search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மீண்டும் சாரல் மழை
    X

    குமரியில் மீண்டும் சாரல் மழை

    • குளச்சலில் 18.6 மில்லி மீட்டர் பதிவு
    • குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டம் முழு வதும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    குளச்சலில் நேற்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 18.6 மில்லி மீட்டர் மழை பதிவா கியுள்ளது. பூதப்பாண்டி, இரணியல், குருந்தன்கோடு, சுசீந்திரம், சாமிதோப்பு, ஆரல்வாய்மொழி மற்றும் அதன்புறநகர் பகுதிகளிலும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது.

    நாகர்கோவிலில் காலை யிலிருந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரு கிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வவ் போது ஒரு சில இடங்களில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை நீடித்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், கோதையாறு மற்றும் குற்றியாறு பகுதிகளி லும் தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை களின் நீர்மட்டமும் வெகு வாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.74 அடியாக இருந்தது. அணைக்கு 564 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 439 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.25 அடியாக உள்ளது. அணைக்கு 214 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. இதனால் விவ சாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். பறக்கை, தெங்கம்புதூர், சுசீந்திரம், தக்கலை பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் விதைப்பு பணி யிலும் விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர்.

    Next Story
    ×