என் மலர்
கன்னியாகுமரி
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
பூதப்பாண்டி:
தோவாளை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் திட்டுவிளையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா தலைமை தாங்கினார். தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலர் புனிதம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியினை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர்தாஸ், ஒன்றிய கவுன்சிலர் பூதலிங்கம் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. துணை செயலாளர் பார்வதி, பேரூர் செயலாளார் ஜான்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
- ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் நகரில் ஓடும் பஸ்சில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி நட வடிக்கை மேற்கொண்டு வரு கிறார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண்களிடம் பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பெண் கொள்ளை யர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பஸ்களில் கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக வெளியூர்க ளுக்கு தப்பி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் கை குழந்தைக ளுடன் டிப்டாப் உடையில் வந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் தெரி யவந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க பஸ் நிலையங்களில் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் மப்டி உடையில் பெண் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யட்டுள்ளது. மேலும் பஸ்களிலும் சந்தேகப்ப டும்படியாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. தற்பொழுது பஸ்களில் செயின் திருட்டு, செயின் மாயம் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கும்பல் கைவரிசை காட்டுகிறார்கள். இவர் களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாகர்கோவிலில் அந்த கருவி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளிலும் அபராதம் விற்பதற்கு நவீன கருவி வாங்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த கருவியின் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் வாகனங் களை கண்காணிக்க முடியும். 400 மீட்டர் தொலைவில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தில் பதிவு எண் இந்த கருவியில் பதிவாகி விடும். ஹெல்மட் அணியாமல் வருபவர்களை யும் இந்த கருவி மூலமாக கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டு பவர்களை கண்ட றிந்தும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
- நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
நாகர்கோவில்,செப்.29-
குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.
அதன்பிறகு மழை பெய்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாசன குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 586 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.
அணைக்கு 237 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்த பிறகும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருந்து வருகிறது.
அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 16.20 அடியாக இருந்தது. நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புத்தன் அணை தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்ட ரில் வருமாறு:-பேச்சிப் பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 13.4, களியல் 12, கன்னிமார் 9.4, கொட்டாரம் 11.6, குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோவில் 8.2, புத்தன் அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19, குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறையாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர்விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.
- கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர்.
- மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
குளச்சல்:
குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது52). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்துள்ளார். அந்த படகில் கடந்த 25-ந்தேதி குளச்சல் துறைமுகத்தில் இருந்து படகின் உரிமையாளரான ஆரோக்கியம், ஆன்றோ(47) உள்பட 16 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கன்னியாகுமரி கிழக்கு கடல் பகுதியான உவரி பகுதியில் அவர்களது படகு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் சூறைக்காற்று வீசியது.
இதனால் ராட்சத அலையில் சிக்கி அவர்களது படகு நடுக்கடலில் கவிழ்ந்தது. படகில் இருந்த ஆரோக்கியம் உள்ளிட்ட 16 பேரும் கடலுக்குள் விழுந்தனர். அவர்கள் அனைவரும் தத்தளித்தபடி கிடந்தனர். இதனை அந்த வழியாக மற்றொரு படகில் வந்த மீனவர்கள் பார்த்தனர்.
அவர்கள் கடலில் தத்தளித்தவர்களில் படகின் உரிமையாளர் ஆரோக்கியம் உள்பட 13 பேரை மீட்டனர். ஆன்றோ, பையாஸ், மற்றொரு ஆரோக்கியம் ஆகிய 3 மீனவர்களும் கடலில் மாயமாகினர். அவர்களை கடலில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் மீட்கப்பட்ட 13 மீனவர்களை தங்களது படகிலேயே கரைக்கு அழைத்து வந்தனர்.
கடலில் 3 மீனவர்கள் விழுந்து மாயமானது. குறித்து குளச்சல் விசைப்படகு சங்கம், மீன் வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரின் கடலோர காவல் படையினர் மற்றும் மீனவர்கள் கடலுக்குள் சென்று மாயமான மீனவர்களை தேடி வருகின்றனர்.
