search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக வெறிநோய் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்
    X

    உலக வெறிநோய் தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

    • செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும்
    • தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    நாகர்கோவில் :

    உலக வெறிநோய் தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இலவச வெறிநோய் தடுப்பு முகாம் இன்று பொருட்காட்சி திடலில் நடந்தது.

    தடுப்பூசி முகாமை மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் பாரிவேந்தன் முன்னிலை வகித்தார். அங்கு வந்த நாய்களுக்கு டாக்டர் சன்மதி தடுப்பூசி போட்டார். தடுப்பூசி முகாம் குறித்து டாக்டர் பாரிவேந்தன் கூறியதாவது:-

    ரேபிஸ் கொடிய நோய், ரேபிஸ் மனிதர்களையும், விலங்குகளையும் தாக்கும் ஒரு கொடிய நோய். தீர்க்க இதுவரையிலும் சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவில்லை. இந்நோய் தாக்கிய மனிதர்களோ, விலங்குகளோ 100 சதவீதம் உயிரிழப்பது உறுதி. நோய் வரும் முன் பாதுகாக்க வேண்டும். நம் செல்லப்பிராணிகளுக்கு வருடத்திற்கு ஒருமுறை வெறிநோய் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். செல்லப்பிராணிகள் பிறந்த 90 நாளில் இருந்து முதல் வெறிநோய் தடுப்பு ஊசி போட வேண்டும். கடந்த காலங்களில் நாய் கடி பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. தற்போது மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. இதனால் பாதிப்புகள் குறைந்துள்ளது.

    மருத்துவமனைகளில் நாய் கடி மருந்துகள் போதிய அளவு இருப்பு உள்ளது. உலக வெறிநோய்தினத்தையொட்டி குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதனை தவிர மற்ற நாட்களில் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் வெறிநோய் தடுப்பு ஊசிகளை செல்லப்பிராணிகளுக்கு இலவசமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ளலாம் என்றார்.

    Next Story
    ×