search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. ஆட்சியில் குமரியில் எந்த பணியும் நடக்கவில்லை
    X

    தி.மு.க. ஆட்சியில் குமரியில் எந்த பணியும் நடக்கவில்லை

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம்.

    நாகர்கோவில் :

    முன்னாள் முதல் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் விழா கன்னியா குமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஆரல் வாய்மொழி நகர பூங்காவில் வைத்து நடைபெற்றது. தோவாளை ஒன்றிய செயலாளர் மகராஜ பிள்ளை தலைமை தாங்கி னார். ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவரும், பேரூர் அ.தி.மு.க. செயலா ளருமான முத்துக்குமார், மாவட்ட இணைச்செயலா ளர் சாந்தினி பகவதியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தள வாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி கிழக்கு மாவட்டத்தில் கட்சியினர் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டால் 3 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறலாம். வாழ்க்கை நெறிமுறை தேவையில்லை என ஒரு அமைச்சர் பேசி கொண்டிருக்கிறார். எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் வாழ்க்கை நடத்துவதற்கு நெறிமுறை கள் தேவை. ஆனால் தமிழக முதல்-அமைச்சரின் மகன் அந்த நெறிமுறையை அழிக்க முயற்சிக்கிறார். அவர், அவருடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணம்.

    தி.மு.க. கடந்த 2½ ஆண்டு ஆட்சியில் குமரி மாவட்டத் திற்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை. விவசா யிகளுக்கு தேவையான விதை கிடைக்கவில்லை, விவசாயத்திற்கு தேவை யான தண்ணீர் இல்லை. இது மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையை காட்டு கிறது.

    குமரி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அவரது பத்மநாபபுரம் பகுதியில் நான்கு பால் சொசைட்டி களை ஆரம்பித்தார். இது தேர்தல் நேரத்தில் ஆரம் பிக்கப்பட்ட பால் சொசைட்டி. இப்போது அங்கு யாரும் பால் கொடுப்பதில்லை. பாலே கொடுக்காத சொசைட்டி அங்கே தான் உள்ளது.

    குமரியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய மாவட்டத்தின் உச்ச அதிகாரி சட்டத்தையும் கையில் எடுத்துக் கொண்டுள்ளார், ஒழுங்கை யும் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுகிறார். அவர் நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் பாதுகாப்போடு கட்டிடம் கட்ட பாதுகாப்பு வழங்குகிறார். தி.மு.க.வினர் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டனர். அவர்கள் வைத்திருக்கும் கூட்டணி யின் பெயர் இந்தியா. அதன் கதாநாயகன் ஸ்டாலின். அந்த கட்சியே ஊழல் கட்சி ஊழலுக்காக இரண்டு முறை தி.மு.க. டிஸ்மிஸ் செய்யப்பட் டுள்ளது. தி.மு.க.வினர் தேர்தல் நேரத் தின் போது அனைவருக்கும் நகைகடன் தள்ளுபடி என்று கூறி னார்கள். ஆனால் அது அனைவருக்கும் கிடைக்க வில்லை. அனைத்து மக ளிர்க்கும் உரிமைத்தொகை ஆயிரம் வழங்கப்படும் என்றனர். இப்போது அதுவும் அனைவருக்கும் இல்லை தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் மக்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கிருஷ்ணதாஸ், தலைமை கழக பேச்சாளர் பட்டணம் (எ) நைனா முகம்மது, அணி செயலாளர்கள் மனோகரன், சுகுமாரன், சுந்தரம், மாவட்ட வக்கீல் அணி துணைச்செயலாளர் பரமேஸ்வரன், தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர்நாத், ஆரல்வாய்மொழி பேரூ ராட்சி துணைத்தலைவர் சுதா பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், ஸ்ரீலிஜா, ஆரல் வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சண்முகநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×