய மிக்கப்பட்டுள்ள தளவாய் சுந்தரம், தமிழக அரசின் முன்னாள் சுகாதார துறை அமைச்சராகவும், பொதுப் பணி துறை அமைச்சராகவும், எம்.பி.யாகவும், டெல்லி சிறப்பு பிரதிநிதி உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குளச்சலில் 18.6 மில்லி மீட்டர் பதிவு
- குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழு வதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
குளச்சலில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. பூதப்பாண்டி, இரணியல், குருந்தன்கோடு, சுசீந்திரம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி மற்றும் அதன்புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.
நாகர்கோவிலில் காலை யிலிருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வவ் போது ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை நீடித்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், கோதையாறு மற்றும் குற்றியாறு பகுதிகளி லும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை களின் நீர்மட்டமும் வெகு வாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.74 அடியாக இருந்தது. அணைக்கு 564 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.25 அடியாக உள்ளது. அணைக்கு 214 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவ சாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம், தக்கலை பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் விதைப்பு பணி யிலும் விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர்.
- போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
- கன்னியாகுமரியில் “திடீர்” என்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமான கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் நேற்று கன்னியாகுமரியில் "திடீர்" என்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கன்னியாகுமரி கடற்கரை சாலை மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நடைபாதைகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து இன்று காலையில் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் அறிவுரையின்பேரில் பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் ஆகியோர் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதையை ஆக்கிரமித்து வைத்திருந்த 200-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
இதேபோல கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோவில் தேவசம் நிர்வாகத்துக்கு சொந்தமான முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஆக்கிரமித்து வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளும் அகற்றப்பட்டன.
குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், முன்னாள் கண்காணிப்பாளர் ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கன்னியாகுமரியில் "திடீர்" என்று ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தி.மு.க. சார்பில் மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை
- பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மரியாதை
நாகர்கோவில் :
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119 -வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு நாகர்கோவில் மாலைமலர் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் உருவப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தி.மு.க. சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் மாநகர செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகி களும் மலர்தூவி மரியாதை செலுத்தி னார்கள். குமரி மாவட்ட திருக்கோவில்கள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் முத்துராமன் மரியாதை செலுத்தினார். இதில் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மண்டல தலைவர் அன்பு கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட பொருளாளர் தங்கவேல், மாநகர செயலாளர் அனிஷ், குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் சுவாமி நாடார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