மாயமான மீனவர்கள் பற்றி எந்த தகவலும் தெரியாததால் அவர்களது குடும்பத்தினர் மற்றும் சக மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
- பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
- 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அருகே மேலராமன்புதூரில் உள்ள பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 3-ம் திருவிழா மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்க தலைவர் நெல்சன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் டேவிட்சன், மேலராமன்புதூர் ஊர் தலைவர் கென்னடி வாழ்த்துரை வழங்கினர். ஒய்ஸ்மேன் கிளப் குமரி மாவட்ட கவர்னர் பால்டுவின் புரூஸ், அரிமா சங்க மாவட்ட முன்னாள் ஆளுனர் ஜெஸ்டின் பால் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஆலயத்தின் பங்குத்தந்தை மரிய வின்சென்ட் சூசை ஆசியுரை வழங்க சங்கத்தின் துணை தலைவர் ஜெகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை வியாபாரிகள் சங்க பொருளாளர் சகாய பிரைட்சிங் மற்றும் ராபின் தொகுத்து வழங்கினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடைபெற்றது. நாளை மறுநாள் (30-ந்தேதி) 9-ம் திருவிழாவை முன்னிட்டு பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மேலராமன்புதூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி
நாகர்கோவில், செப்.28-
நாகர்கோவில் மாநகராட்சியில் 1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 16-வது வார்டுக்குட்பட்ட ஹனீபா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி. 31-வது வார்டுக்குட்பட்ட கார்மல் நகர், திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் எதிரே உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சோபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும்
- தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.
நாகர்கோவில் :
உலக வெறிநோய் தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் இன்று பொருட்காட்சி திடலில் நடந்தது.
தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தார். அங்கு வந்த நாய்களுக்கு டாக்டர் சன்மதி தடுப்பூசி போட்டார். தடுப்பூசி முகாம் குறித்து டாக்டர் பாரிவேந்தன் கூறியதாவது:-
ரேபிஸ் கொடிய நோய், ரேபிஸ் மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் ஒரு கொடிய நோய். தீர்க்க இதுவரையிலும் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் தாக்கிய மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் உயிரிழப்பது உறுதி. நோய் வரும் முன் பாதுகாக்க வேண்டும். நம் செல்லப்பிராணிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெறிநோய் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும். கடந்த காலங்களில் நாய் கடி பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இதனால் பாதிப்புகள் குறைந்துள்ளது.
மருத்துவமனைகளில் நாய் கடி மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளது. உலக வெறிநோய்தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தவிர மற்ற நாட்களில் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வெறிநோய் தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.
- கடந்த 26-ந்தேதி முதல் ராணி தோட்டம் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
- காத்திருப்பு போராட்டத்தை இன்றுடன் ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
நாகர்கோவில் :
ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அன்றைய தினமே பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கடந்த 26-ந்தேதி முதல் ராணி தோட்டம் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ், பொன் சோபன ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மரிய வின்சென்ட், கலா, தாமஸ், சின்னன் பிள்ளை ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்று பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் மாநில தலைவர் முரளிதரன், ஜே.சி.டி.யூ. மாவட்ட கன்வீனர் ராமச்சந்திரன் ஆகியோர் காத்திருப்பு போராட்டம் குறித்து பேசினர். வருகிற 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி காத்திருப்பு போராட்டத்தை இன்றுடன் ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.
- தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
- கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம்.
நாகர்கோவில் :
முன்னாள் முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆரல் வாய்மொழி நகர பூங்காவில் வைத்து நடைபெற்றது. தோவாளை ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை தலைமை தாங்கி னார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலா ளருமான முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம். வாழ்க்கை நெறிமுறை தேவையில்லை என ஒரு அமைச்சர் பேசி கொண்டிருக்கிறார். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கை நடத்துவதற்கு நெறிமுறை கள் தேவை. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் மகன் அந்த நெறிமுறையை அழிக்க முயற்சிக்கிறார். அவர், அவருடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.
தி.மு.க. கடந்த 2½ ஆண்டு ஆட்சியில் குமரி மாவட்டத் திற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசா யிகளுக்கு தேவையான விதை கிடைக்கவில்லை, விவசாயத்திற்கு தேவை யான தண்ணீர் இல்லை. இது மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டு கிறது.
குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அவரது பத்மநாபபுரம் பகுதியில் நான்கு பால் சொசைட்டி களை ஆரம்பித்தார். இது தேர்தல் நேரத்தில் ஆரம் பிக்கப்பட்ட பால் சொசைட்டி. இப்போது அங்கு யாரும் பால் கொடுப்பதில்லை. பாலே கொடுக்காத சொசைட்டி அங்கே தான் உள்ளது.
குமரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாவட்டத்தின் உச்ச அதிகாரி சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார், ஒழுங்கை யும் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். அவர் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் பாதுகாப்போடு கட்டிடம் கட்ட பாதுகாப்பு வழங்குகிறார். தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டனர். அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி யின் பெயர் இந்தியா. அதன் கதாநாயகன் ஸ்டாலின். அந்த கட்சியே ஊழல் கட்சி ஊழலுக்காக இரண்டு முறை தி.மு.க. டிஸ்மிஸ் செய்யப்பட் டுள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் நேரத் தின் போது அனைவருக்கும் நகைகடன் தள்ளுபடி என்று கூறி னார்கள். ஆனால் அது அனைவருக்கும் கிடைக்க வில்லை. அனைத்து மக ளிர்க்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்றனர். இப்போது அதுவும் அனைவருக்கும் இல்லை தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், தலைமை கழக பேச்சாளர் பட்டணம் (எ) நைனா முகம்மது, அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், சுந்தரம், மாவட்ட வக்கீல் அணி துணைச்செயலாளர் பரமேஸ்வரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, ஆரல் வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறினார்.
- மேயர் மகேஷ் பங்கேற்பு
- தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் பூவியூர் பெரிய நாடார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது
தென்தாமரைகுளம், செப்.28-
தென்தாமரைகுளம் பேரூர் தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் பூவியூர் பெரிய நாடார் ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் பூவியூர் காமராஜ் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு, ஒன்றிய பொருளாளர் எட்வின்ராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் மற்றும் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான வக்கீல் தாமரைபாரதி ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று பேசினர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் மகேஷ், முன்னாள் பேரூர் செயலாளர் ஆல்வின் ஜெபசிங், கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்டபெருமாள் மற்றும் தென்தாமரைகுளம் பேரூர் கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பேரூர் துணை செயலாளர் ஜெரி நன்றி கூறினார்
- 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர்
- சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சி.பி.எஸ்.இ. மேல்நிலைப்பள்ளி யில் இருந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்கள் கல்வி சுற்றுலா கேரளா சென்றனர். பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி மாணாக்கர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
மேலும் முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணக்கர்கள் உடன் சென்றனர். திருவ னந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையம், சுற்றுலாத்தலங்க ளான விழிஞ்ஞம் கலங்கரை விளக்கு, பூவாறு கடற்கரை தீவு போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்றனர்.
முன்னதாக சுற்றுலா செல்லும் தலங்கள் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் ஆசிரியரின் விளக்கவுரை யுடன் கூடிய காணொலி காட்சியும் காண்பிக்கப் பட்டது. திருவனந்தபுரம், பலவகையான ஆய்வகங் களை கொண்ட சி.எஸ்.ஐ. ஆர். அறிவியல் ஆராய்ச்சி மையமானது, தேசிய அள விலும், சர்வதேச அளவிலும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அதனை குறித்து மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளும் விதமாகவும் அமைந்திருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
- இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் மற்றும் சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கக் கட்டன.
கன்னியாகுமரி :
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் மூலம் அகஸ்தீஸ் வரம் வட்டாரத்துக்குட்பட்ட 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள வெட்டிமுறிச்சான் இசக்கியம்மன் கோவில் கலையரங்கத்தில் நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த கர்ப்பிணி பெண்களுக்கு கழுத்தில் பூமாலை அணிவிக்கப்பட்டு முகத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமம் திலகமிட்டு தலையில் மலர் தூவி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தாம்பூல தட்டு, வெற்றிலை, பாக்கு, பூமாலை, இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் மற்றும் சேலையுடன் சீர்வரிசை பொருட்கள் வழங்கக் கட்டன.
கர்ப்பிணி பெண்களுக்கு இந்த சீர்வரிசை பொருட்களை அகஸ்தீஸ்வ ரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீதா தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி முன்னிலை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா மேரி வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூராட்சி தலைவி செல்வகனி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் வக்கீல் சீனிவாசன், தி.மு.க. நிர்வாகிகள் வினோத், அகஸ்தலிங்கம், தமிழ்மாறன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகி கிங்ஸ்லி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வட்டார ஒருங்கி ணைப்பாளர் அருண் சுலைமான் நன்றி கூறினார். விழாவில் கன்னியாகுமரி, அழகப்பபுரம் மற்றும் கொட்டாரம் தொகுதி அங்கன் வாடி பணியா ளர்கள் வளைகாப்பு பாடல் பாடினார்கள். அங்கன்வாடி பணியாளர் பகவதி தேவி வாழ்த்து பாடல் பாடினார்.






